தள்ளிப்போகும் ‘மாஸ்டர்’ ரிலீஸ்?; அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ட்ரீட்

தள்ளிப்போகும் ‘மாஸ்டர்’ ரிலீஸ்?; அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Master release may postponed to Ajith Birthdayலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கபட்டு இருந்தது.

ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகமெங்கும் மார்ச் 31ஆம் தேதி 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

மேலும் கொரோனா பீதியில் இருந்து மக்கள் இயல்பு திரைக்கு திரும்ப வர சில நாட்களாவது ஆகும். எனவே மாஸ்டர் ஏப்ரல் முதல் வாரம் வெளியானால் அது வசூலை பாதிக்கும் எனத் தெரிகிறது.

இதனால் மே 1ஆம் தேதி மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சொன்னது போல நண்பர் அஜித் பிறந்தநாளில் மாஸ்டர் வெளியானால் அது அஜித் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தானே.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் பட டிரைலரை ஏப்ரல் முதல் வாரம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Vijays Master release may postponed to Ajith Birthday

ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்..?

ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priya Bhavani Shankar to pair up with Lawrenceநடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட லாரன்ஸ் தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்.

இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

தற்போது இதன் சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து தமிழில் ஒரு படத்தை லாரன்ஸ் இயக்கி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறாராம்.

இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க பிரியா பவானி சங்கர் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

இது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக் படமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Priya Bhavani Shankar to pair up with Lawrence

பெப்சி-க்கு ரஜினி 50 லட்சம், சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி 10 லட்சம் உதவி

பெப்சி-க்கு ரஜினி 50 லட்சம், சிவகார்த்திகேயன் & விஜய்சேதுபதி 10 லட்சம் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Sivakarthikeyan and Vijay Sethupathi donation to Fefsi unionஉலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை தமிழகத்தில் இந்த பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்கு முன்பு சினிமா சூட்டிங் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் FEFSI பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

எனவே தொழிலாளர்களுக்கு உதவ நடிகர்கள் முன்வர வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதில் நடிகர்களில் முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி குடும்பத்தினர் இணைந்து 10 லட்ச ரூபாய் நிதியை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கினார்கள் என்பதை பார்த்தோம்.

அவர்களைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் 250 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.

இயக்குநர் மனோபாலா 10 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சமும் விஜய்சேதுபதி 10 லட்சமும் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்காக 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவர்களை அடுத்து இன்னும் நிறைய நடிகர்கள் நிதியுதவி வழங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Rajini Sivakarthikeyan and Vijay Sethupathi donation to Fefsi union

செம ஸ்மார்ட் தளபதி… இணையத்தை கலக்கும் விஜய்யின் நியூ லுக்

செம ஸ்மார்ட் தளபதி… இணையத்தை கலக்கும் விஜய்யின் நியூ லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andha Kanna Paathaakaa Song and Master Vijays new lookலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர்.

அனிருத் இசையமைத்துள்ள படம் இந்த படத்தில் விஜய்சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் சூட்டிங் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெளியான நிலையில் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ பாடல் தற்போது இதன் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியானது.

யுவன் பாடியுள்ள இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

அதில் இளமையான தோற்றத்தில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் ஸ்மார்ட்டான விஜய் இருக்கிறார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Andha Kanna Paathaakaa Song and Master Vijays new look

அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்தாய்.. போய் வா.. விசுவுக்கு சிவகுமார் இரங்கல்

அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்தாய்.. போய் வா.. விசுவுக்கு சிவகுமார் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakumar emotional statement on Actor Visus deathதயாரிப்பு, இயக்கம், நடிப்பு, வசனம், கதாசிரியர் என பன்முகம் காட்டியவர் விசு.

இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிவகுமார் அவர்கள் உருக்கமாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில்…

அன்பு விசு !டைரக்டர் கே. பாலச்சந்தரை அடுத்து நகரத்து நடுத்தர மக்களின் வாழ்க்கையை உணர்வு பூர்வமாக மேடையிலும் திரையிலும் கூர்மையான வசனங்களால் படம் பிடித்து காட்டியவர் நீங்கள்..‘சம்சாரம் அது மின்சாரம்’-‘மணல் கயிறு’- இரண்டு படங்கள் போதும். உங்களை உலகம் புரிந்து கொள்ள..‘அரட்டை அரங்கம்’- அகில உலகப் புகழை உங்களுக்கு சேர்த்தது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கெல்லாம் படையெடுத்து குக்கிராமத்தில் உள்ள ஏழை மாணவ மாணவிகளின் ஏக்கங்களை, வலிகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்து பல பேருக்கு வாழ்வில் ஒளியேற்றி வைத்தீர்கள்.

மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை ரத்தமும் சதையுமாக படைப்புக்களில் வெளிப்படுத்திய நீங்கள் தனி மனித வாழ்க்கையிலும் ஆரோக்கியத்துக்காக கடைசி நிமிடம் வரை தளராது போராடினீர்கள் . இறைவன் விதித்த மானுட வாழ்வை கடைசி மணித்துளி வரை வாழ்ந்து விட்டீர்கள்..மண்ணில் பிறந்த மனிதன் ஒரு நாள் இந்த மண்ணை விட்டு பிரிந்தே ஆகவேண்டும்.

உங்களுக்கு கடைசி மரியாதை செய்யக்கூட முடியாதபடி கொரோனா வைரஸ் எச்சரிக்கையால் பஸ் பயணம்,ரயில் பயணம், விமானப்பயணம் தவிர்க்கும்படி டாக்டர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

வெளியூர் சென்றவர்கள் வெளியூரிலும், உள்ளூரில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயும் அடைபட்டு கிடக்க 144 தடை உத்தரவு வேறு.

என் உயிர் பிரிந்தால் வெளிநாட்டிலிருக்கும் என் குழந்தைகள் இந்தியா திரும்பும் வரை நான் அனாதைப் பிணம்தான் என்று உருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள்.

அந்தக்குறை இல்லாமல் மக்கள் கடைசி தருணத்தில் உங்களோடு இருந்தார்கள் என்று அறிகிறேன். பூமியில் வாழ்ந்த காலம் வரை அர்த்தமுள்ள வாழ்வு, மக்களுக்கு பயன்படும் வாழ்வு வாழ்ந்து விட்டாய் போய் வா நண்பா ! அடுத்த பிறவியில் சந்திப்போம்” என சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Sivakumar emotional statement on Actor Visus death

சினிமா சூட்டிங் ரத்து; தொழிலாளர்களுக்கு சூர்யா-கார்த்தி 10 லட்சம் உதவி

சினிமா சூட்டிங் ரத்து; தொழிலாளர்களுக்கு சூர்யா-கார்த்தி 10 லட்சம் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Karthi and Sivakumar donate Rs 10 lakh to FEFSI உலகையை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் 2வது கட்டத்தை எட்டியுள்ளது.

அது 3ஆம் கட்டத்தை எட்டிவிடாத வகையில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் பெப்சியில் உறுப்பினர்களாக இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தார்.

மேலும் திரைத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார்.

“இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் பெப்சி ஊழியர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும்.

10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால் ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் ரூ.1250 என கணக்கு வைத்தால் ரூ.2 கோடி ஆகிறது.

உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர். நிதி அளிப்பீர் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சிவகுமார் அவரின் மகன்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

Suriya Karthi and Sivakumar donate Rs 10 lakh to FEFSI

More Articles
Follows