2020 புத்தாண்டில் தளபதி 64 பர்ஸ்ட் லுக்; மீண்டும் செல்ஃபி புள்ள

2020 புத்தாண்டில் தளபதி 64 பர்ஸ்ட் லுக்; மீண்டும் செல்ஃபி புள்ள

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay anirudhவிஜய் நடிப்பில் உருவாகும் அவரின 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வருகிறார்.

இதில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, விஜே ரம்யா, சவுந்தர்யா, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, கௌரி கிஷன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் அனிருத் இசையில் விஜய் மீண்டும் பாடல் பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே அனிருத் இசையில் கத்தி படத்தில் செல்ஃபி புள்ள பாடலைப் பாடியிருந்தார்.

இந்த படம் கமல் நடித்த நம்மவர் படத்தின் ரீமேக் என தகவல்கள் வரவே அதை படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது.

இப்பட பர்ஸ்ட் லுக் 2020 புத்தாண்டு பிறக்கும்போது வெளியாகவுள்ளது.

ச்சும்மா கிழி…. அனிருத் இசையில் ரஜினிக்கு எஸ்பிபி பாட்டு

ச்சும்மா கிழி…. அனிருத் இசையில் ரஜினிக்கு எஸ்பிபி பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini SPBமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் பட மோசன் போஸ்டர் அண்மையில் வெளியானது

இப்படத்தை அடுத்த ஆண்டு 2020 ஜனவரி 9ஆம் தேதி வெளியிட உள்ளது லைகா.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பட பாடலை டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் இதில் ரஜினியின் அறிமுக பாடலை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடி உள்ளதாகவும் அதில் முதல் வரி சும்மா கிழி என தொடங்குவதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் பேட்ட படத்திலும் ரஜினிக்காக எஸ்பிபி பாடியது குறிப்பிடத்தக்கது.

BREAKING கிளாஸும் மாஸும் சேர ஆசைப்பட்டேன்; இப்போ ஹாப்பி; எஸ்ஏசி

BREAKING கிளாஸும் மாஸும் சேர ஆசைப்பட்டேன்; இப்போ ஹாப்பி; எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am happy Class Kamal and Mass Rajini joining for politics says SACகடந்த ஞாயிறு அன்று நவம்பர் 17ஆம் தேதி கமல் 60 விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏசி கலந்துக் கொண்டு பேசினார் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

அவர் பேசும்போது அரசியலில் ரஜினியும் கமலும் இணைந்து செயல்பட வேண்டும். அதுவே தமிழகத்திற்கும் மக்களும் நல்லது என பேசியிருந்தார்.

அந்த பேச்சு தற்போது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியும் கமலும்.. (தனி தனி மீட்டிங்) தமிழக மக்கள் நலனுக்காக நாங்கள் இணைந்து செயல்படும் சூழல் ஏற்பட்டால் இணைவோம் என தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து எஸ்ஏசி அவர்கள் சற்றுமுன் பேசியதாவது…

கிளாஸும், மாஸும் சேர வேண்டும் என ஆசைப்பட்டேன், தற்போது மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

I am happy Class Kamal and Mass Rajini joining for politics says SAC

BREAKING ரஜினி-கமலுடன் விஜய் வந்தாலும் சிங்கிளாக எதிர்ப்போம்.. : அதிமுக அமைச்சர்

BREAKING ரஜினி-கமலுடன் விஜய் வந்தாலும் சிங்கிளாக எதிர்ப்போம்.. : அதிமுக அமைச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We are ready to face Actors political entry says Minister Jayakumarஇந்திய சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. கடந்த வரலாறுகளை பார்த்தால் இதை நாம் நன்கு அறிவோம்.

எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா முதல் தற்போது கமல்ஹாசன் வரை அனைவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர்.

விரைவில் ரஜினியும் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கிறார். அதுவரை சினிமாவில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

இதில் சத்தமில்லாமல் விஜய்யும் விரைவில் அரசியல் களம் காண தயாராகி வருகிறார் என்பதும் நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அதிமுக அரசு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது…

ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும். 2021லும் அதிமுக ஆட்சி தான் நடக்கும்” என தெரிவித்துள்ளார்.

We are ready to face Actors political entry says Minister Jayakumar

BREAKING சூழல் ஏற்பட்டால் நிச்சயம் கூட்டணி; ரஜினி & கமல் ஓபன் டாக்

BREAKING சூழல் ஏற்பட்டால் நிச்சயம் கூட்டணி; ரஜினி & கமல் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Kamal open talk about their alliance in Politics இன்று சென்னை விமான நிலையம் மிகுந்த பரபரப்பானது. அதற்கு முக்கிய காரணம் கமல் மற்றும் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தனர்.

மாலை 6.30 மணியளவில் சென்னை திரும்பினார் கமல். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

தமிழகத்தின் மேம்பாட்டிற்காக ரஜினியும் நானும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். என்றார்.

அதனையடுத்து மாலை 7.30 மணியளவில் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அவரும் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது… “தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்.

ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து பதில்கூற விரும்பவில்லை” என்றார்.

அதிசயத்தால் எடப்பாடியார் முதல்வர் ஆனதாக ரஜினி கூறியிருந்தார். அதற்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini and Kamal open talk about their alliance in Politics

யூ ட்யூப் டிரெண்டிங்கில் தனுஷு ராசி நேயர்கள்

யூ ட்யூப் டிரெண்டிங்கில் தனுஷு ராசி நேயர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

harish kalyanஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் “தனுஷு ராசி நேயர்களே” இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகிபாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி மில்லியன் பார்வைகளை கடந்து Youtube தளத்தில் சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தின் பத்திரைகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது…

இந்தப்படம் சுரேஷ் சாரால் தான் ஆரம்பித்தது. அவர் தான் தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தினார். கதை கேட்டு பிடித்து இந்தப்படத்தை கோகுலம் மூவிஸ் தயாரித்துள்ளார்கள். ராசியை நம்பும் ஒரு ஹீரோ அதற்கேற்ற ஹீரோயினை கலயாணம் செய்ய தேடுவதுதான் கதை. காமெடியாக குடும்பத்தோடு எல்லோரும் பார்க்ககூடிய படமாக இருக்கும். இது நடிகர் தனுஷை மையமாக வைத்து எழுதவில்லை. முதலிலேயே ஹரீஷைத்தான் அணுகினோம். எதிர்வீட்டுப் பையன் மாதிரி ஒரு ஆள் தான் ஹரீஷ் அவர் அந்தக்கால கார்த்திக்கை ஞாபகப்படுத்துவார்.

படத்தின் டிரெய்லரை பார்த்து அடல்ட் காமெடி என்கிறார்கள். ஆனால் இது கண்டிப்பாக அடல்ட் காமெடி படம் கிடையாது. நாயகியின் பெயர் கே ஆர் விஜயா ஒரு மாற்றத்திற்க்காக தான் அந்தப்பெயரை வைத்தோம். படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். டிகாங்கனா, ரெபா மோனிகா இருவரும் நாயகி ரோல் சூப்பராக பண்ணியிருக்கிறார்கள். ஜிப்ரான் இசையில் 5 பாடலகள் படத்தில் இருக்கிறது. ஒவ்வொன்றும் வேறு மாதிரி இருக்கும். படம் இறுதிகட்ட பணிகளில் இருக்கிறது. கூடிய விரைவில் திரையில் சந்திக்கிறோம் என்றார்.

More Articles
Follows