சிவகார்த்திகேயனை கொண்டாடுவதில் என்ன தப்பு? – விஜய்சேதுபதி ஓபன் டாக்

சிவகார்த்திகேயனை கொண்டாடுவதில் என்ன தப்பு? – விஜய்சேதுபதி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maan karate sivakarthikeyan vijay sethupathiவா டீல் படத்தை தொடர்ந்து ரத்தினசிவா இயக்கியுள்ள படம் றெக்க. இதன் பாடல்கள் அண்மையில் வெளியானது.

விஜய்சேதுபதி நடித்துள்ள இப்படத்தை வருகிற அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

அப்போது பேசிய விஜய்சேதுபதி…

“றெக்க படத்தில் ஒரு பாடல் காட்சியில் மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த ஸ்டைலான போஸ் ஒன்றை கொடுத்திருப்பேன்.

இப்படியொரு காட்சியை இயக்குனரிடம் வைக்க சொன்னது நான்தான்.

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் எல்லாரையும் நிறைய பேர் கொண்டாடிவிட்டார்கள்.

என் சமகாலத்தில் எனக்கு போட்டி என்று கூறப்படும் சிவகார்த்திகேயன் படத்தை கொண்டாடுவதில் என்ன தப்பு?

அதில் எனக்கு சந்தோஷமே. எந்த வருத்தமும் இல்லை.” என்று பேசினார்.

சென்னை வசூலில் உங்க ஹீரோ எந்த இடத்தில் இருக்கிறார்?

சென்னை வசூலில் உங்க ஹீரோ எந்த இடத்தில் இருக்கிறார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijay ajithதமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் இருந்தாலும் சென்னைக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

அதுபோல் சினிமாவிலும் இதன் பங்கு முக்கியமானது.

எனவே சினிமா படங்களின் வசூலும் கணக்கில் கொள்ளப்படும்.

இதில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் சூப்பர் ஸடார் ரஜினிதான்.

அந்த வகையில் சென்னை வசூலில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் இவர்களின் படங்கள் எது எந்த இடத்தில் உள்ளது என்பதை பார்ப்போம்….

ரஜினி : எந்திரன் : ரூ17.4 கோடி

விஜய் : துப்பாக்கி : ரூ 13.2 கோடி

அஜித் : ஆரம்பம் : ரூ 12.6 கோடி

சூர்யா : சிங்கம் 2 : ரூ 12.3 கோடி

கமல் : விஸ்வரூபம் : ரூ 12 கோடி

விக்ரம் : ஐ : ரூ 9.6 கோடி

சிவகார்த்திகேயன் : வருத்தப்படாத வாலிபர் சங்கம் : ரூ 8.5 கோடி

ஜெயம் ரவி : தனி ஒருவன் : ரூ 6.9 கோடி

தனுஷ் : வேலையில்லா பட்டதாரி : ரூ 6.8 கோடி

ஜீவா : கோ : ரூ 6.6 கோடி

சிம்பு : விண்ணை தாண்டி வருவாயா : ரூ 5.10 கோடி

விஜய் சேதுபதி : நானும் ரவுடி தான் : ரூ 4.9 கோடி

கீர்த்தி சுரேஷின் அம்மா சதீஷுக்கு மாமியார்..?

கீர்த்தி சுரேஷின் அம்மா சதீஷுக்கு மாமியார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathish and keerthy sureshமதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமாகி இன்று 25க்கும் மேற்பட்ட படங்களை முடித்துள்ளார் காமெடி நடிகர் சதீஷ்.

விஜய்யுடன் பைரவா, விஜய் சேதுபதியுடன் றெக்க, சிவகார்த்திகேயனுடன் ரெமோ உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் தற்போது தயாராக உள்ளன.

இதனிடையில், இவரும் கீர்த்தி சுரேஷும் காதலிப்பதாக சில வதந்திகள் பரவியது.

இதுகுறித்து சதீஷ் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

எனக்கும், கீர்த்திக்கும் திருமணமாகிவிட்டது என்று சிலர் கூறி பைரவா படத்தின் பூஜை போட்டோவை போட்டு விட்டனர்.

ஆனால் இதை நானோ, என் வீட்டிலோ அல்லது கீர்த்தி வீட்டிலோ சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் இதை பார்த்த கீர்த்தியின் அம்மா மேனகா எனக்கு போன் செய்து நான்தான்பா உன் மாமியார் பேசுகிறேன் என்று என்னையே கலாய்த்தார்.

கீர்த்தி என்னுடைய காதலியும் இல்லை. டார்லிங்கும் இல்லை.

அவர் எனக்கு நல்ல ப்ரெண்ட்” என்றார்.

சைத்தான் இயக்குனருடன் சிபிராஜ் இணைந்த ரகசியம்

சைத்தான் இயக்குனருடன் சிபிராஜ் இணைந்த ரகசியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sibirajஜாக்சன் துரை படத்தை தொடர்ந்து, கட்டப்பாவை காணோம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்.

இதனையடுத்து, தனது அடுத்த படத்தையும் உடனே முடிவு செய்துவிட்டார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் வளர்ந்துள்ள, சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறாராம்.

இந்த இயக்குனரை விஜய் ஆண்டனிதான் சிபாரிசு செய்தாராம்.

த்ரில்லர் கதையான இப்படத்தை சிபிராஜ், அவர்களின் குடும்ப பேனரான நாதம்பாள் பிலிம் பேக்டரி சார்பாக தயாரிக்கிறார்.

இதர கலைஞர்கள் முடிவானவுடன் நவம்பர் முதல் வாரத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என சிபிராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரஜினி-அஜித்துக்கு பிறகு ராம்கிதான்…’ ராதாரவி பேச்சு

‘ரஜினி-அஜித்துக்கு பிறகு ராம்கிதான்…’ ராதாரவி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor radha raviவாசுகி தயாரிப்பில் குமரேஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இங்கிலீஷ் படம்.

இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் இப்படத்தின் தலைப்பை ஆங்கிலப்படம் என மாற்றியுள்ளனர்.

ரிக்கோ இசையமைத்துள்ள இப்படத்தில் ராம்கி முக்கிய வேடம் ஏற்று நடிக்க, சிங்கமுத்து, லொள்ளு சபா மனோகர் நடித்துள்ளனர்.

இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ராதாரவி, ஆர்.வி. உதயகுமார், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ், இயக்குனர் பேரரசு, சிங்கமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ராதாரவி பேசும்போது….

“நான் ராம்கியுடன் சில படங்களில் நடித்துள்ளேன். மிகச் சிறந்த நடிகர். அன்று பார்த்த போலவே இப்போதும் இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் ரஜினியை பார்த்து வியப்படைவேன். அவர் ஒருவர்தான் முடி நரைத்தாலும் இளமையாக இருப்பார்.

நாம் எல்லாம் அப்படி வெளியில் போனால், என்ன வயசாயிடுச்சா? என்றுதான் கேட்பார்கள்.

ரஜினிக்கு பிறகு அஜித், அதே இளமையோடு காட்சியளிக்கிறார். இப்போது ராம்கியும் அப்படிதான் இருக்கிறார்.

இனிமேல்தான் நிரோஷா உஷாராக இருக்க வேண்டும்” என்று கலகலப்பாக பேசினார் ராதாரவி.

விஷால்-பிரசன்னா இணையும் ‘துப்பறிவாளன்’ தொடங்கியது

விஷால்-பிரசன்னா இணையும் ‘துப்பறிவாளன்’ தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thupparaivalan movie pooja stillsசுராஜ் இயக்கிய ‘கத்தி சண்டை’ படத்தை தொடர்ந்து, மிஷ்கின் இயக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இதில் விஷாலுடன் வினய், பிரசன்னா, ராகுல் ப்ரித்திசிங், கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

அரோல் கரோலி இசையமைக்க, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பாக விஷாலே தயாரிக்கிறார்.

More Articles
Follows