சாந்தினியுடன் இணைந்து விதார்த் ஓட்டும் ‘வண்டி’

சாந்தினியுடன் இணைந்து விதார்த் ஓட்டும் ‘வண்டி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vidharth santhini starring vandhi Journey With Duttuவிதார்த் நாயகனாக நடித்து வரும் படம் “வண்டி“ “Journey With Duttu” .

ரூபி பிலிம்ஸ் ஹஷீர் தயாரிக்கும் இதன் சூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ராஜேஷ் பாலா இயக்கும் இப்படத்தில் நாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.

இவர்களுடன் கிஷோர், ஸ்ரீ ராம்கார்த்திக், ஜான் விஜய், அருள்தாஸ், சாமிநாதன், மதன்பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

கணேஷ் பிரசாத் இரண்டாம் நாயகனாக நடிக்கிறாராம்.

ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, சுராஜ் எஸ்.குரூப் இசையமைக்க ரீசால் ஜெய்னி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

காமெடி த்ரில்லராக இப்படம் உருவாகி வருகிறது.

சூர்யா-ஜிவி.பிரகாஷுடன் இணையும் அஜித் பட இயக்குனர்

சூர்யா-ஜிவி.பிரகாஷுடன் இணையும் அஜித் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh-chandra-menon-விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இவருடன் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் சந்திர மேனன் நடிக்கிறாராம்.

நடிகை ரேவதியின் முன்னாள் கணவரான இவர், ரேவதியின் புதியமுகம் மற்றும் அஜித்தின் பாசமலர்கள் ஆகிய படங்களை இயக்கி தயாரித்தவர்.

தற்போது இவர் ஜிவி. பிரகாஷின் 4ஜி படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

சி.வி.குமார் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் வெங்கட் பக்கர் (வருண் பிரசாத்) இயக்குகிறார்.

இதில் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மலையாள சினிமாவில் முதன்முறையாக மோகன்லால் சாதனை

மலையாள சினிமாவில் முதன்முறையாக மோகன்லால் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pulimuruganவைஷாக் இயக்கத்தில் மோகன்லால், நமீதா நடித்து சமீபத்தில் வெளியான படம் புலிமுருகன்.

கிட்டதட்ட ரூ. 25 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது.

இதன் மூலம் 100 கோடியை எட்டிய முதல் மலையாளப் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

எனவே, இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு பெரும் போட்டி நிலவியது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அத்தனை மொழிகளின் உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து முலகுப்பாடல் பிலிம்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

ஜெயம் ரவியை மிரட்டும் சென்னை தொழிலதிபர்

ஜெயம் ரவியை மிரட்டும் சென்னை தொழிலதிபர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor jayam raviபிரபுதேவா தயாரித்து நடித்த ‘தேவி’ படத்தை தொடர்ந்து புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார் இயக்குனர் விஜய்.

ஜெயம் ரவி நடிக்கவுள்ள இப்படத்திற்கு ‘குமரி கண்டம்’ என்று பெயரிடப்பட உள்ளதாக செய்திகள் கூறப்படுகிறது.

இதில் சாயிஷா சேகல், வருண், தம்பிராமையா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார்.

இயக்குனர் விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இதில் வில்லனாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சாம் பால் (Sam Paul) நடிக்கவிருக்கிறாராம்.

இவர் சென்னையில் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி இடத்தில் சிவகார்த்திகேயன்… ரசிகர்களை கண்டிப்பாரா?

காந்தி இடத்தில் சிவகார்த்திகேயன்… ரசிகர்களை கண்டிப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanரஜினி-கமல், விஜய்-அஜித் உள்ளிட்டவர்களின் படங்கள் வசூல் மழையை பொழிந்து அவர்களை முன்னணி நடிகர்களின் வரிசைக்கு கொண்டு வந்தது.

எனவே ஒரு பக்கம் இவர்களுக்கு ரசிகர்கள் திரள… மறுபக்கம் ரசிகர்களிடையே மோதலும் வலுத்து வந்தது.

இதனால் தங்கள் பலத்தை காட்ட நடிகர்களை தெய்வமாக சித்தரித்து படங்களை வரையத் தொடங்கினர்.

இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகளும் எழும்.

இவர்களைத் தொடர்ந்து வளர்ந்து வரும் நாயகன் சிவகார்த்திகேயனுக்கும் ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் இவரின் ரசிகர் ஒருவர் 100 ரூபாய் நோட்டில் மஹாத்மா காந்தி இருந்த இடத்தில் சிவகார்த்திகேயன் போட்டோவை வைத்து டிசைன் செய்துள்ளனர்.

இதனை ஆரம்பத்திலேயே சிவகார்த்திகேயன் கண்டித்தால், இனிவரும் காலங்களில் இதுபோன்ற காரியங்களில் ரசிகர்கள் ஈடுபடமாட்டார்கள்.

தற்போது வெளியாகியுள்ள 2000 ரூபாய் புதுநோட்டில் மஹாத்மா காந்தி படம் இல்லை. இனி என்ன என்ன செய்யபோகிறார்களோ ரசிகர்கள்?

rs note sivakarthikeyan

ரஜினிக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தனுஷ்.?

ரஜினிக்கு பிறகு விஜய் படத்தை தயாரிக்கும் தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay dhanushதனுஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான கொடி வசூலில் உயரத்தில் பறந்து வருகிறது.

இதனிடையில் சில நாட்களுக்கு முன்பு, விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் தனுஷ்.

#mass announcement soon. Guess what.

அதை என்னவென்று கண்டுபிடியுங்கள் எனவும் தெரிவித்து இருந்தார்.

இதனால் பலரும் பலவாறு கூறி வந்தனர்.

சிலர் வடசென்னை பற்றிய தகவலாக இருக்கும் என்றனர்.

சிலர் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற தகவலாக இருக்கும் என்றனர்.

இன்னும் சிலரோ ரஞ்சித் இயக்கும் ரஜினி பட நாயகியாக இருக்குமோ என்றும் தெரிவித்தனர்.

மேலும் சிலர் விஜய் நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்க, அப்படத்தை தனுஷ் தயாரிக்கலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இதனைக் கண்ட தனுஷ் என்ன நினைத்தாரோ தற்போது மற்றொரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில்…

பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நவம்பர் 9ஆம் தேதி புதன்கிழமை அறிவிப்பை வெளியிடுவேன். பொறுமைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

இந்த நாட்களில் என்ன என்ன செய்திகள் புதிதாக வரப்போகிறதோ? எனத் தெரியவில்லை.

More Articles
Follows