“விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள புதிய படம் ” சங்கத்தமிழன் “

“விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள புதிய படம் ” சங்கத்தமிழன் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் டத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் .

பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் .இவர்களுடன் இந்த படத்தில் நாசர் , சூரி ,அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு R . வேல்ராஜ் , கலை இயக்கம் M .பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு , மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் K .L மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு இன்று வெளியாகியுள்ளது .

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – விஜய் சந்தர்

தயாரிப்பு – பி.பாரதி ரெட்டி

ஒளிப்பதிவு – R.வேல்ராஜ்

படத்தொகுப்பு – பிரவீன் K.L

சண்டை பயிற்சி – அனல் அரசு

கலை இயக்குனர் – பிரபாகர்

நிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன் , குமரன் .

மக்கள் தொடர்பு -ரியாஸ் கே அஹமது.

அர்ஜூனுடன் இணைந்து ரம்ஜான் விருந்தளிக்கும் விஜய் ஆண்டனி

அர்ஜூனுடன் இணைந்து ரம்ஜான் விருந்தளிக்கும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kolaigaran movie set to release on 5th June as Ramzan specialஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து இசையமைத்து இருக்கும் படம் ‘கொலைகாரன்’.

இதில் மற்றொரு நாயகனாக அர்ஜூன் நடித்திருக்கிறார்.

நாயகியாக ஆஷிமா நர்வால் நடிக்க, நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரித்துள்ள இப்படத்தை பாப்டா தனஞ்செயன் வெளியிடுகிறார்.

முகேஷ் ஒளிப்பதிவு செய்ய ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பை செய்துள்ளார்.

இப்படத்தை உலகமெங்கும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர்.

Kolaigaran movie set to release on 5th June as Ramzan special

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-சூரி-யோகி பாபு

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-சூரி-யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Rajesh Soori and Yogi Babu team up with Sivakarthikeyan in SK16முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது ஆண்டுக்கு 2 படங்களை கொடுக்கும் முடிவில் மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

இவரது கைவசம் 5 படங்கள் உள்ள நிலையில், அதில் ஒன்றான பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இம்மானுவேல் நடிக்கவுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து முன்னணி காமெடியன்கள் யோகி பாபு மற்றும் சூரி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இவர்களுடன் பாரதிராஜா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

கனா படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளார். சூரி மற்றும் யோகி பாபு இருவரும் சிவகார்த்திகேயனுடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

Aishwarya Rajesh Soori and Yogi Babu team up with Sivakarthikeyan in SK16

தடகள போட்டியை மையபடுத்தும் படத்தில் நடிகர் ஆதி

தடகள போட்டியை மையபடுத்தும் படத்தில் நடிகர் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக வெற்றியை சுவைத்து வரும் நடிகர் ஆதியின் கதை தேர்வு பாணி அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. டிராமா, திரில்லர், ஃபேண்டஸி என அனைத்த் வகை திரைப்படங்களிலும் தனது மகத்தான நடிப்பால் நட்சத்திரமாக பிரகாசித்திருக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் தடகள விளையாட்டு அடிப்படையிலான படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

“நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்த கதாபாத்திரத்தில் ஆதி சாரை தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்கு தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம். ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் அவரை சந்தித்து ஸ்கிரிப்டை விவரிக்க முடிவு செய்தேன். அவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் இருந்தன, இது நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இறுதியாக, இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது, மிகச் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சி செய்வேன். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். அவர் முதன் முதலில் ஒளிப்பதிவு செய்த ஜீவி திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் செய்த ‘மண்ணின் மைந்தர்கள்’ சிறப்பு நிகழ்ச்சி மிகவும் பிரபலம்” என்றார்.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் இந்த படம் அதில் இருந்து விதிவிலக்கானது என்று உறுதியளிக்கிறார் இயக்குனர் பிரித்வி. “இது ‘தடகள’ விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் ஒரு படம்” என்றார்.

நாயகியாக நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார் தவிர்த்து, படத்தொகுப்பாளர் ராகுல் மற்றும் கலை இயக்குனர் வைரபாலன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன்.

பிஎம்எம் ஃபிலிம்ஸ் மற்றும் கட்ஸ் & குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

சென்னை ஐகோர்ட் உத்தரவால் ‘மெரினா புரட்சி’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்தது.!

சென்னை ஐகோர்ட் உத்தரவால் ‘மெரினா புரட்சி’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்தது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)கடந்த 2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம், மெரினா புரட்சி என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுளார். யூடியூப் ‘புட் சட்னி’ புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார். அல்ருஃபியான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் தணிக்கை அதிகாரிகளால் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டு, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு, பின் நீதிமன்ற கதவுகளை தட்டி ஒரு வழியாக சென்சார் (U) சான்றிதழ் பெற்று ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்த வலி மிகுந்த பயணம் குறித்து இயக்குனர் எம்.எஸ்.ராஜ் பல விறுவிறுப்பான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

“2017ல் மெரினாவில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். மெரினாவில் பல லட்சம் பேர் ஒன்று கூடினாலும், அவர்களை இங்கே ஒன்றுகூடும்படி தன்னெழுச்சியாக வரவழைத்தது வெறும் 18 இளைஞர்கள் தான். மற்றபடி நடிகர்களோ எந்த இயக்கத்தை, அமைப்பை சேர்ந்தவர்களோ அல்ல.. அந்த 18 பேருக்கும் என்ன நோக்கம், மக்களை எப்படி திரட்டினார்கள், வெற்றிகரமாக இந்த போராட்டத்தை எப்படி முடித்தார்கள் என இதில் கூறியுள்ளோம்.

இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்டது யார், அதன்பின்னால் உள்ள அரசியல் என்ன, இந்த போராட்டத்தை ஒடுக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதை இளைஞர்கள் சாமர்த்தியாக எப்படி முறியடித்தார்கள், கடைசி நாள் போராட்டம் வன்முறைக்களமாக மாறியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்கிற உண்மையெல்லாம் மக்களுக்கு தெரியவேண்டும் என்கிற நோக்கத்தில் தீவிரமாக புலனாய்வு செய்தே இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்..

இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணம் பீட்டா என்றும், நாட்டு மாடுகளை அழிப்பதுதான் பீட்டாவின் குறிக்கோள் என்றும் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் பீட்டாவின் நோக்கம் அதுவல்ல. பீட்டா இங்கே களமிறங்கியதே இன்னொரு தீவிரமான விஷயம் ஒன்றுக்காக. அதற்காக அவர்களுக்கு பல கோடி ரூபாய் எங்கே இருந்து கிடைத்தது..? அந்த பணத்தை கொண்டு எந்தெந்த அரசியல்வாதிகளை, எந்தெந்த நடிகர் நடிகைகளை அவர்கள் விலைக்கு வாங்கினார்கள், அதன்மூலமாக அவர்களை எப்படி தூண்டிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக இந்த தடையை வாங்கினார்கள் என்பதை இந்தப்படத்தில் புட்டுப்புட்டு வைத்துள்ளோம்

இதன் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருந்துள்ளதை இதில் அடையாளம் காட்டியுள்ளோம்…. அவரைப்பற்றிய உண்மை தெரியவரும்போது படம் பார்ப்பவர்களுக்கு இவரா அவர் என்கிற அதிர்ச்சி நிச்சயம் ஏற்படும். காரணம் ஜல்லிக்கட்டு மற்றும் பீட்டா விவகாரத்தில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே நமக்கு எதிரானவர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் நமக்கு நன்கு தெரிந்த இன்னும் பலர் இதன் பின்னனியில் இருப்பது வெளியே தெரியவே இல்லை. குறிப்பாக நமது ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டும் என கூறி முக்கிய காரணமாக இருந்தவர்கள் இரண்டு தமிழர்கள் தான்.. அவர்கள் யாரென்பதை அதை இதில் பகிரங்கப்படுத்தி இருக்கிறோம்.

இதனாலேயே இந்தப்படத்திற்கு இங்கே சென்சார் சான்றிதழ் தரவே மறுத்தார்கள். மறு சீராய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டு அங்கே படம் பார்த்த நடிகை கௌதமியும் இதேபோன்று சில காரணங்களை சொல்லி கையை விரித்துவிட்டார்.

வேறு வழியின்றி நீதிமன்றத்தின் கதவை தட்டினோம்.. இந்த வருடம் ஜனவரி 7ஆம் தேதி படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம்.

ஆனால் ஜன-17ஆம் தேதி இரண்டாவது மறு சீராய்வு குழு நடிகை ஜீவிதா தலைமையில் படத்தை பார்த்துவிட்டு சில இடங்களில் காட்சிகளை நீக்கும்படி கூறினார்கள் ..ஆனால் இந்தப்படத்தில் உண்மை அப்படியே இருக்கட்டும்.. பொய் என எதை நீங்கள் நினைக்கிறீர்களோ அதை மட்டும் நீக்கி விடுங்கள் என உறுதியாக கூறினோம். இந்தப்படத்தை பார்த்த அதிகாரிகள் மத்திய அரசு என்கிற வார்த்தை வரும் இடங்களை எல்லாம் ம்யூட் செய்ய கூறிவிட்டனர். அப்படி சுமார் 18 இடங்களில் நாங்கள் ம்யூட் செய்துள்ளோம். ஆனால் அதன்பிறகும் உடனே சான்றிதழ் அளிக்காமல் காலம் தாழ்த்தி இதோ இப்போது மே மாதம் தான் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

எந்த காரணத்தை கொண்டும் மத்திய அரசையும் பீட்டாவையும் விமர்சிக்கும் இந்தப்படத்தை வெளியாகவிடாமல் தணிக்கையின்போதே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்றுதான் சிலர் திட்டமிட்டு காய்களை நகர்த்தினார்கள். ஆனால் நீதிமன்றம் இதில் தலையிட்டதால் இனி படத்தை வெளியிடுவதை தடை செய்யமுடியாது என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது.

இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள தமிழனரான ஜேசு சுந்தர மாறன் என்பவர் இந்தப்படத்தை வெளியிடுவதற்காகவே ஜெ ஸ்டியோஸ் எனும் நிறுவனம் துவங்கி அதன் மூலமாக கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், உள்ளிட்ட 11 நாடுகளில் சிறப்புக்காட்சியாக இந்தப்படத்தை திரையிட்டார்.. அனைத்து இடங்களிலும் படம் பார்த்தவர்கள் எங்களுக்கு ஆதரவான குரலையே எழுப்பினார்கள். இங்கிலாந்தில் இந்தப்படத்தை திரையிடுவதற்கு பீட்டா எதிர்ப்பு தெரிவிததபோது, கருத்து சுதந்திரம் அனைவர்க்கும் உண்டு என கூறி அதை பிரிட்டன் அரசு ஏற்க மறுத்துவிட்டது.

அதேபோல சிங்கப்பூரில் இந்தப்படத்தை இந்தவருடம் மாட்டுப்பொங்கலன்று வெளியிட்டு விடவேண்டும் என தீவிரமாக செயல்பட்டோம்.. ஆனால் இங்குள்ளா அதிகார வர்க்கத்தினர் சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் ஒன்று கூடினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை காரணம் காட்டி திரையிட விடாமல் செய்தனர்.. அப்படியும் போராடி அன்றைய தினம் ஒரு காட்சியை திரையிட்டோம்.

எங்களுடைய நீண்ட நெடிய போராட்டத்தின் பயனாக இதோ இந்த மே மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறோம். 82 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப்படம் காலகாலத்திற்கும் உலகமே வியந்து பார்த்த நம் தமிழர்களின் மெரினா போராட்டம் குறித்து நினைவலைகளை அடுத்து வரும் தலைமுறையினர் மத்தியில் எழுப்பிக்கொண்டே இருக்கும்.. அப்படி ஒரு வரலாற்று பதிவாக இந்தப்படம் இருக்கும்.” என்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ்.

புறா பந்தயத்தை மையமாக வைத்து, நாகர்கோவில் நகரில் படமாகும் ”பைரி“

புறா பந்தயத்தை மையமாக வைத்து, நாகர்கோவில் நகரில் படமாகும் ”பைரி“

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)புறா பந்தயத்தை மையமாக வைத்து, இந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் குறித்தும் முழுமையாகப் பேசும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது ”பைரி“. குமரிமாவட்டத்தின் தலைநகரமான, நாகர்கோவிலும், அதன் சிறப்புகளும் அனைவரும் அறிந்ததே. ஆனால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில், நடந்த புறா பந்தயங்கள் பற்றிய பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இது குறித்து தெரியாமலேயே இருந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாகர்கோவில் நகரில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து, நடந்த பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், உருவாகி வரும் திரைப்படமே ‘’பைரி’’.

” நாளைய இயக்குநர் சீஸன் 5 ”-ல் கலந்து கொண்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ’’ நெடுஞ்சாலை நாய்கள் ‘’ என்ற குறும் படத்திற்காக சீஸன் 5-ன் ’’ சிறந்த வசனகர்த்தா ‘’ விருது பெற்ற ’’ ஜான் கிளாடி’’ இத்திரைப்படத்தை இயக்குகிறார். இவர் திரு. சஞ்சீவ்,’’ மற்றும் சில இயக்குநர்களிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்ச்சி பெற்று ’’ நாளைய இயக்குநர் சீஸன் 3 ‘’ – ல் முதல் பரிசு வென்ற
“ புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் ‘’ உட்பட பல குறும்படங்களை, நண்பர்களின் வளர்ச்சிக்காக தயாரித்து, 25-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த சையத் மஜீத் , இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக, மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன், நடிக்கிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் விஜி சேகர், SR.ஆனந்த குமார், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், கார்த்திக் பிரசன்னா, தினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகர்கோவில் நகரைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஏ.வி. வசந்த், படத்தொகுப்பு – R.S சதீஸ் குமார், இசை – அருண் ராஜ், பாடல்கள் – பிரான்சிஸ் கிருபா, கவித்ரன். ஆக்‌ஷன் – விக்கி, ஒலிப்பதிவு – ராஜா. நடனம் – சிவ கிரிஷ், தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன், விசு. பி.ஆர்.ஓ.– சக்தி சரவணன். இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு, நாகர்கோவிலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வேகமாக நடந்து வருகிறது.

More Articles
Follows