ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்தது ‘மகான்’ படக்குழு..; கன்னடத்தில் மட்டும் வேற டைட்டில்

ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்தது ‘மகான்’ படக்குழு..; கன்னடத்தில் மட்டும் வேற டைட்டில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – அவரது மகன் நடிகர் துருவ் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’.

இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட பகுதிளில் நடந்தது.

இப்பட டப்பிங் பணிகளும் நிறைவடைந்து ரிலீசிக்கு காத்திருந்தது.

இந்த நிலையில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘மகான்’ பிப்ரவரி 10ல் வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர்.

கன்னடத்தில் மகா புருஷா என டைட்டில் வைத்துள்ளனர்.

Vikram’s Mahaan ott release date announced

‘ரத்தம்’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்த 3 பிரபல ஹீரோயின்கள்

‘ரத்தம்’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்த 3 பிரபல ஹீரோயின்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா & ரம்யா நம்பீசன் ஆகிய மூவரும் “ரத்தம்” படத்தில் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள்னர்.

தமிழ்த் திரையுலகின் பன்முக அடையாளமாக திகழும் நடிகர் விஜய் ஆண்டனி, தனது சிறப்பான நடிப்பினாலும், தனித்துவமான திரைக்கதை தேர்வுகள் மூலம், மனம் கவரும் திரைப்படங்கள் தந்து, ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு, வர்த்தக வட்டத்திலும் லாபம் தரும் நடிகராக பாராட்டு பெற்றுள்ளார்.

அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரின் திரைத்துறை மதிப்பு அடுத்த கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. மேலும் அவரது திரைப்படங்களுக்கான வணிக வட்டமும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.

அவரது அடுத்தடுத்த பட வரிசைகள் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும் நிலையில், *ரத்தம்* என்ற தலைப்பில் திரைப்படத் இயக்குநர் CS அமுதனுடன் (தமிழ்ப்படம் புகழ்) அவர் நடிக்கும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தவிர, இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர-நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்கேற்றிருப்பது படத்திற்கு பெரும் மதிப்பை தந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் திரையுலகின் முன்னணி நடிகைகளான மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர் என்பது படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

இயக்குநர் CS அமுதன் தான் இயக்கிய ‘தமிழ்ப் படம்’ மூலம் மூலம் தென்னிந்தியத் திரைத்துறையில் ஒரு புதிய போக்கை உருவாக்கினார். அவர் இப்போது “ரத்தம்” படம் மூலம் முற்றிலும் புதிய களத்தில் அடியெடுத்து வைக்கிறார், இது ஒரு அரசியல் திரில்லர் படமாக உருவாகிறது.

இப்படத்தில் நகைச்சுவை நடிகர் ஜெகன் கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு கோபி அமர்நாத், இசையமைப்பாளர் கண்ணன், எடிட்டிங் சுரேஷ், சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார்.

Infiniti Film Ventures சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப், பங்கஜ் போரா & S.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

நடிகர் விஜய் ஆண்டனி இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற மேலும் இரண்டு படங்களிலும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ரத்தம்” படத்தின் 40% படப்பிடிப்பு ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டது. படத்தின் எஞ்சிய படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2022 கோடை கால வெளியீடாக இப்படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

Vijay Antony starrer Raththam movie new updates here

ராஜமௌலி பட இசையமைப்பாளரை புக் செய்த ‘ஜென்டில்மேன்’ குஞ்சுமோன்..; தங்கம் வென்றவர்கள் யார்?

ராஜமௌலி பட இசையமைப்பாளரை புக் செய்த ‘ஜென்டில்மேன்’ குஞ்சுமோன்..; தங்கம் வென்றவர்கள் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன். இந்நிலையில் தான் தயாரித்த ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணியில் கே டி குஞ்சுமோன் ஈடுபட்டுள்ளார்.

ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசை அமைப்பாளர் யார் என்பதை, ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக நேற்று அறிவித்திருந்தார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்ற செய்தி சோசியல் மீடியா முழுவதும் பரபரப்பானது.

இந்நிலையில் படத்தின் முதல் அறிவிப்பாக படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று அறிவித்துள்ளார்கள்.

உலகமே கொண்டாடிய பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் M.M.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இவர் இப்பொழுது, பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் S.S.ராஜ்மௌலியின் RRR படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத் தக்கது.

இந்த தங்க காசு போட்டியில் பல ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். சிலர் சரியான பதிலை பதிவிட்டிருந்தார்கள். அவர்களில் கோல்ட் காயின் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

விரைவில் இப்படத்தின் டைரக்டர் யார் என்பதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MM Keeravani to Score Music for KT Kunjumons Gentleman 2

ரியல் ஹீரோவாக ரீல் ஹீரோ..; சுதந்திர போராட்ட வீரர்களாக மாறிய சேத்தன் சீனு

ரியல் ஹீரோவாக ரீல் ஹீரோ..; சுதந்திர போராட்ட வீரர்களாக மாறிய சேத்தன் சீனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ‘கருங்காலி’ மற்றும் ‘நான் சிகப்பு மனிதன்’ புகழ் நடிகர் சேத்தன் சீனு, 12 விடுதலை வீரர்களின் வேடங்களில் பிரமாண்ட போட்டோஷூட் செய்துள்ளார்.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட நாயகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக #குடியரசுதினமான ஜனவரி 26 அன்று காலை 10.05 மணி முதல் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். ஜனவரி 23 முதல் முன்னோட்டம் வெளியிடப்படும்.

இந்த முயற்சியைப் பற்றி பேசிய சேத்தன் சீனு, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியிடம் இந்த யோசனையை பற்றி கூறியதாக தெரிவித்தார்.

“இந்த முயற்சி ஒரு திரைப்படத்திற்காக தொடங்கப்பட்டது. சில சுதந்திர போராட்ட வீரர்களை திரையில் பிரதிபலிக்க நான் விரும்பினேன், அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்.

ஆனால் விவாதத்தின் போது இந்த முயற்சியை திரைப்படமாக மாற்ற பெரும் பொருட்செலவு ஆகும் என்பதை உணர்ந்தோம். எனவே, புகைப்படம் மூலமாக பல்வேறு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இதை கொண்டு சேர்க்க எண்ணினோம். இதைத்தொடர்ந்து, 12 சுதந்திர போராட்ட வீரர்களாக கேலண்டர் போட்டோஷூட் நடத்தினோம்,” என்றார்.

போட்டோஷூட்டின் மேக்கிங் வீடியோவும் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று சேத்தன் சீனு கூறினார். இந்த திட்டத்தை முயற்சிக்க கமல்ஹாசன் தனது உத்வேகமாக இருந்தார் என்றும் சேத்தன் கூறினார்.

“அவர் செய்ததில் குறைந்தபட்சம் ஒரு சதவீதத்தையாவது என்னால் அடைய முடிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

போட்டோஷூட்டை பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர் என்றும் சேத்தன் சீனு கூறினார்.

மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் சேத்தன் சீனு. இதைத் தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

‘தொட்டால் பூமலரும்’, ‘கருங்காலி’ ஆகிய தமிழ் படங்களிலும் மற்றும் ‘ராஜு காரி கதி’, ‘மந்திரா 2’ மற்றும் ‘பெல்லிக்கு முந்து பிரேம கதா’ ஆகிய தெலுங்கு படங்களின் கதாநாயகனாகவும் சேத்தன் தோன்றியுள்ளார்.

கதாநாயகனாக இவரது அடுத்த படமான ‘வித்யார்த்தி’ (தமிழில் ‘மாணவன்’) வெளியீட்டிற்காக தயாராக உள்ளது. மேலும், நடிகை காவேரி கல்யாணி இயக்கும் பன்மொழி படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார்.

போட்டோ ஷூட்டில் சேத்தன் சீனு தோன்றியுள்ள 12 விடுதலை போராட்ட வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு

1. வி.வி.எஸ்.ஐயர்
2. அல்லூரி சீதாராம ராஜு
3. உதம் சிங்
4. வேலு தம்பி தளவா
5. வீரபாண்டிய கட்டபொம்மன்
6. சங்கொல்லி ராயண்ணா
7. மங்கள் பாண்டே
8. ராணி லட்சுமிபாய்
9. சந்திர சேகர் ஆசாத்
10. சத்ரபதி சிவாஜி
11. சுக்தேவ் தாபர்
12. விநாயக் தாமோதர் சாவர்க்கர்
போட்டோ ஷூட்டின் குழு விவரம்
இயக்குநர் – லீலா ராணி
கருத்து – சேத்தன் சீனு
ஒளிப்பதிவு – சரண் ஜே, சந்தோஷ்
படத்தொகுப்பு – அஜித் கார்த்திக்
இசை – ஏஆர் எம்எஸ்
கலை – வாசிஃப், செட் கிராஃப்ட்ஸ்
தயாரிப்பு வடிவமைப்பு – சத்யா கே.எஸ்.என்
விசுவல் எஃபெக்ட்ஸ் – ராஜு
ஒப்பனை – சிசி
ஸ்டைலிங் – லீலா மோகன்
உடைகள் – கோட்டி
தயாரிப்பு மேற்பார்வை –
மோகன் குமார்
தயாரிப்பாளர் – பத்மாவதி
டிசைன்ஸ் – நிகில் அனுதீப்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
வம்சி சேகர்
மஞ்சு கோபிநாத்
பிரத்னியா
ஹரிஷ் அரசு

One actor 12 make overs pre looks on the occasion of republic day

ஷாரூக்கானை அடுத்து அல்லு அர்ஜீனை இயக்கும் அட்லி.?

ஷாரூக்கானை அடுத்து அல்லு அர்ஜீனை இயக்கும் அட்லி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் மட்டுமில்லாமல் இந்தியளவில் கலக்கும் ஹீரோவாக வளர்ந்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ’புஷ்பா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் வேட்டை செய்து வருகிறது.

தற்போது மீண்டும் சில தியேட்டர்களில் புஷ்பா திரைப்படம் வெளியாவதே இதன் வெற்றிக்கு ஒரு சான்றாகும்.

’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அல்லுக்கு அட்லி சொன்ன ஒன்லைன் கதை பிடித்துவிட்டதால் விரைவில் முழுக்கதையும் தயாராகவுள்ளதாம்.

தமிழில் விஜய்க்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அட்லி தற்போது ஷாருக்கான் நயன்தாரா நடித்து வரும் ’கிங்’ என்ற ஹிந்திப் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Atlee to direct stylish star Allu Arjun for his next ?

பஞ்சர் ஒட்டிய மாணவியின் வாழ்க்கை பயணத்தை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

பஞ்சர் ஒட்டிய மாணவியின் வாழ்க்கை பயணத்தை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவி செய்வதை வாடிக்கையாக கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நிறைய பேர் படிப்புக்கு உதவி வருவதை நாம் அறிவோம்.

இந்த நிலையில் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பள்ளி மாணவி தேவசங்கரி.

இவர் நர்சிங் படிக்க விரும்பினாலும் இவரது குடும்ப வறுமை அதற்கு தடையாக உள்ளது.

எனவே தன் தந்தை நடத்தி வரும் சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளார் தேவசங்கரி.

இவரை பற்றிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது பார்த்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

எனவே தேவசங்கரியுடன் போனில் பேசி அவரின் படிப்புக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார்.

அதன்படி நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நர்சிங் பயிற்சி கல்லூரியில் தேவசங்கரி படிக்க ஏற்பாடு செய்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

Actor Sivakarthikeyan helps nagapattinam student for her higher studies

More Articles
Follows