கடவுள் நம்பிக்கையில்ல.. கமல் இயக்கத்தில் நடிக்க ஆசை.; ‘விக்ரம்’ விழாவில் விஜய்சேதுபதி பேச்சு

கடவுள் நம்பிக்கையில்ல.. கமல் இயக்கத்தில் நடிக்க ஆசை.; ‘விக்ரம்’ விழாவில் விஜய்சேதுபதி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ், நரேன், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதையுடன் சிறை கைதிகளை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன.

ஜூன் 3ல் படம் தியேட்டர்களில் வர உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி பெற்றுள்ளார்.

மே 11 மாலை 7 மணிக்கு ‘விக்ரம்’ படத்தில் கமல் பாடிய ‘பத்தல…. பத்தல… ‘ என்ற பாடலின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.

இந்த பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில் இன்று மே 15ல் இசை மற்றும் டிரைலர் வெளியானது.

இந்த விழாவில் படக்குழுவினருடன் சிம்பு, உதயநிதி, ராதிகா, லிசி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் விஜய்சேதுபதி பேசியதாவது…

“பகத் பாசிலிடம் அவ்வளவு எனர்ஜி இருக்கும்.

காத்துவாக்குல 2 காதல் பட பாட்டுகள் சூப்பர் ஹிட்.. அனிருத்துக்கு நன்றி.

சிம்பு நடித்த மாநாடு பார்த்தேன். சூப்பர்.

கமல் படத்தை லோகேஷ் இயக்க ஆரம்பிக்கும் போதே எனக்கு ஒரு சீனிலாவது வாய்ப்பு கேட்டேன்.

இப்போது கமல் உடன் நடித்து விட்டேன்.

எனக்கும் கமல் சார் போல கடவுள் நம்பிக்கை இல்லலை.

எனக்கு கமல் இயக்கத்தில் நடிக்க ஆசை. அதை இயற்கை தான் நிறைவேற்ற வேண்டும்.”

இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.

Vijay Sethupathi speech at Vikram audio launch

கமலுடன் மதுரை சம்பவம்.. சிம்புவுடன் அரசியல் டாக்.; ‘விக்ரம்’ விழாவில் ரஞ்சித் பேச்சு

கமலுடன் மதுரை சம்பவம்.. சிம்புவுடன் அரசியல் டாக்.; ‘விக்ரம்’ விழாவில் ரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ், நரேன், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதையுடன் சிறை கைதிகளை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன.

ஜூன் 3ல் படம் தியேட்டர்களில் வர உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி பெற்றுள்ளார்.

மே 11 மாலை 7 மணிக்கு ‘விக்ரம்’ படத்தில் கமல் பாடிய ‘பத்தல…. பத்தல… ‘ என்ற பாடலின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.

இந்த பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில் இன்று மே 15ல் இசை மற்றும் டிரைலர் வெளியானது.

இந்த விழாவில் படக்குழுவினருடன் சிம்பு, உதயநிதி, ராதிகா, லிசி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் முதலில் பா. ரஞ்சித் பேசினார்.

“கமலின் எல்லா படங்களும் பிடிக்கும். அவருடன் விரைவில் ஒரு படம் செய்கிறேன். அது மதுரை சம்பவமாக இருக்க ஆசை.

அதுபோல சிம்பு உடன் நிறைய அரசியல் பேசியிருக்கிறேன். அவருடன் பண்ணவும் ஆசை. அதுவும் நிறைவேறும் என நம்புகிறேன்”..

இவ்வாறு பேசினார் ரஞ்சித்.

Director Ranjith speech at Vikram audio launch

இசையமைப்பாளர் இமானின் 2வது திருமணம்.; நடிகை சங்கீதா – கிரீஷ் வாழ்த்து

இசையமைப்பாளர் இமானின் 2வது திருமணம்.; நடிகை சங்கீதா – கிரீஷ் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான்.

இதுவரை 100 படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகி இருக்கிறார் இமான்.

இவருக்கும் மோனிகா என்பவருக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டதாக 2021 இறுதியில் அறிவித்தார் இமான்.

அதன்பிறகு இமான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

அதன்படி இன்று 2022 மே 15ல் இமான் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான கலை இயக்குனர் உபால்டு என்பவரின் மகள் அமலியை திருமணம் செய்துக் கொண்டார்.

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

இரு வீட்டாரது சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் நடிகை குட்டி பத்மினி, பாடகர் க்ரிஷ் மற்றும் அவரது மனைவி நடிகை சங்கீதா கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இமான் – அமலி திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Famous Music Director Imman gets married again

குழந்தைகளை நடிக்க வைத்து அவர்கள் வளர காத்திருந்து அதே படத்தில் நடிக்க வைக்கும் பெண் இயக்குனர்

குழந்தைகளை நடிக்க வைத்து அவர்கள் வளர காத்திருந்து அதே படத்தில் நடிக்க வைக்கும் பெண் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாம் நம் வாழ்க்கையில் பார்த்த பல படங்களில் நடிகர்கள் நடிகைகள் நடித்திருப்பார்கள். ஒருவேளை படத்தில் அவர்களின் சின்ன வயது கேரக்டர் வந்தால் வேறு யாரையாவது குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைப்பார்கள்.

இதுதான் இதுவரை நடந்திருக்கிறது.

ஆனால் ஒரே படத்தில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. அதுவும் ஒரு பெண் இயக்குனர் இந்த புதுமையை செய்துள்ளார்.

சில்லுக்கருப்பட்டி, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம்.

இவர் தற்போது ’மின்மினி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரங்களை வைத்து ‘மின்மினி’ படத்தை இயக்கினார். இதன் சூட்டிங் பாதி முடிவடைந்துவிட்டது.

இதன் சூட்டிங்கை பாதியில் நிறுத்தி அந்த குழந்தை நட்சத்திரங்கள் வளரும் வரை காத்திருந்துள்ளார்.

இவர்கள் தற்போது வளர்ந்து விட்டதால் இரண்டாம் பாதியை இயக்கி வருகிறராம் ஹலீதா.

இதில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்களாம்.

இவர்கள் இருவரும் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ’ராட்சசன்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

halitha shameem

Director halitha shameem new try in film industry

அஜித் பட ரீமேக்.; சல்மான் கானுடன் இணைந்த விஜய் ஹீரோயின்

அஜித் பட ரீமேக்.; சல்மான் கானுடன் இணைந்த விஜய் ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா, சந்தானம், நாசர் நடித்த ’வீரம்’ (2014) படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜீத் கேரக்டரில் சல்மான்கான் நடித்து வருகிறார்.

தமன்னா கேரக்டரில் நடிப்பது யார்? என்பது புதிராகவே இருந்தது.

இந்த நிலையில் தற்போது ‘பீஸ்ட்’ பட நாயகி பூஜா ஹெக்டே இதில் நாயகியாக நடிக்கிறாரம்.

இந்த படத்திற்கு ’கபி ஈத் கபி தீவாளி’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இதன் சூட்டிங்கில் உள்ள படத்தை பூஜா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pooja Hegde

Ajith movie remake .; Vijay film heroine teamed up with Salman Khan

விஜய்யை அடுத்து பிரபாசுடன் ஜோடி போடும் ராஷ்மிகா மந்தனா

விஜய்யை அடுத்து பிரபாசுடன் ஜோடி போடும் ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் மிக பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

‘புஷ்பா’ படத்தில் நாயகியாக நடித்து இவர் போட்ட சாமீ.. சாமீ….. ஆட்டம் மிகப்பெரிய ஹிட்டானது.

‘சுல்தான்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா.

தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய்யின் 66 வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இந்த நிலையில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

Rashmika Mandana to pair up with Prabhas after Vijay

More Articles
Follows