தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரத்னசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி, லெட்சுமி மேனன், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், கிஷோர், சிஜாரோஸ், ஹரீஷ் உத்தமன், கபீர் சிங், ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் றெக்க.
இமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது.
இதன் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் விஜய்சேதுபதி பேசும்போது…
“சதீஷ் மற்றும் ஹரீஷ் உத்தமன் இருவரும் இப்படத்தில் நடித்தற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சதீஷிடம் நடிக்க கேட்டதற்கு முதலில் கால்ஷீட் இல்லை. முடியாது என்று மறுத்துவிட்டார்.
அதன் பின்னர் இப்படத்தில் என் கேரக்டர் பெயரை சிவா என மாற்றிய பின் நடிக்க ஒப்புக் கொண்டார்.” என பேசினார்.
சதீஷின் நெருங்கிய நண்பர் நடிகர் சிவகார்த்திகேயன் என்பது தாங்கள் அறிந்ததே