தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் மகன் நடிகர் விஜய்யை எப்படியாவது அரசியலில் நுழைய வைத்து அவரை தமிழ்நாட்டின் முதல்வராக்கி விட வேண்டும் என்ற சிந்தனையிலே பணியாற்றி வந்தார் எஸ்ஏ சந்திரசேகர்.
அதன்படியே 90களிலேயே விஜய் மக்கள் இயக்கத்தை அறிவித்தார்.
மேலும் அடிக்கடி விஜய்யின் அரசியல் பயணம் குறித்து அவ்வப்போது மறைமுகமாக பேசி வருவார்.
மேலும் விஜய் மக்கள் இயக்கமும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறது.
இது தொடர்பாக அடிக்கடி நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் விரைவில் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் ரீதியான கட்சியாக தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக பழம்பெரும் அரசியல் பிரமுகர் பழ.கருப்பையாவை விஜய் ஆலோசனை செய்ததுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தில் அவரை எதிர்க்கும் அரசியல்வாதியாக பழ.கருப்பையா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Vijay Makkal Iyakkam as a political party.; Vijay consults with ‘Sarkar’ politician