ஆரம்பிச்சிட்டாங்க… கமலுடன் விஜய்சேதுபதி நடிக்கும் காட்சியை படமாக்கினார் லோகேஷ்

ஆரம்பிச்சிட்டாங்க… கமலுடன் விஜய்சேதுபதி நடிக்கும் காட்சியை படமாக்கினார் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார்.

தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.

கதை, திரைக்கதை, இயக்கம் – லோகேஷ் கனகராஜ்

வசனம் – ரத்னகுமார் & லோகேஷ் கனகராஜ்

ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன்

இசை – அனிருத்

படத்தொகுப்பு – பிலோமின் ராஜ்

கலை இயக்குனர் – N.சதீஸ் குமார்

சண்டை பயிற்சியாளர் – அன்பறிவு

நிர்வாக தயாரிப்பாளர் – S. டிஸ்னி

தயாரிப்பாளர் – கமல் ஹாசன் & R.மகேந்திரன்

Vikram movie shoot kickstarts today

நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்… – கமல்ஹாசன்

நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்… – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தொழிற்சங்க பேரவை தொடக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தொழிற்சங்க பேரவையை தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசினார் கமல்ஹாசன்.

அவர் பேசியதாவது…

“தொழிலாளிகளை முதலாளிகளாக மாற்ற நம்முடைய மக்கள் நீதி மய்யத்தால்தான் முடியும்.

கண்ணதாசன் கவிதை, கலைஞர் வசனம் புரிந்த ஊரில் நான் பேசும் தமிழ் தமிழர்களுக்கு புரியாதா?

நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்” என பேசினார் கமல்ஹாசன்.

Kamal speech at his party meeting

கார்த்திக் ராஜா இசையில் நான்கு நாயகிகளுடன் இணையும் ந(நா)ட்டி

கார்த்திக் ராஜா இசையில் நான்கு நாயகிகளுடன் இணையும் ந(நா)ட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார்.

‘ட்ரீம் ஹவுஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் ‘ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன் நம்பர் .1’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படத்தின் முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார்.

கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.

ஆடை வடிவமைப்பு : டோரத்தி ஜெய்
மக்கள் தொடர்பு & நிர்வாக தயாரிப்பு: கே.எஸ்.கே செல்வா
தயாரிப்பு மேற்பார்வை: எம் எஸ் லோகநாதன்

Karthik Raja to compose music for Natty’s next film

சமந்தாவுடன் இணையும் அல்லு அர்ஜூனின் 4 வயது மகள்.; நான்காவது தலைமுறையும் சினிமாவில் நுழைந்தது

சமந்தாவுடன் இணையும் அல்லு அர்ஜூனின் 4 வயது மகள்.; நான்காவது தலைமுறையும் சினிமாவில் நுழைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அல்லு குடும்பத்தின் 4வது தலைமுறை கலைத்துறையில் தடம் பதித்துள்ளது.

அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அரா அர்ஜூன், நடிகையாக தடம் பதித்துள்ளார்.

சாகுந்தலம் எனப் பெயரிடப்பட்டுள்ள புராண படத்தில் பாரத இளவரசியாக அல்லு அரா நடிக்கிறார்.

அண்மையில் அல்லு அர்ஜூனின் இளைய மகளான அரா இளையராஜாவின் ’அஞ்சலி அஞ்சலி’ பாடலில் தோன்றி மக்கள் மத்தியில் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றார்.

தற்போது அவர் தனது நடிப்பை பெரிய திரைக்குக் கொண்டு சேர்க்க ஆயத்தமாகியிருக்கிறார்.

இதன் மூலம், இந்திய சினிமாவில் அல்லு குடும்பத்தின் நான்காவது தலைமுறையும் தடம் பதித்துவிட்டது.

இது தெலுங்கு சினிமாவில் கொண்டாட்ட நிகழ்வாக உள்ளது.

அராவின் முதல் படத்தை குணசேகர் இயக்குகிறார். 4 வயதான அரா, சமந்தா அகினேனி, தேவ் மோகன் ஆகியோருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

சமந்தா சாகுந்தலாவாகவும், தேவ் மோகன் புரு வம்ச அரசனான துஷ்யந்தாவாகவும் நடிக்கின்றனர்.

படத்தில் அதிதி பாலன், மோகன் பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். சாகுந்தலம் என்பது காளிதாசர் படைத்த காவியம்.

இது குறித்து அல்லு அர்ஜூன் தனது ட்விட்டர் பக்கத்தில்,…

“அல்லு குடும்பத்தின் 4வது தலைமுறையும் திரையில் தடம் பதிக்கும் பெருமித தருணத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

சாகுந்தலம் படத்தில் அல்லு அரா நடிக்கிறார். குணசேகருக்கு நன்றி.

நீலிமா குணா அவர்கள் என் மகளுக்கு இந்த அழகான திரைப்படத்தில் முதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி. அராவை திரையில் பார்க்கப்போவதில் மகிழ்ச்சி.

ஒட்டுமொத்த சாகுந்தலம் குழுவுக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். #AlluArha #Shakuntalam

The fourth generation of the Allu family enters cinema with Allu Arha’s debut in Shaakuntalam

Allu Arjun daughter

’96’ கோவிந்த் வசந்தா இசையில் ‘உறியடி’ விஜய்குமாரின் அடுத்த படம் ஆரம்பம்

’96’ கோவிந்த் வசந்தா இசையில் ‘உறியடி’ விஜய்குமாரின் அடுத்த படம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உறியடி, உறியடி 2 படங்களை எழுதி, இயக்கி, நடித்தவரும், சூரரை போற்று படத்திற்கு வசனம் எழுதியவருமான விஜய் குமார், நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது.

அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்க விருக்கும் இத்திரைப்படத்தை ‘ரீல் குட் பிலிம்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்கிறார்.

அறிமுக இயக்குனரான அப்பாஸ், உறியடி படத்தின் இரு பாகங்களிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ஆவார்.

விஜய் குமாருக்கு ஜோடியாக அர்ஷா எனும் நடிகை அறிமுகமாகிறார்.

இவர்களுடன் நடிகர்கள் சங்கர் தாஸ், அவினாஷ் , கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரிட்டோ இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

பட தொகுப்பு வேலைகளை கிருபாகரனும், சண்டைக்காட்சி மற்றும் கலை இயக்கத்தை உறியடி படத்தின் மூலம் அறிமுகமான விக்கி , ஏழுமலை கவனிக்கின்றனர்.

லைஃப்ஸ்டைல் ஆக்சன் டிராமா வகையில் தயாராகும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடை பெற இருக்கின்றது.

Uriyadi Vijayakumar begun shooting for his next film

0R0A0339

கருணாஸுக்கு ஜோடியாகும் ‘பிக் பாஸ்’ வின்னர்..; படத்திற்கு நேஷ்னல் லெவலில் டைட்டில் வைத்த ‘அம்பானி’ டைரக்டர்

கருணாஸுக்கு ஜோடியாகும் ‘பிக் பாஸ்’ வின்னர்..; படத்திற்கு நேஷ்னல் லெவலில் டைட்டில் வைத்த ‘அம்பானி’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆதார்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்: ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி. எஸ். ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஆதார்’.

ஆதார் (கார்டு) என்ற சொல் இந்தியா முழுக்க பிரபலமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக்பாஸ்’ புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் அருண்பாண்டியன், வத்திக்குச்சி படப்புகழ் திலீப், ‘பாகுபலி’ பட புகழ் பிரபாகர், நடிகை மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீ காந்த் தேவா இசை அமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளை கவனிக்க, படத்தொகுப்பை ஜெய் மேற்கொள்கிறார்.

கலை இயக்குனர் பொறுப்பை ஜான் பிரிட்டோ ஏற்க, இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக ஏ பி ரவி பணியாற்றுகிறார்.

‘ஆதார்’ படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் அழகம்மை மகன் சசிக்குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

Karunas and Rythvika joins for Aadhaar

BKJ_9998

More Articles
Follows