மறைந்த நடிகர் சரத்பாபுவின் வாழ்க்கையில் நினைத்தது ஒன்று நடத்தது ஒன்று

மறைந்த நடிகர் சரத்பாபுவின் வாழ்க்கையில் நினைத்தது ஒன்று நடத்தது ஒன்று

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு.

நடிகர் சரத்பாபு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் ஆமுதாலவலசா எனும் ஊரில் கடந்த 1951-ம் ஆண்டு, ஜூலை 31-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யம்பாபு தீக் ஷித்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சையில் அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்ததை தொடர்ந்து கடந்த மே 5 ஆம் தேதி மதியம் 1.32 மணிக்கு சரத்பாபு காலமானார்.

சரத்பாபுவின் உடல் மே 6 ஆம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகளுக்குப் பின் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

சரத்பாபுவின் தந்தை சரத்பாபுவை தனது ஹோட்டல் தொழிலைத் தொழிலை தொடர வேண்டும் விரும்பினார்.

ஆனால், சரத்பாபு தந்தையின் ஹோட்டல் தொழிலைத் தொடர விரும்பாத, கல்லூரி காலத்தில் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், சரத்பாபுக்கு கிட்டப்பார்வை பிரச்னையால் அவரது போலீஸ் அதிகாரி ஆசை நிறைவேறாமல் போனது.

இதனால் தான் சரத்பாபு திரையுலகில் நுழைந்தார்.

sarath babu wanted to became a police officer

இளையராஜா யுவன் சரத் வெங்கட்பிரபு கூட்டணியின் ‘கஸ்டடி’ பட ஓடிடி ரிலீஸ் அப்டேட்

இளையராஜா யுவன் சரத் வெங்கட்பிரபு கூட்டணியின் ‘கஸ்டடி’ பட ஓடிடி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்த வெளியான படம் ‘கஸ்டடி’.

இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, வில்லனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

மேலும், சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கஸ்டடி

இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்தார்.

இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இப்படம் கடந்த மே 12-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி, மக்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படத்தை ஜூன் 9-ஆம் தேதி இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

கஸ்டடி

naga chaitanya’s Custody is streamed now on amazon prime

வெற்றிமாறனின் துணை இயக்குநர் மரணம்.; மற்றொரு நடிகரின் கார் மோதியதில் விபத்து.!

வெற்றிமாறனின் துணை இயக்குநர் மரணம்.; மற்றொரு நடிகரின் கார் மோதியதில் விபத்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’வடசென்னை’, ’அசுரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் சரண்ராஜ்.

இவர் மதுரவாயல் தனலட்சுமி தெருவை சார்ந்தவர்.

சரண்ராஜ் (07-06-2023) தேதி நள்ளிரவு 11.30 மணியளவில் கே.கே.நகர் ஆற்காடு சாலை அருகே இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது, அதி வேகமாக வந்த கார் ஒன்று அவர் பைக் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் சரண்ராஜ் பலத்த காயமடைந்து சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சரண்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சரண்ராஜ் மீது மோதிய காரை ஓட்டி வந்தவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் பெயர் பழனியப்பன் என்றும் அவர் துணை நடிகராக சில படங்களில் நடித்திருப்பது தெரியவந்தது.

துணை நடிகர் பழனியப்பன் காரை குடி போதையில் ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

director vetrimaran’s assistant director died in road accident

மறக்க முடியாத ‘ஜெயிலர்’.. தமன்னாவுக்கு அர்த்தமுள்ள பரிசளித்த ரஜினிகாந்த்

மறக்க முடியாத ‘ஜெயிலர்’.. தமன்னாவுக்கு அர்த்தமுள்ள பரிசளித்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் துறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படம் குறித்து பேசியுள்ளார் தமன்னா.

அவரின் சமீபத்திய பேட்டியில்…

“ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற என் நீண்டநாள் கனவு நனவானது.

‘ஜெயிலர்’ பட சூட்டிங் தருணங்கள் என்றும் நீடித்திருக்கும்.

அவரே தன் கையொப்பம் ஆன்மிக புத்தகம் ஒன்றை எனக்கு பரிசளித்தார் ரஜினி. மிகவும் அர்த்தமுள்ள பரிசு அது” என தெரிவித்துள்ளார் தமன்னா.

Rajinikanth gift to Tamannah at Jailer spot

காவல் சிறுமியர் சிறுவர் மன்றங்களுக்கு ‘பொன்னியின் செல்வன்-2’ சிறப்புக் காட்சி

காவல் சிறுமியர் சிறுவர் மன்றங்களுக்கு ‘பொன்னியின் செல்வன்-2’ சிறப்புக் காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை பெருநகர காவல் துறையில் 112 காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்கள் இயங்கி வருகின்றன. மேற்கண்ட காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களை ஊக்கப்படுத்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், போட்டி தேர்வு பயிற்சிகள், மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இதுதவிர கல்வி சுற்றுலாவாக மாணவர்களை
பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகிறது. கடந்த 29.04.2023 அன்று சென்னை மெட்ரோ ரயிலில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் வரை அழைத்துச் செல்லப்பட்டு வரப்பட்டது.

மேலும் 09.05.2023 அன்று சென்னை துறைமுகத்தில் இந்திய கடலோர காவல் படையின் சுஜய் ரோந்துக்கப்பலை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

பொன்னியின் செல்வன்-2

இதன் தொடர்ச்சியாக, சிறார் மன்றங்களை சேர்ந்த சிறுமியர் மற்றும் சிறுவர்களின் வேண்டுகோளின் பேரில் திரு.M.மனோகர்,இ.கா.ப., காவல் இணை ஆணையாளர், மேற்குமண்டலம், சென்னை பெருநகரகாவல், அவர்களின் ஏற்பாட்டில் இன்று (08.06.2023) காலை 09.00 மணிக்கு சென்னை மதுரவாயலில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில் வரலாற்று திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் சிறப்புக்காட்சியாக காவல் சிறுவர் சிறுமியருக்கு மட்டும் திரையிடப்பட்டது.

இத்திரைப்படத்தை காவல் சிறார் மன்றத்தை சேர்ந்த சுமார் 200 சிறுவர் சிறுமியர்கள் கண்டுமகிழ்ந்தனர்.

இத்திரைப்படத்தினை காவல் சிறார் மன்ற மாணவ மாணவிக்களுக்காக சிறப்புக்காட்சியாக ஏற்பாடு செய்து வழங்கிய அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கு காவல் இணை ஆணையாளர் அவர்கள் நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தார்.

பொன்னியின் செல்வன்-2

Special screening of Ponniyin Selvan 2 for children of Police Girls Boys Club

தோனியின் LGM..: ஆத்மாவை தொட்டு சிரிக்க வைக்கும் இதயபூர்வமான பயணம்

தோனியின் LGM..: ஆத்மாவை தொட்டு சிரிக்க வைக்கும் இதயபூர்வமான பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘எல் ஜி எம்’.

இந்த படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார்.

வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் டீசருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பு ‘எல் ஜி எம்’. ( லெட்ஸ் கெட் மேரீட்). இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதற்கு பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில்…

” நகைச்சுவையையும், குடும்பத்தையும் ஒன்றாக இணைத்து குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக ‘எல் ஜி எம்’ தயாராகி இருக்கிறது. இந்தத் திரைப்படம், உங்கள் ஆத்மாவை தொட்டு சிரிக்க வைக்கும் இதயபூர்வமான பயணம்.

இப்படத்தின் டீசரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்த டீசருக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி” என்றார்.

‘எல் ஜி எம்’ படத்தின் டீசருக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தின் வெளியிட்டு தேதியையும், படத்தின் வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள்.

‘எல் ஜி எம்’ என்பது சாக்ஷி தோனியின் தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், இசையமைப்பாளரான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவான ஒரு பீல் குட் எண்டர்டெய்னர்.

இந்த திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பிரியன்ஷூ சோப்ராவும், தயாரிப்பாளராக விகாஸ் ஹசிஜாவும் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது.

Harish Kalyan’s lgm movie teaser released

More Articles
Follows