தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்..: 50வது நாளாக மரண மாஸ் காட்டும் ‘மாஸ்டர்’

கொரோனா ஊரடங்கால் 10 மாதங்களாக மூடப்பட்ட சினிமா தியேட்டர்கள் தீபாவளியை முன்னிட்டு 2020 நவம்பர் 10ம் தேதி 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்டது.

தியேட்டர்கள் திறந்தாலும் கூட்டமே வராமல் இருந்தது.

அப்போதே லோகேஷ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ பட தியேட்டர் ரிலீசுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

2021 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி படம் வெளியானது.

50 % இருக்கை அனுமதியுடன் முதல் நாள் முதல் காட்சியிலிருந்த வசூல் வேட்டையாடினார் மாஸ்டர்.

உலகளவில் ரூ 250 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்தன.

இந்த படம் வெளியான 16 நாட்களில் ஜனவரி 29ம் தேதி ஓடிடியிலும் (அமேசான்) வெளியானது.

எனவே தியேட்டர்களுக்கு மக்கள் வர மாட்டார்கள் என்றனர். ஆனாலும் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகள் ஓடின.

தற்போது ‘மாஸ்டர்’ படம் இன்று வெற்றிகரமாக 50வது நாளை கடந்துள்ளது.

எனவே விஜய் & விஜய்சேதுபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 50வது நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.

Vijay’s master completes 50 days in theatres

Overall Rating : Not available

Latest Post