விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இத்தனை ட்ரீட்டா..?

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இத்தனை ட்ரீட்டா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay artஅட்லி இயக்க, ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது விஜய் 61 படம்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இம்மாத இறுதியில் அல்லது விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்தாண்டு விஜய் பிறந்தநாளை இப்போதே 45 நாட்கள் உள்ளன, 40 நாட்கள் உள்ளன என விஜய் ரசிகர்கள் டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளில், ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்த விஜய் 62 படத்தின் அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிகிறது.

Vijay fans may have may treats on his Birthday

பெல்ஜியத்தில் 100 நாட்கள்… தனுஷின் ஹாலிவுட் பயணத் தகவல்கள்

பெல்ஜியத்தில் 100 நாட்கள்… தனுஷின் ஹாலிவுட் பயணத் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush fakirகோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து தயாரிப்பாளராக மல்லுவுட்டில் களம் இறங்கியுள்ளார் தனுஷ்.

இதனையடுத்து முதன்முறையாக ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

’தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த பகிர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்குகிறது.

இதற்காக பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸ் சென்றுள்ளார் தனுஷ்.

இதன் ஷூட்டிங் முதலில் மும்பையில் நடப்பதாக இருந்தது.

ஆனால் தற்போது லொகேஷன் பிரஸ்சல்சுக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிட்டதட்ட அங்கு 100 நாட்கள் படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.

இரானிய இயக்குனர் மர்ஜான் சத்ரபி படத்தை இயக்க, தனுஷ் ஜோடியாக ‘தி ஆர்டிஸ்ட்’ படத்தில் நடித்த பெரினீஸ் பெஜோ நடிக்கிறார்.

இவர்களுடன் எரில் மொரியார்ட்டி, பர்கத் அப்டி, இந்தி நடிகை ’பண்டிட் குயின்’ சீமா பிஸ்வாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

Dhanush fly to Belgium for ollywood movie shoot The Extraordinary Journey of the Fakir

படம் தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குனர் யார் தெரியுமா..?

படம் தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குனர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irudhu suttru sudhaமோகன்ராஜ் இயக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

அதன்பின்னர் இன்று நேற்று நாளை படப்புகழ் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த இரு படங்களை முடித்துவிட்டு ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் அண்மையில் இப்படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிப்பதாக தகவல்கள் வந்தன.

ஒருவேளை இருவரும் இணைந்து தயாரிக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Sivakarthikeyan will produce the movie which will be directed by Irudhi Suttru Sudha Kongara

‘ரசிகர்கள் ஏமாற வேண்டாம்…’ ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு

‘ரசிகர்கள் ஏமாற வேண்டாம்…’ ரஜினி ரசிகர் மன்றம் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth fans association announcement regarding fans meetசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எட்டு ஆண்டுகளுக்கு பின் தன் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவிருக்கிறார்.

இந்த சந்திப்பானது வரும் மே 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் மாவட்டந்தோறும் உள்ள ரசிகர் மன்ற ஒன்றிய, நகர நிர்வாகிகளை ரஜினி சந்திக்கிறார்.

இந்த சந்திப்பு கலந்துக் கொள்ள சில விதிமுறைகள் உள்ளது என்பதே நம் தளத்தில் பார்த்தோம்.

மேலும் ரசிகர்களுக்கு அவர்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய ‘க்யூஆர்’ கோடுடன் கூடிய பிரத்யேக அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினி மன்ற நிர்வாகியான சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்..

“ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் தான் அனுமதி.

அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்புடன் ஒத்துழைக்கவும்” என்று தெரிவித்துள்ளார்.

Rajinikanth fans association announcement regarding fans meet

rajini fans meet

சிம்பு-ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் இணையும் ஜிவி.பிரகாஷ்

சிம்பு-ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் இணையும் ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash may do cameo role in Simbus Anbanavan Asaradhavan Adangadhavan movieசிம்பு 4 வேடங்களில் நடித்து இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதன் முதல் பாகம் வருகிற ஜீன் 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இரண்டாம் பாகம் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஒரு கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய முதல் படமான த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் கௌரவ தோற்றத்தில் ஆர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

GV Prakash may do cameo role in Simbus Anbanavan Asaradhavan Adangadhavan movie

அஜித்தின் விவேகம் டீம் இவ்வளவு சென்டிமெண்ட் பார்க்கிறதா?

அஜித்தின் விவேகம் டீம் இவ்வளவு சென்டிமெண்ட் பார்க்கிறதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam ajith stillsசிவா இயக்கிய வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து 3 படங்களிலும் அஜித் நடித்து வருகிறார்.

இந்த 3 படங்களின் தலைப்வுகளும் V எழுத்தில் தொடங்கும்படியாக அமைத்தனர்.

இவர்கள் கூட்டணியில் உருவாகும் அனைத்து படங்களிலும் வியாழக்கிழமை பெரிய சென்டிமெண்ட் கிழமையாக பார்க்கப்படுகிறது.

சீரடி சாய்பாபாவுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை என்பதால் இதை வழக்கமாக அவர்கள் கடை பிடித்துக் வருகின்றனர்.

இதில் விவேகம் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சாதனை படைத்தது.

இப்படத்தை ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிட்டு இருப்பதால் விரைவில் இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இது அஜித் நடிப்பில் உருவாகும் 57வது படம் என்பது நாம் அறிந்ததுதான்.

எனவேதான் இப்படத்தின் டீசரையும் 57 நொடிகள் வைத்திருந்தார்களாம்.

அப்படியென்றால் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 57 நொடிகள் இருக்குமா? டைரக்டர் சார்..?

Many Sentiments happening in Ajiths Vivegam Team

More Articles
Follows