தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெரும்பாலும் இளைய தளபதி விஜய் நடிக்கும் படங்களின் பெயர்கள் ஒரே வார்த்தையில் உள்ளன.
கிட்டதட்ட 15 வருடங்களாக குஷி தொடங்கி தெறி வரை இது தொடர்கிறது.
மேலும் இந்த பெயர்களில் ஒரு பவர் இருப்பது போன்ற உணர்வும் இருக்கும்
ஆனால் பரதன் இயக்கிய படத்திற்கு மட்டும் அழகிய தமிழ் மகன் என்று அழகான தமிழ் பெயர் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது விஜய்யின் 60வது படத்தையும் பரதன்தான் இயக்கி வருகிறார்.
எனவே இப்படத்திற்கு அழகான தமிழ் பெயரைதான் வைக்க விரும்புகிறாராம்.
இதனால் இன்னும் சில தினங்களில் அந்த டைட்டிலை அறிவிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.