ஆர்கே. சுரேஷின் ‘தல கீதம்’ பாடலை வெளியிடும் பிரபலம் யார்..?

ஆர்கே. சுரேஷின் ‘தல கீதம்’ பாடலை வெளியிடும் பிரபலம் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

billa pandi rk sureshதமிழக ரசிகர்களை தாண்டியும், அஜித்துக்கு திரையுலகிலேயே பல நட்சத்திர ரசிகர்கள் உள்ளனர்.

இது தொடர்பாக பல பேட்டிகளை பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும் வில்லனுமான ஆர். கே. சுரேஷ் பில்லா பாண்டி படத்தில் அஜித் ரசிகர் மன்றத் தலைவராக நடித்து வருகிறார்.

இவருடன் வித்யா பிரதீப், இந்துஜா, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இதன் போஸ்டர் டிசைன் தற்போது வெளியாகி இருந்தாலும் அதில் டைரக்டர் பெயர் இடம் பெறவில்லை.

அடுத்த வாரம் இப்படத்தில் உள்ள தல கீதம் மற்றும் பர்ஸ்ட் லுக்கை பிரபலம் ஒருவர் வெளியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Who is going to launch Thala Geetham from Billa Pandi movie

மலேசிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் சிவகார்த்திகேயன்

மலேசிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanரெமோ படத்தை தொடர்ந்து மீண்டும் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

மோகன் ராஜா இயக்கும் வேலைக்காரன் என்ற இப்படத்தில் நயன்தாரா, ஸ்நேகா, பஹத் பாசில், விஜய் வசந்த், பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் மலேசியாவில் நடந்து வந்தது.

தற்போது இதன் சூட்டிங்கை அங்கு முடித்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எம். குமரன் S/o மகாலட்சுமி, தில்லாலங்கடி படங்களின் போது மோகன்ராஜா மலேசியா சென்றதாகவும் தற்போது 3வது முறையாக வேலைக்காரன் படத்திற்காக அங்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

சூட்டிங்கின் போது அங்குள்ள தமிழர்கள் சிவகார்த்திகேயனை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

எனவே, மலேசிய மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyans Velaikkaran shoot wrapped up in Malaysia

கர்நாடகாவில் களை கட்டும் விவேகம் பட வியாபாரம்

கர்நாடகாவில் களை கட்டும் விவேகம் பட வியாபாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivegam stillsஅண்மையில் அஜித் நடித்த விவேகம் படத்தின் டீசர் வெளியானது.

இது யூடியுப்பில் பல சாதனைகளை படைத்து வருவதால், இப்படம் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இதுவரை 13 மில்லியன் பார்வையார்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்து.

இந்நிலையில் இதன் வியாபாரமும் தற்போதே சூடு பிடிக்கவுள்ளது.

கர்நாடகாவில் விவேகம் படத்தின் உரிமையை ரூ. 5.8 கோடிக்கு பிருந்தா அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முந்தைய அஜித் படங்கள் இதுவரை ரூ. 3 கோடியை கூட தாண்டவில்லையாம்.

அதன் விவரம் வருமாறு…

  • வேதாளம்- 3 கோடி
  • என்னை அறிந்தால்- 2.25 கோடி
  • ஆரம்பம்- 1.5 கோடி
  • வீரம்- 1.5 கோடி

Ajiths Vivegam Record Business Happening in Karnataka

ரஜினிகாந்துக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் ஆதரவு..?

ரஜினிகாந்துக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் ஆதரவு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IAS Officer Sagayam Rajinikanthநடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச பேச்சு, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகை முதல் அனைத்து இணையத்தளங்களிலும் இதுபற்றிய விவாதங்களே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்கள் ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியது.

இதற்கு, நடிகர் ரஜினிகாந்திற்கு தாம் ஆதரவு அளித்ததாக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையல்ல என்றார்.

நெல்லையில் இதுகுறித்து அவர் கூறியதாவது…

என்னுடைய சமூகத்தை மாற்றக்கூடிய வகையில் நேர்மையாக செயல்பட்டு வருகிறேன்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, முக்கியமாக தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தலைமுறைகளை உருவாக்கக் கூடிய வகையில் செயல்பட்டு வருகிறோம்.

எந்த வகையிலும் அரசியலுக்கு வர நினைப்பவர்களை, ஆளுமைகளை நான் ஆதரித்து பேசியதில்லை” என்றார்.

IAS Officer Sagayam supports to Rajinikanth?

நாட்டு வெடிக்குண்டை வெடித்து, ரஜினிக்கு வீரலட்சுமி எதிர்ப்பு

நாட்டு வெடிக்குண்டை வெடித்து, ரஜினிக்கு வீரலட்சுமி எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

veeralakshmiஆண்டவன் முடிவு செய்தால் தான் அரசியலுக்கு வருவேன் என ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு பகிரங்கமாக அறிவித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியுள்ளது.

இதனால் வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்கள் ரஜினியால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன என்றே சொல்லலாம்.

இந்நிலையில், கன்னடரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வரகூடாது என தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் வீரலட்சுமி தலைமையில், இன்று மதியம் போயஸ் கார்டனிலுள்ள ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து இருந்தனர்.

எனவே, ரஜினியின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அப்போது அங்கு திரண்ட தமிழர் முன்னேற்றப்படையினர் ரஜினியின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

மேலும் கையில் வைத்திருந்த 10 நாட்டு வெடிக்குண்டுகளை வீசினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Rajini house gets more police protection due to his Political entry speech

ரஜினி-கமல்-பாகுபலி மட்டும்தான் சினிமாவா..? ஆர்.கே.செல்வமணி

ரஜினி-கமல்-பாகுபலி மட்டும்தான் சினிமாவா..? ஆர்.கே.செல்வமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Selvamaniஅண்மையில் திரையுலகிற்கும் ஜி.எஸ்.டி. வரி பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் சினிமா டிக்கெட் கட்டணம் மீது 28% வரிவிதிக்கப்படவுள்ளது.

அதாவது தற்போது உள்ள டிக்கெட் விலை 120 ரூபாயிலிருந்து 153 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.

இந்த நடைமுறை வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்த வரிவிதிப்பிற்கு ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்… மத்திய அரசு அறிவித்துள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு திரையுலகை அடியோடு சாய்க்கும் வகையில் உள்ளது.

ஏற்கெனவே திருட்டு டிவிடி உள்பட பல பிரச்சினைகளுக்கும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு தற்போது உச்சகட்ட வரிவிதிப்பை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

சினிமா என்றால் ரஜினி, கமல், ராஜமெளலி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் மட்டும்தானா?

தினம் தினம் பிழைப்புக்காக அல்லாடி கொண்டிருக்கும் 95% திரையுலக தொழிலாளிகளையும் அரசாங்கம் உணர வேண்டும்

திரையுலகில் இந்தியா முழுவதும் சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

இதை வெறும் ஒரு தொழிலாக மட்டும் நினைக்காமல், கலை என்ற கண்ணோட்டத்திலும் பார்த்து, வரிவிதிப்பு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

RK Selvamani Statement about Goods and Services tax GST on Cinema

More Articles
Follows