EXCLUSIVE தாய் மொழி தமிழை புறக்கணித்த தளபதி 64 படக்குழு

EXCLUSIVE தாய் மொழி தமிழை புறக்கணித்த தளபதி 64 படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Thalapathy 64 titled Masterகைதி படத்தை எடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜீடன் தன் 64வது படத்திற்காக கூட்டணி வைத்துள்ளார் தளபதி விஜய்.

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.

நாயகியாக மாளவிகா நடிக்க முக்கிய வேடத்தில் சாந்தனு நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு மாஸ்டர் என தலைப்பு வைத்து முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். அதாவது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் தலைப்பை அறிவித்தாலும் அதற்கு ஆங்கில போஸ்டரை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.

ஆளப்போறான் தமிழன், அழகிய தமிழ் மகன் என விஜய்யை அனைவரும் புகழ்ந்து வரும் நிலையில் கிட்டதட்ட 1 மணி நேரம் ஆகியும் இந்த படத்தின் தமிழ் தலைப்பு வடிவமைப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதுதான் தமிழுக்கு இவர்கள் கொடுக்கும் மதிப்பா?

பொதுவாக ஒரு படத்தலைப்பை அறிவித்தால் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் முதல் பார்வை வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijays Master team avoids Tamil language

BREAKING விஜய் & விஜய்சேதுபதியின் ‘தளபதி 64’ பர்ஸ்ட் லுக் வெளியானது

BREAKING விஜய் & விஜய்சேதுபதியின் ‘தளபதி 64’ பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Thalapathy 64 titled Masterலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு தலைப்பு வைக்கப்படவில்லை.

தற்காலிகமாக தளபதி 64 என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இதில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

படத்தின் தலைப்பு இதுதான்… மாஸ்டர்

Vijays Thalapathy 64 titled Master

நடிகர் ஆரி தனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளார்

நடிகர் ஆரி தனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari Arjunaமதிப்பிற்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள மற்றும் வானொலி நண்பர்களுக்கும் மற்றும் என் நல விரும்பிகளுக்கும் வணக்கம் நான் உங்கள் ஆரி.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் இன்றுவரை பயணிக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையும் அன்பும் தான், அதை நான் என்றும் மறவேன்.

இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன். எனவே இனிவரும் காலங்களில் தாங்கள் என் சம்பந்தமாக செய்தியை வெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அருஜுனா என்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும் ஆரி அருஜுனா..

Third Eye Entertainment சார்பில் தயாராகும் “Production No.1” படப்பிடிப்பை முடித்த இயகுநர் ரஞ்சித் ஜெயக்கொடி !

Third Eye Entertainment சார்பில் தயாராகும் “Production No.1” படப்பிடிப்பை முடித்த இயகுநர் ரஞ்சித் ஜெயக்கொடி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Renjith jeyakodi new filmஇயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி Third Eye Entertainment சார்பில் தயாராகும் பெயரிடப்படாத “Production No.1” படத்தின் படப்பிடிப்பை மிக விரைவாக முடித்திருக்கிறார். தனது தொழிலில் வித்தகராக இருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பருவ நிலை மாறுபாடுகள் கொண்ட சூழலிலும் ஊட்டியில் திட்டமிட்டபடி மிக விரைவாக படப்பிடிப்பை முடித்துள்ளார்.

இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியதாவது…

படக்குழு அனைவரின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமனாது. ஒவ்வொருவரும் தங்களது முழு ஒத்துழைப்பையும் உழைப்பையும் தந்துள்ளார்கள். ஊட்டியில் மிகவும் பனிசூழ்ந்த சிரமமான சுற்றுப்புற சூழலில் மிகுந்த கஷ்டத்திற்கு இடையே 30 நாட்கள் தொடர்ந்து படம்பிடித்தோம். கடும் பனிப்பொழிவில் நடிகர்கள் பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் இப்படப்பிடிப்பை முழுதாக முடித்து விட முடியுமா என நான் சந்தேக மிகுதியில் இருந்தேன். ஆனால் அவர்களது அர்பணிப்பும் படத்தின் மீது அவர்களது காதலும் பிரமிக்கும்படி இருந்தது. சிறுமுகச்சுழிப்பு கூட இல்லாமல் இருவரும் மிகக்கடுமையாக உழைத்தார்கள். ஒளிப்பதிவாளர் கவின் ராஜ் மிக முக்கியமாக குறிப்பிடபட வேண்டியவர். அவரும் அவரது குழுவும் இல்லையெனில் இப்படப்பிடிப்பு சாத்தியமாகியிருக்காது. எங்களுக்கு பல்வேறு தடங்கல்கள் நேர்ந்தது. ஊட்டி மாதிரியான இடத்தில் திடீரெனெ சூரிய ஒளி பிரச்சனைகள் ஏற்படும். இம்மாதிரி பல்வேறு பிரச்சனைகளில் தயாரிப்பு குழுவின் ஆதரவு அற்புதமாக இருந்தது. அனைவரது அர்பணிப்பான உழைப்பால் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிக்கப்பட்டது. என்றார்.

இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விற்க தங்களது சொந்த ஊருக்கு பயணமாகிறார்கள் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை அவர்கள் அதை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உளவியல் ரீதியில் அணுகும் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சகோதரிகளாக பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. Third Eye Entertainment சார்பில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S

2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sam CS2019-ஆம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் சாம்.சி.எஸ். பின்னணி இசையில் முன்னணியில் இருக்கும் ஓர் இசை அமைப்பாளர் அவர்.

ஒரு படத்தின் கதை எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அந்தக் கதையும் கதைக்கேற்ற காட்சிமொழியும் ரசிகனுக்கு உணர்வோடு கலப்பதற்கு பின்னணி இசை மிக முக்கியம். சென்ற ஆண்டில் தான் இசை அமைத்த எல்லாப்படங்களுக்கும் அதைத் தவறாமல் தந்திருந்தார் சாம்.சி எஸ். கைதி படத்தில் இருட்டுப் பாதையில் படரும் பதட்டத்தை இசை வழியே மிக அற்புதமாக கடத்தியிருப்பார். இஸ்பேட் ராஜாவும், இதயராணியும் படத்தில் காதலர்களை ஏங்கவிடும் அளவிற்கு கச்சிதமான இசையை வழங்கி இருப்பார். மேலும் அவர் இசை அமைத்ததில் கே13, 100, அயோக்யா ஆகிய திரில்லர் படங்களுக்கும் , தேவி 2 , ஜடா போன்ற ஹாரர் படங்களுக்கும் அதன் கதையோட்டம் கொஞ்சமும் குறையாமல் தன் இசையால் ரசிகர்களை கவனிக்க வைத்தார்! அப்படங்களின் சுவாரசியத்தை தன் இசையால் மிக அழகாக கடத்தியிருந்தார் சாம்.சி.எஸ். பின்னணி இசை போலவே அவரின் இசையில் உருவான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஒட்டுமொத்தமாக அனைத்து வகையிலும் மிகச்சிறந்த இசையை வழங்கி 2019-ஆம் ஆண்டை அருமையாக கடந்திருக்கிறார். 2020-ஆம் ஆண்டிலும் அவரது வலிமையான இசைபயணம் இன்னும் அதிக மிடுக்குடன் வீரநடை போட காத்துகொண்டிருகிறது

2019-இல் அவர் கைதி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், ஜடா, அயோக்யா, கொரில்லா, கே13, 100 , தேவி 2 ஆகிய எட்டு படங்களுக்கு இசை அமைத்து இந்த ஆண்டில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்தவர் என்ற பெருமையை தன் வசம் வைத்து கொண்டார்!

பி. வாசுவின் சந்திரமுகி 2: ரஜினிக்கு பதிலாக புதிய ஹீரோ

பி. வாசுவின் சந்திரமுகி 2: ரஜினிக்கு பதிலாக புதிய ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chandramukhi 2சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் பி. வாசு இயக்கத்தில் வெளியான படம் சந்திரமுகி.

இப்படத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்க பிரபு,ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு, விஜயகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் புதிய ரெக்கார்டுகளை இந்த படம் படைத்தது. சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, சந்திரமுகி படம் சாதனை புரிந்தது.

இந்த படம் வெளியாகி கிட்டதட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது” என்று தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில் “சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை நான் ஏற்கனவே கன்னடத்தில், ‘ஆப்த ரட்சகா’ என்ற பெயரில் இயக்கி விட்டேன். அந்த படம், கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.

தற்போது இந்த கதையை மேலும் மெருகேற்றி, ஒரு தமிழ் ஹீரோவிடமும் ஒரு பெரிய பட நிறுவனத்திடமும் சொல்லி விட்டேன். விரைவில் ‘சந்திரமுகி-2’ சூட்டிங் ஆரம்பம்.” என பி. வாசு தன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.

ரஜினி இல்லாமல் சந்திரமுகி 2 உருவாவது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியும் தற்போது புதிய இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows