‘மாஸ்டர்’ படம் லீக்.. சோனியால் வந்த சோதனை..; லோகேஷ் அப்செட்.. திரையுலகினர் ஆதரவு..!

Masterலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மாஸ்டர்.

கடந்தாண்டு 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா வைரஸ் ஊரடங்கு & அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.

இந்நிலையில் தற்போது 2021-ம் ஆண்டு அதாவது நாளை பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

இதனிடையில் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன.

வாட்ஸ்அப் உட்பட பல சமூக வலைதளங்களிலும் அவை பரவியது.

இது குறித்து ட்வீட் செய்துள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators..

.”மாஸ்டரை உங்களிடம் எடுத்துவர ஒன்றரை வருடங்கள் உழைத்திருக்கிறோம். எல்லாம் நீங்கள் திரையரங்குகளில் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். கசிந்த காட்சிகளை தயவுசெய்து பகிராதீர்கள். அனைவருக்கும் நன்றி. ஒரு நாள்தான், அதன் பின் மாஸ்டர் உங்கள் சொத்து!” என்று ட்வீட் செய்துள்ளார் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இவர்களுடன் மாளவிகா & மாஸ்டர் படக்குழுவினர், திரையுலகினர் & இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இன்டர்நடெ் காட்சிகளை பகிராமல் புகார் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து லீக் செய்த நபர் குறித்த தகவல்கள் வந்தன.

சோனி டிஜிட்டல் நிறுவனத்திடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

காட்சிகள் லீக் தொடர்பாக தனியார் நிறுவனம், ஊழியர் மீது புகாரளிக்க தயாரிப்பாளர் லலித்குமார் முடிவு செய்துள்ளார்.

அந்த நபரை கண்டுபிடிக்க ட்விட்டர் நிறுவனமும் படக்குழுவுக்கு உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay in Master leaked culprit found

Overall Rating : Not available

Latest Post