ரூ 200 கோடி வசூலித்த ‘மாஸ்டர்’..; கேரளாவை அடுத்து கர்நாடகாவிலும் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்

ரூ 200 கோடி வசூலித்த ‘மாஸ்டர்’..; கேரளாவை அடுத்து கர்நாடகாவிலும் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay statue karnatakaவிஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ல் ரிலீசானது.

இந்த படம் வசூல் ரீதியாக உலகளவில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

தற்போது வரை உலக அளவில் ரூ 200 கோடி வசூலித்துள்ளதாம்.

தமிழகத்தைப் போல விஜய்க்கு கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகாவிலும் ரசிகர்கள் உள்ளனர்.

JD Vs KD டபுள் மாஸ்..; மாஸ்டர் விமர்சனம்

இந்த நிலையில் முதன் முறையாக கர்நாடகாவில் விஜய்க்கு சிலை வைத்துள்ளனர்.

அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே விஜய்க்கு கேரளாவில் சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay’s Master Joins 200 Crore Club

‘பிக்பாஸ்’ புகழ் பானு ஸ்ரீ ரெட்டியின் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’

‘பிக்பாஸ்’ புகழ் பானு ஸ்ரீ ரெட்டியின் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gate movieஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.

கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர்.

2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ‘பானு ஸ்ரீ ரெட்டி’ இந்த படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர் தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மாநகரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஆதி நடிக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷபீர் அஹமது இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பியார் பிரேமா காதல் என்கிற ஹிட் படத்திற்கு படத்தொகுப்பு செய்த மணி குமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார். இக்கு, கிகோரி ஆகிய படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர் பாராத விதமாக நடக்கும் திகில் நிகழ்வு தான் படத்தின் கதை.

அதை மையப் படுத்தி முழுநீள த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இதன் படப் பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடைபெற்றது.

விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.

Bigg Boss fame Bhanu Sree Reddy’s next film is titled Gate

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 93வது படம்.. தமிழில் விஜய்யுடன் 100வது படம்..; சூப்பர் குட் பிலிம்ஸின் சூப்பர் ப்ளான்

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 93வது படம்.. தமிழில் விஜய்யுடன் 100வது படம்..; சூப்பர் குட் பிலிம்ஸின் சூப்பர் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RB chowdhuryபிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தங்களது 90வது படமாக ‘களத்தில் சந்திப்போம்’ என்ற படத்தை தயாரித்துள்ளது.

இதில் படத்தயாரிப்பாளர் ஆர்பி. சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் & மஞ்சிமா மோகன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இதுகுறித்து பிரபல ஊடகத்திற்கு ஆர்.பி.சவுத்ரி அளித்த பேட்டியில்…

“இன்றைக்கு டிரண்ட் மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்ப நாங்களும் மாறி களத்தில் சந்திப்போம் படத்தை உருவாக்கி உள்ளோம்.

இதுவரை ஆண்டுக்கு 4 படங்கள் தயாரித்தோம். இனி ஆண்டுக்கு 2 படங்கள் தயாரிக்க உள்ளோம்.

மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறோம். இதை மோகன்ராஜா இயக்க சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கின்றனர்.

இது எங்களின் 93வது படமாகும்.

விரைவில் எங்கள் நிறுவனம் 100வது படத்தை எட்டிவிடும். 100வது படத்தை பிரமாண்டமாக தயாரிப்போம்.

அதில் விஜய் நடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. விஜய் எங்கள் ஹீரோ. அவருக்கு 6 ஹிட் படங்களை கொடுத்துள்ளோம்..” என்றார்.

Super Good Films upcoming films details

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு..: ரஜினி ஆஜராகவில்லை.. வீடியோ கான்பரன்சிங்கு ரெடியாம்!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு..: ரஜினி ஆஜராகவில்லை.. வீடியோ கான்பரன்சிங்கு ரெடியாம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth sterlite protestதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தை அப்பகுதி் மக்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்களை கலைக்க துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.

இதனால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.

காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

அதன்படி 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதாம். 580 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 775 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டடுள்ளன.

மொத்தம் 56 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டு உள்ளறது.

இதில் நேற்று 11 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இன்று காலையில் ஆணையம் முன்பு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினி சார்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் இளம்பாரதி.

“விசாரணை ஆணையத்திடம் ரஜினிகாந்திடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்.

வீடியோ கான்பரன்சிங் விசாரணை நடத்த வசதியில்லாததால் சென்னையில் வைத்து விசாரணை நடத்தலாம் என்று ஆனையம் தெரிவித்துள்ளது.

எனவே 2 மாத கால அவகாசத்திற்க்கு பிறகு விசாரணை நடக்கலாம்” என தெரிவித்தார்.

Super Star seeks video conference facility to take part in Thoothukudi firing inquiry

குளோபல் பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்த ‘மாஸ்டர்’..; இந்திய சினிமாவிற்கு விஜய் தந்த பெருமை.!

குளோபல் பாக்ஸ் ஆபீஸில் முதலிடம் பிடித்த ‘மாஸ்டர்’..; இந்திய சினிமாவிற்கு விஜய் தந்த பெருமை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Vijayலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம் ‘மாஸ்டர்’.

பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்படம் வெளியான ஒரே நாளில் ரூ. 25 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் மாஸ்டர் மூன்றே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாம்.

சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்திய படம் குளோபல் பாக்ஸ் ஆபீஸில் ‘மாஸ்டர்’ முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay’s Master becomes the number one film at the worldwide box office!

ஷாரூக்கானை அடுத்து டாக்டர் பட்டம் பெற்ற பாலா..; பினராயி விஜயன் தலைமையில் பாராட்டு் விழா

ஷாரூக்கானை அடுத்து டாக்டர் பட்டம் பெற்ற பாலா..; பினராயி விஜயன் தலைமையில் பாராட்டு் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bala veeram actor தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா.

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி வரும் சிவாவின் தம்பி ஆவார் இவர்.

மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். அப்படியே இயக்குநர் அவதாரமும் எடுத்தார்.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம்’ நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் துறைகளில் அவர்கள் செய்த சாதனைகளையும் சேவைகளையும் மையப்படுத்தியே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம்..

ஆனால் நடிகர் பாலா கலைத்துறையை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு மனிதாபிமானம் மிக்க செயல்பாடுகள் என்கிற பிரிவில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது..

அதிலும் இந்த கவுரவ டாக்டர் பட்டம் இதற்கு முன்பு வட இந்தியாவில் ஷாருக்கானுக்கும், தற்போது தென்னிந்தியாவில் நடிகர் பாலாவுக்கும் என இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

தென்னிந்தியாவிலேயே மனிதாபிமானத்திற்காக டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபரான நடிகர் பாலாவை, வரும் ஜன-24ஆம் தேதி, கேரள மாநில முதல்வர் மாண்புமிகு. பினராயி விஜயன் கவுரவிக்க இருக்கிறார்.

இந்த கவுரவ டாக்டர் பட்டம் என்னவோ போகிற போக்கில் பாலாவுக்கு கொடுக்கப்பட்டுவிடவில்லை.. அவர் தொடர்ந்து மனிதாபிமானத்துடன் மேற்கொண்டு வரும் சமூக சேவை செயல்பாடுகளை எல்லாம் கடந்த ஐந்து வருடங்களாக கவனித்து, அவற்றை கணக்கில் கொண்டே, இந்த டாக்டர் பட்டத்திற்காக அவரைத் தேர்வு செய்துள்ளது ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம்.

ஆம்.. பாலாவை பொருத்தவரை பலருக்கும் ஒரு நடிகராகத்தான் தெரியும்.. ஆனால் கடந்த பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் பாலா, தனது ‘நடிகர் பாலா தொண்டு நிறுவனம்’ மூலமாக பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறார்..

அதிலும் குறிப்பாக இந்த கொரோனா தாக்கம் நிலவிய காலகட்டத்தில் சுமார் 250 குடும்பங்களைத் தத்தெடுத்துக்கொண்ட பாலா, அந்த குடும்பங்களின் ஒவ்வொரு தேவையையையும் பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்து வருகிறார்.

அடித்தட்டு மாணவர்களுக்கான கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளுதல், வீடு கட்டிக் கொடுத்தல், மருத்துவ உதவிகள் மற்றும் தேவைப்படுவோருக்கு மிக உயர்ந்த கட்டண செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு உதவி செய்வது என நடிகர் பாலா செய்துவரும் உதவிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது..

இந்த டாக்டர் பட்டம் கிடைத்தது பற்றி நடிகர் பாலா கூறும்போது, “யாருமே நூறு வயது வரை வாழப்போவது கிடையாது.. இந்த வயதில் நாலு பேருக்கு நம்மால் நல்லது பண்ண முடியும் என்பதற்கு எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன்.. இப்போது என் பொறுப்பு இன்னும் கூடுதலாகி இருப்பதாக நினைக்கிறேன்..

முன்னைவிட இன்னும் முழு வீச்சில் எனது சமூக சேவைகள் தொடரும்.. மேலும் இதை பார்க்கும்போது இதுபோன்று மனிதாபிமானத்துடன் உதவி செய்ய நினைக்கும் பலருக்கும் இது உத்வேகம் தருவதாக இருக்கும்” என்கிறார் தன்னடக்கத்துடன்.

IMG-20210119-WA0020

Veeram actor Bala gets this prestigious award

More Articles
Follows