தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு.
தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே உடல்நல நிலை குறைவால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று மே 22ஆம் தேதி சிகிச்சை பலனின் நடிகர் சரத்பாபு காலமானார்.
அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தன் இரங்கலை உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தும் சரத்பாபுவும் நிறைய படங்களில் நெருங்கிய நண்பர்களாக நடித்திருந்தனர்.
முள்ளும் மலரும் முதல் வேலைக்காரன் அண்ணாமலை முத்து வரை உள்ளிட்ட பல படங்களில் இவர்கள் இணைந்து நடித்தனர்.
ரஜினியின் பாபா படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தார் சரத்பாபு.
ரஜினியின் அந்த பதிவில்…
இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன்.
இது ஈடுகட்ட முடியாத இழப்பு.
அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
#SarathBabu
Rajinikanths condolence message to actor Sarath Babu