‘கொலை’ அப்டேட்.: ‘ஹத்யா’ என்ற பெயரில் வெளியிட திட்டம்

‘கொலை’ அப்டேட்.: ‘ஹத்யா’ என்ற பெயரில் வெளியிட திட்டம்

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலை’.

துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி நடிக்க போலீஸ் அதிகாரியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.

இவர்களுடன் ராதிகா, ஜான் விஜய், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போஹ்ரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

தெலுங்கில் ஹத்யா (HATYA) என டைட்டில் வைத்துள்ளனர்.

ஒரு பெண் மாடல் அழகி கொலை செய்யப்பட கொலைக்கான பின்னணி என்ன? கொலைக்காரன் யார்? என்பதே படத்தின் கதைக்களம் என தெரியவந்துள்ளது.

Vijay Antonys Telugu film is titled Hatya

மேரேஜ் அப்டேட்..; சிம்பு ரசிகர்களை டென்ஷனாக்கிய பிரேம்ஜி

மேரேஜ் அப்டேட்..; சிம்பு ரசிகர்களை டென்ஷனாக்கிய பிரேம்ஜி

கங்கை அமரனின் மகன்.. வெங்கட்பிரபுவின் தம்பி.. என இருந்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி சினிமாவில் பயணித்து வருபவர் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி.

இவருக்கு தற்போது 44 வயதாகிறது. ஆனால் இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. தனக்கு திருமணமே வேண்டாம் என இவர் சொன்னாலும் இவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் தன் திருமணம் பற்றியும் சிம்புவின் திருமணம் பற்றியும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

இதில்… இன்னும் ஐந்து வருடம் கழித்து அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும், எனக்கும் சிலம்பரசனுக்கும் தவிர.. என பதிவிட்டுள்ளார்.

இதை இவர் கிண்டலாக பதிவிட்டாலும் சிம்பு ரசிகர்களை இது டென்சனாக்கியுள்ளது. ஏன் இப்படி சொல்கிறீர்கள்? என ரசிகர்கள் கமெண்ட்டுக்களை அள்ளி வீசி வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்களோ… உங்க லிஸ்ட்ல.. நடிகை த்ரிஷா, நடிகர் விஷால், நடிகர் ஜெய்யை விட்டுட்டீங்க என கலாய்த்தும் வருகீன்றனர்.

Premgi fun post on simbu maariage

தடைகளை தகர்த்து கடலூரில் நுழைந்தான் ‘எதற்கும் துணிந்தவன்’

தடைகளை தகர்த்து கடலூரில் நுழைந்தான் ‘எதற்கும் துணிந்தவன்’

சூர்யா நடிப்பில் உருவான ’ஜெய்பீம்’ படம் கடந்தாண்டு 2021ல் ஓடிடி தளத்தில் ரிலீசானது. இது மாபெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால் இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததால் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை கடலூர் மாவட்டத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று பாமக எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் உலகமெங்கும் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் கடலூர் மாவட்டத்தில் இன்று ரிலீசாகுமா? என ரசிகர்கள் புரியாமல் தவித்தனர்.

ஆனால் இன்று காலை 7 மணி காட்சிக்கு போலீஸ் பாதுகாப்புடன் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

ரசிகர்கள் திரையரங்கின் உள்ளே சோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.

சூர்யாவின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.

Suriya’s Etharkkum Thunindhavan released in cuddalore with police protection

அஜய் ஞானமுத்து இல்லாமல் உருவாகிறதா ‘டிமான்ட்டி காலனி பார்ட்-2’..?

அஜய் ஞானமுத்து இல்லாமல் உருவாகிறதா ‘டிமான்ட்டி காலனி பார்ட்-2’..?

கடந்த 2015ல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பேய் படம் டிமான்ட்டி காலனி.

இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்க அருள்நிதி நடித்திருந்தார்.

இதில்தான் அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமானார்.

தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது டிமான்டி காலனி படத்தின் 2ஆம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இதிலும் அருள்நிதி நாயகனாக நடிக்கவுள்ளார் என்றும் ஆனால் இயக்குனர் அஜய் ஞானமுத்து இல்லை எனவும் தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

Arul Nithi plans for Demonte Colony part 2

சிம்பு வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

சிம்பு வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

ஆதிக் ரவி இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த படம் ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’.

அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைய சிம்புவே காரணம் என புகார் அளித்து அவர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்து இருந்தார்.

இதனையடுத்து தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை கூறி வருவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழக்கை பதிவு செய்து இருந்தார் சிம்பு.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், அப்போதைய நடிகர் சங்க தலைவர், தயாரிப்பாளர் சங்க தலைவர் உள்ளிட்டோரையும் எதிர்மனுதாரர் என சேர்ந்திருந்தார் நடிகர் சிம்பு.

இந்த வழக்கு இன்று மார்ச் 9ல் விசாரணைக்கு வந்தது.

ஆனால் எதிர்பாராத தீர்ப்பை கோர்ட் வழங்கியள்ளது.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகியும் எழுத்துபூர்வமான வாதத்தை தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யவில்லை என்பதால் ஒரு லட்சம் ரூபாய் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தொகையை வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது கோர்ட்.

Court fined producer council in STR case

சங்கர் இயக்கத்தில் இணையும் ஜிவி பிரகாஷ் & பாரதிராஜா

சங்கர் இயக்கத்தில் இணையும் ஜிவி பிரகாஷ் & பாரதிராஜா

ஒரு பக்கம் டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜிவி பிரகாஷ்.

பிஸியான இசையமைப்பாளராக இருந்தாலும் அதை விட பிசியான நடிகராகவும் உள்ளார். மேலும் தான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கும் இசையைமத்து வருகிறார்.

இந்த நிலையில் அறிமுக இயக்குனர் சங்கர் என்பவர் இயக்கவுள்ள ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து இசையமைக்க உள்ளார்.

இதற்கு ’கள்வன்’ என டைட்டில் வைக்கப்பட உள்ளதாம்.

முக்கிய வேடத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்க உள்ளார்.

விரைவில் இப்பட போஸ்டர் மற்றும் மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

GV & Bharathi Raja joins for a new film

More Articles
Follows