மக்களுக்காக ஓடி ஓடி உழைச்ச எங்க அப்பாவை ஒழிச்சிட்டீங்க.. – விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரம்

Vijaya prabakaran (2)ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ்நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க வேட்பாளராக மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பாஸ்கரன் என்பவர் போட்டியிடுகிறார்.

ஆரணி அருகே தே.மு.தி.க வேட்பாளர் பாஸ்கரனை ஆதரித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரம் செய்தார்.

அவர் பேசியதாவது…

“40 ஆண்டு காலம் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்தவர் எங்கள் அப்பா.

அவரை நீங்கள் (மக்கள்) எல்லாம் சேர்ந்து ஒழித்துவிட்டீர்கள்.

எனக்காவது வாய்ப்பு கொடுங்கள்.

தே.மு.தி.க வேட்பாளர் பாஸ்கரனை வெற்றி பெற வைத்தால் இங்கேயே 3 மாதம் தங்கி தொகுதிக்காக நான் பாடுபடுவேன்.

விருத்தாசலத்தில் தேமுதிக வெற்றி பெற்றால் விஜயகாந்த் தன்னுடைய சொந்த பணத்தில் நலதிட்டங்கள் செய்தது போல் என்னுடைய சொந்த பணத்தில் ஆரணி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்வேன்.”

என பேசினார் விஜயபிரபாகரன்.

Vijaya Prabakaran speech during election campaign

Overall Rating : Not available

Latest Post