வாங்க ஒரு ரவுண்டு போலாம்; வைஷாலியை மேடையிலேயே அழைத்த ஜான்விஜய்

John Vijay made fun of Anchor Vaishali at Vandi Audio launchவிதார்த், சாந்தினி, ஜான் விஜய், சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வண்டி.

மலையாள திரையுலகை சேர்ந்த ஹசீர் தயாரித்துள்ள இப்படம் விரைவல் வெளியாகவுள்ளது.

ரஜ்ஜிஸ் பாலா என்பவர் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பாடல்களை நடிகர் ஜிவி. பிரகாஷ் வெளியிட நேரில் வந்திருந்தார். ட்ரைலரை நடிகர் விஜய்சேதுபதி இணையத்தில் வெளியிட்டார்.

இதன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜான் விஜய் பேசும்போது…

வண்டி படம் நிறைய மைலேஜ் கொடுக்கும். எனக்கு இதில் வித்தியாசமான போலீஸ் வேடம். என்னுடன் நடித்த சுப்ரமணி அருமையாக நடித்துள்ளார்.

என்று படத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அதன்பின்னர் விழாவை தொகுத்து வழங்கிய வைஷாலியை கலாய்க்க ஆரம்பித்தார்.

உங்க புடவை அழகா இருக்கு. உங்க புன்னகையும். உங்கள பார்த்தா நாக்கு உளறுது. கை கால் எல்லாம் படபடக்குது. உங்க கிட்ட தனியா பேசனும். வாங்க வண்டில ஒர ரவுண்டு போலாம்” என கலகலப்பாக பேசினார்.
இது விழாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

John Vijay made fun of Anchor Vaishali at Vandi Audio launch

Overall Rating : Not available

Related News

விதார்த் நாயகனாக நடித்து வரும் படம்…
...Read More

Latest Post