ஆர்ப்பாட்டமில்லாமல் வெளியான விஜய்சேதுபதியின் 96 பர்ஸ்ட் லுக்

96 movie press meetஒரு படம் உருவாகும்போதே தலைப்பிட்டு அதற்கான பூஜை போட்டு தொடங்குவது வழக்கம்.

ஆனால் அண்மைகாலமாக சூட்டிங் நடந்துக் கொண்டே இருக்கும்.

ஒருநாள் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும். அது படத்தின் தலைப்பாக இருக்காது.

படத்தின் தலைப்பை எப்போது அறிவிக்கப் போகிறோம்? என்பதை இன்று மாலை அறிவிப்போம் என்பார்கள்.

உடனே அது டிரெண்டாகும். பின்னர் அறிவிப்பு வந்த உடன் அந்த தேதி டிரெண்டாகும்.

அதன்பின்னர் பர்ஸ்ட் லுக், டீசர் 1, டீசர் 2, டிரைலர் 1, டிரைலர் 2 என வெளியாகும்.

இதனையடுத்து சிங்கிள் ட்ராக் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியாகும். அதன் பின்னர் பாடல் வரிகள் கொண்ட வீடியோ வெளியாகும்.

படம் வெளியாகும் சில தினங்களுக்கு முன்னர் சீனிக் பீக் என்ற படத்தின் ஒரு காட்சி வெளியாகும்.

இதுதான் நவீன கால சினிமாவின் மார்கெட்டிங் தந்திரம் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் சத்தமின்றி 96 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

ஆனால் இப்படத்தின் தலைப்பு இப்படி சில டிரெண்ட்டிங்கில் இடையே வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதில் விஜய்சேதுபதி அருகில் ஒரு கேமரா இருக்கிறது. எனவே அவர் கேமராமேனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படம் பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi Trisha starring 96 first look released

Overall Rating : Not available

Latest Post