தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்களுக்கு தமிழகத்திலும் கேரளாவிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
எனவே படங்கள் மிகுந்த பொருட்செலவில் தயாராகி வருகிறது.
விரைவில் திரைக்கு வரவுள்ள பிகில் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
ஆனால் இப்படத்தை அடுத்து உருவாகவுள்ள தளபதி 64 படம் குறைந்த பொருட்செலவில் உருவாகிறதாம்.
இப்படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார்.
இதில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, சாந்தனு, மலையாள பிரபலம் வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் என மிகவும் வலுவான படக்குழு இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட உள்ளனர்.
Vijays Thalapathy 64 movie budget news updates