தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி-கமல், அஜித்-விஜய், விக்ரம்-சூர்யா, தனுஷ்-சிம்பு ஆகிய சமகால போட்டியாளர்களை தொடர்ந்து விஜய்சேதுபதிக்கு போட்டியாக சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
ஆனால் றெக்க படத்தில் சிவகார்த்திகேயன் படத்தை வைத்து பாட்டு பாடி ஆடி, சிவாவை கொண்டாடுவதில் என்ன தவறு உள்ளது என கேட்டவர் விஜய்சேதுபதி.
இந்நிலையில் மாதவன், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள விக்ரம் வேதா படத்தின் ட்ரைலரை நாளை சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளாராம்.
இப்படத்தை புஷ்கர்-காயத்ரி இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.
இதில் காவல்துறை அதிகாரியாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் கதிர், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
வினோத் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு சாம் இசையமைத்துள்ளார்.
இப்படம் அடுத்த ஜூலை மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan will release Vikram Vedha movie trailer Starring Madhavan and Vijay Sethupathi