வட இந்தியர்களுக்கு ஆதரவாக பதிவிட்ட விஜய் ஆண்டனி ; நெட்டிசன்கள் எதிர்ப்பு

வட இந்தியர்களுக்கு ஆதரவாக பதிவிட்ட விஜய் ஆண்டனி ; நெட்டிசன்கள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனியின் சமீபத்திய ட்வீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

விஜய் ஆண்டனி நேற்று தனது ட்விட்டரில், “வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்… நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்வீட் சிலரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றாலும், பலரிடமிருந்து பின்னடைவையும் பெற்று வருகிறது. இவரது கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருவதுடன், தமிழகத்தில் வட இந்தியர்கள் செய்யும் குற்றங்களை கமெண்டில் பட்டியலிட்டுள்ளனர்.

Vijay Antony’s latest viral tweet defending North Indians stirs controversy!

காதலர் தினத்தில் பெண்களின் துரோகம் சொல்லும் ‘ஹிப் ஹாப்’ ஆதி

காதலர் தினத்தில் பெண்களின் துரோகம் சொல்லும் ‘ஹிப் ஹாப்’ ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் உருவாக்கத்தில், சுயாதீன ஆல்பம் பாடல் “பொய் பொய் பொய்” காதலர் தின சிறப்பு வெளியீடாக பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.

ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் “பொய் பொய் பொய்” எனும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

காதலில் ஏமாற்றி செல்லும் பெண்ணின் துரோகம், வலி, ஏமாற்றம் என காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல்.

துடிப்பான இசை, அழகான விஷுவல்களில் மனதை கொள்ளைக் கொள்ளும் அற்புதமான காதலர் தின பரிசாக இப்பாடல் அமைந்துள்ளது.

ராப் பாடகராக அறிமுகமாகி, இயக்குநர் நடிகராக வளர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடர்ந்து சுயாதீன ஆல்பம் பாடல்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

“பொய் பொய் பொய்” பாடலை தொடர்ந்து மாதாமாதம், ஒரு சுயாதீன பாடலை வெளியிடப்போவதாக குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஹிப் ஹாப்

Hip hop Aadhi’s poipoipoi song releasing on valentine’s day

‘திருச்சிற்றம்பலம்’ பட இயக்குனரின் அடுத்த அதிரடி ‘அரியவன்’ அப்டேட்

‘திருச்சிற்றம்பலம்’ பட இயக்குனரின் அடுத்த அதிரடி ‘அரியவன்’ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மித்ரன் R ஜவஹரின் அடுத்த படைப்பான ‘அரியவன்’ என்ற புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர், நடிகர் விஜய் சேதுபதியால் நேற்று (12-02-2023) வெளியிடப்பட்டது.

இதில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இத்திரைப்படம் சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.

மாரிச்செல்வன் கதை எழுத, எடிட்டிங் மா தியாகராஜன் மற்றும் ஒளிப்பதிவு கே எஸ் விஷ்ணு ஸ்ரீ மேற்கொள்ள, எம் ஜி பி மாஸ் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வழங்குகிறது.

முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி, ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் பாடல்கள், டீஸர் மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படத்தை வருகிற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முழுவீச்சில் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

படத்தின் மோஷன் போஸ்டரை பார்க்க லிங்க்கை கிளிக் பண்ணுங்க.

அரியவன்

Director Mithran Jawahar’s next titled ‘Ariyavaan’

BREAKING : விஜய்யின் ‘லியோ’ படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் ; வைரலாகும் புகைப்படம்..

BREAKING : விஜய்யின் ‘லியோ’ படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் ; வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின் என பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளது.

இதற்கிடையில், ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் இன்ஸ்டாவில் லோகேஷுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், “உங்கள் எதிர்காலம் இன்று நீங்கள் செய்யும் செயல்களால் உருவாக்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார். ‘லியோ’ படத்தின் செட்டில் இருந்து படம் எடுக்கப்பட்டதால், ‘லியோ’ வில் இணைந்திருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Breaking! A new addition to Thalapathy Vijay’s ‘Leo’ cast – Photo goes viral

நயன்தாரா வீட்டிற்கு சர்ப்பிரைஸ் விசிட் அடித்த ஷாருக்கான்

நயன்தாரா வீட்டிற்கு சர்ப்பிரைஸ் விசிட் அடித்த ஷாருக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் தற்போது ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பகுதி முடிவடைந்து, சமீபத்திய ஷெட்யூல் சென்னையில் இந்த வாரம் முடிவடைந்தது.

அட்டவணை முடிவிற்குப் பிறகு, ஷாருக்கான் நயன்தாராவின் வீட்டிற்கு பிறந்த இரட்டையர்களைப் பார்க்க திடீர் விஜயம் செய்தார். இதில் லேடி சூப்பர் ஸ்டாரின் கணவர் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டார். ஆடம்பரமான பகுதியின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஷாருக் ரசிகர்களுக்கு பறக்கும் முத்தங்களை கொடுத்தார் . அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Shah Rukh Khan’s sudden visit to Nayanthara’s house goes viral

‘சர்தார்’ இயக்குனர் பி.எஸ். மித்ரன் திருமண புகைப்படம் வைரல்

‘சர்தார்’ இயக்குனர் பி.எஸ். மித்ரன் திருமண புகைப்படம் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சர்தார்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் மித்ரன் , முன்னணி ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் புதிய திட்டங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் மித்ரனுக்கும், ஊடகவியலாளர் அஷமீரா ஐயப்பனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று இருவரும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
‘Sardar’ director P.S. Mithran gets married, photos go viral

More Articles
Follows