தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு.
இவர் 1980களில் ரஜினி மற்றும் கமல் ஆகிய முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.
ரஜினியுடன் முள்ளும்மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பார்.
இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார். எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.
சரத்பாபு இறந்துவிட்டதாக இன்று மே 3ம் தேதி இரவு 9 மணியளவில் தகவல் பரவியது.
இதனையடுத்து கமல், குஷ்பூ உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இந்த செய்தியை உண்மை என நம்பி அவர்களும் தங்களுடைய டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்தனர்.
ஆனால் அது வதந்தி என உறவினர்கள் சொன்னபிறகே பொய் ஊடகங்கள் அமைதி காத்தன.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடிகர் சரத்பாபு இன்று மே 22ம் தேதி காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வாழ்க்கை குறிப்பு…
1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலமாக அறிமுகமானார்.
பிறகு ‘பட்டினப்பிரவேசம்’ படம் மூலமாக தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.
‘சரபஞ்சரம்’, ‘தன்யா’ உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
1979-ல் மகேந்திரன் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
இறுதியாக அண்மையில் வெளியான பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ படத்தில் சரத்பாபு நடித்திருந்தார்.
தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார் சரத்பாபு.
முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற செந்தாழம் பூவே என்ற பாடல் இன்றுவரை சரத்பாபு ரசிகர்களின் பேவரைட் பாடலாக கருதப்படுகிறது.
சரத்பாபு இல்லம் சென்னை தி நகரில் பிஜேபி அலுவலகம் அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
veteran actor sarath babu passes away in hyderabad