தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்.
இவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைதானவர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி ஆர்யன் கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவா சென்ற சுற்றுலா கப்பலில் ஆர்யன்கான் மற்றும் நண்பர்கள் போதை பொருட்களுடன் சில மாதங்களுக்கு முன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கினர்.
3 வாரங்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
அக்ஷய்குமாரை அடுத்து ஷாரூக்கானுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்
பின்னர், நிபந்தனை ஜாமீனில் வெளியிலும் வந்தார்.
தற்போது ஆர்யனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை. அவர் அப்பாவி என போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் 14 குற்றவாளிகளின் பெயரை குறிப்பிட்டு 6 ஆயிரம் பக்க குற்றப் பத்திரிகையை போதைப்பொருள் தடுப்பு போலீசார் (என்சிபி) தாக்கல் செய்தது. அதில், அர்யன்கான் அப்பாவி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோர்டேலியா போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான், அவின் சாஹு மற்றும் 4 நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது வழக்கு எதுவும் இல்லை என போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
ஆர்யன்கான் மற்றும் மொகக் என்பவர் தவிர மற்றவர்கள் அனைவரும் போதைப் பொருள் வைத்திருந்தனர்.
ஆர்யன்கானுக்கு எதிராக போதிய ஆதாரங்களை திரட்ட முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை ஐகோர்ட்டால் கைது செய்யப்பட்டு 25 நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Verdict on Shah Rukh Khan’s son arrested in drug case