எவருக்கும் கிடைக்காத பெருமையை பெற்ற விஜய்சேதுபதி

actor vijay sethupathi imagesநம்ம ஹீரோ நடிச்ச படம் இந்த வருஷமாச்சும் வரும்? வராதா? என பல நடிகர்களின் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் மாதத்திற்கு ஒரு படம், போய் மாதத்திற்கு இரண்டு படம் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 19ஆம் தேதி இவரது நடிப்பில் தர்மதுரை படம் வெளியானது.

இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பிறகு (செப். 23) ஆண்டவன் கட்டளை வெளியானது.

இவை இரண்டும் இன்றும் வெற்றிகரமாக சத்யம் சினிமாஸில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது இரண்டு வார இடைவெளியில் அக்டோபர் 7ஆம் தேதி றெக்க வெளியாக உள்ளது.

இந்த படமும் சத்யம் சினிமாஸ் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

எனவே ஒரே நடிகரின் 3 படங்களும் ஒரு திரையரங்க வளாகத்தில் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமையாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை இயக்கியவர்…
...Read More
'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில்…
...Read More
ஆந்திராவில் பிரபலமான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின்…
...Read More

Latest Post