தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வித்தியாசமான கதையமைப்பில் உருவாக்கப்பட்ட ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
மணிகண்டன் இயக்கிய இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்திருந்தார் .
இதனையடுத்து மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ என்ற படத்திலும் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி மற்றும் யோகி பாபு நடித்திருந்தனர்.
இந்த நிலையில் விரைவில் 3வது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளது.
ஆனால் இந்த முறை இது ஒரு திரைப்படமாக உருவாகாமல் வெப் தொடராக உருவாக்க உள்ளதாம்.
எனவே விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.