தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள படம் சங்கமித்ரா.
ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்ட உள்ளதாக கூறப்படும் இப்படத்தை சுந்தர் சி, இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 3 மொழிகளில் இப்படம் தயாராகிறது.
இந்நிலையில் இப்படத்தில் விஜய் நடிக்கவேண்டும் என்று சுந்தர்.சி விருப்பம் தெரிவித்திருந்தாராம்.
ஆனால் பெரிய பட்ஜெட் என்பதால் எட்டு மாதம் கால்ஷீட் கொடுக்க வேண்டியிருப்பதால் விஜய் நடிக்க மறுத்து விட்டாராம்.
எனவே வேறு ஒரு முன்னணி நடிகருக்கு வலை வீசி வருகிறார் சுந்தர் சி.