தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அன்பரசன் இயக்கத்தில் அர்ஜுனுக்கு இணையாக ஆக்ஷன் களம் காணப்போகும் அந்த இளம் நாயகன் யார் என்ற கேள்விக்கு இயக்குனர் லிங்குசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார்.
நடிகர் திலகம் வம்சத்தில் இருந்து விக்ரம் பிரபு தான் அந்த நாயகன் என்று.
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் அதிரடி கூட்டணி இணையும் இப்படத்திற்கு ‘வால்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தை பிரபல விநியோகஸ்தர் சிங்காரவேலன் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் துவங்கி மதுரை கும்பகோணம் தென்காசி குற்றாலம் போன்ற இடங்களில் சூட்டிங் நடக்க உள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக வால்டர் படம் உருவாகிறது.
கதாநாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
ஒளிப்பதிவு – சதீஷ்குமார்
இசை – அர்ஜூன் ரெட்டி படப் புகழ் ரதன் இசையமக்கிறார்.
எடிட்டிங் – கோபிகிருஷ்ணா
கலை – A.R.மோகன்
நடனம் – தஸ்தா, ஷெரிப்
சண்டை பயிற்சி – விக்கி
Vikram Prabu Arjun and Jackie Shroff teams up for Walter