4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாரூக்கான் படம்.; தமிழக ரசிகர்கள் கொண்டாட்டம்

4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாரூக்கான் படம்.; தமிழக ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பதான்’ படத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக்கான் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரம்மாண்ட மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘பதான்’ .

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதனை தொடர்ந்து வெளியான பேஷரம் ரங் , ‘ஜூம் ஜோ பதான்’ ஆகிய இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்டாக மாறி இணையத்தில் கலக்கத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஷாரூக் கான் திரைப்படம் திரையரங்குகளுக்குத் திரும்பியதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே ஷாரூக்கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் ஒன்றை வைத்து கொண்டாடுகின்றனர் .

ஏற்கனவே இப்படம் டிக்கெட் முன்பதிவில் பிரம்மாஸ்திரத்தை முந்திவிட்டது. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விடுமுறை அல்லாத ஒரு நாள் வசூல் சாதனையில் புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Celebrations begin in TN to mark SRKs return to cinemas after 4 years with Pathaan

பதான் ரிலீஸ் ஷாரூக்கான் ரசிகர்கள் குஷி Celebrations begin in Tamilnadu l Pathaan Release Sharukhkhan l filmistreet l 😱🔥💐 https://youtube.com/shorts/t4yDcOi-R-A?feature=share

இந்திய சினிமாவின் ‘ஜார்ஜ் குளூனி’ அஜித்.; பிரான்ஸ் நாட்டில் புகழாரம்

இந்திய சினிமாவின் ‘ஜார்ஜ் குளூனி’ அஜித்.; பிரான்ஸ் நாட்டில் புகழாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

தற்போது வரை 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் பிரான்ஸ் நாட்டில் ‘துணிவு’ படத்திற்கு பெரும் வரவேற்பை கிடைத்துள்ளது.

அந்த நாட்டின் ஒரு தனியார் டிவி.யின் விவாத நிகழ்ச்சியில் ‘துணிவு’ படம் குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது இந்திய சினிமாவின் ‘ஜார்ஜ் குளூனி’ அஜித் என அவர்கள் பேசியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்துள்ளனர்.

இது தொடர்பாக ‘துணிவு’ தயாரிப்பாளர் போனிகபூர்… “பிரான்ஸ் நாட்டில் ‘துணிவு’ பட வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். இது ஓர் அற்புதமான உணர்வு” என தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்…

George Timothy Clooney is an American actor and filmmaker. He is the recipient of numerous accolades, including a British Academy Film Award, four Golden Globe Awards, and two Academy Awards..

அஜித்

France TV channel praises Ajith as Indian Cinema George Clooney

22 ஆண்டுகளுக்கு முன் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட மஞ்சு வாரியர்?

22 ஆண்டுகளுக்கு முன் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட மஞ்சு வாரியர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர், வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அவரது இரண்டாவது கோலிவுட் படமான ‘துணிவு’ சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

22 வருடங்களுக்கு முன் அஜீத் குமாருடன் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக மஞ்சு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் நடித்த பாத்திரத்தில் நடிக்க முதல் தேர்வாக இருந்ததாக அவர் கூறினார்.

அவர் பல மலையாள படங்களில் பிஸியாக இருந்ததால் அந்த நேரத்தில் அவரால் படத்தில் நடிக்க முடியவில்லை என தெரிவித்தார்.

Manju Warrier missed the chance to act with Ajith, 22 years before ?

இதோ வந்துட்டோம்.. கவுண்டமணியின் காமெடி சந்தானத்தின் படத்தலைப்பானது

இதோ வந்துட்டோம்.. கவுண்டமணியின் காமெடி சந்தானத்தின் படத்தலைப்பானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் காமெடி இரட்டையர்கள் என்றால் அது கவுண்டமணி செந்தில் தான்.

இவர்களது நகைச்சுவை வசனங்களில் நிறைய வசனங்கள் தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்த ஒன்றானது.

*வடக்குப்பட்டி ராமசாமி.. இரண்டு வாழைப்பழத்துல ஒன்னு இங்க இருக்கு… கோமுட்டி தலையா.. பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா..* உள்ளிட்ட பல வசனங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த நிலையில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற வசனம் தற்போது சந்தானத்தின் புதிய தலைப்பாக மாறி உள்ளது.

வடக்குப்பட்டி ராமசாமி

அதன் விவரம் வருமாறு..

தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று PEOPLE MEDIA FACTORY.

தற்போது இந்த நிறுவனம் தமிழில் புதிய படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது.

தெலுங்கில் Oh Baby, Goodachari, Karthikeya 2 and Dhamaka உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளனர்.

தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கவுள்ள பிரம்மாண்டமான படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்தி யோகி என்பவர் இயக்குகிறார்.

ஷான் ரோல்டன் இசையமைக்க தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவா நந்தீஸ்வரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

படத்தில் நடிக்கும் மற்ற கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

வடக்குப்பட்டி ராமசாமி

Santhanam’s Next Movie is  Titled Vadakkupatti Ramasamy

‘ஷியாம் சிங்காராய்’ பட நிறுவனத்துடன் இணைந்த விக்டரி வெங்கடேஷ்

‘ஷியாம் சிங்காராய்’ பட நிறுவனத்துடன் இணைந்த விக்டரி வெங்கடேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹிட்’ எனும் பெயரில் வெளியான முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கி வெற்றிப் பெற்ற இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் ‘வெங்கி 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கிறார்.

‘எஃப் 3’ எனும் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

‘ஷியாம் சிங்காராய்’ எனும் திரைப்படத்தை தயாரித்த நிஹாரிகா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் ‘வெங்கி 75’ பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இது தொடர்பாக பிரத்யேக புகைப்படம் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட்- இயக்குநர் சைலேஷ் கொலனு- நடிகர் விக்டரி வெங்கடேஷ் என திறமையான படைப்பாளிகள் கூட்டணி அமைத்திருப்பதால், இப்படைப்பை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதனை பூர்த்தி செய்யும் வகையில் ஃப்ரி லுக் எனப்படும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படத்தில், நடிகர் விக்டரி வெங்கடேஷின் சில் அவுட் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

மேலும் அவரது கையில் துப்பாக்கி போன்ற கடுமையான ஆயுதம் இல்லாமல், வேறு ஏதேனும் ஒன்றை வைத்திருப்பது. இப்படத்தை பற்றி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை எழுப்பி இருக்கிறது.

இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Niharika Entertainment to produce Venkatesh’s Venky75

Victory Venkatesh ‘s Venky 75 Announcement Out January 25th

Victory Venkatesh who is riding high with the blockbuster success of F3 will be joining forces with the very talented director Sailesh Kolanu who delivered consecutive hits with the HITverse, for a high-budget film to be produced by Venkat Boyanapalli of Niharika Entertainment.

The landmark 75th film of Venkatesh- #Venky75 is production No 2 from Niharika Entertainment and they made a successful foray into production with Shyam Singha Roy. The most prestigious project of the production house will be mounted on a large scale. This indeed will be the highest-budget movie for Venkatesh.

Obviously, there will be high expectations on the film coming from successful people. The pre-look poster sees a silhouette image of Venkatesh who holds something in his hand. It’s not a gun and it’s something else that will be revealed on the 25th of this month. The pre-look poster with a huge blast and dense smoke indicates Venkatesh’s intense character and an action genre of the movie.

Sailesh Kolanu who wrote a winning script will be presenting Venkatesh in a first-of-its-kind role in the movie that will feature several prominent actors. Noted technicians will handle different crafts. The makers will announce the other cast and crew soon.

Cast: Venkatesh

Technical Crew:
Writer-Director: Sailesh Kolanu
Producer: Venkat Boyanapalli
Banner: Niharika Entertainment
PRO: Yuvraaj

விஜய்சேதுபதி சந்தீப் கௌதம் மேனன் இணைந்த ‘மைக்கேல்’ டிரைலரை வெளியிட்ட தென்னிந்திய பிரபலங்கள்

விஜய்சேதுபதி சந்தீப் கௌதம் மேனன் இணைந்த ‘மைக்கேல்’ டிரைலரை வெளியிட்ட தென்னிந்திய பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் பான் இந்திய படைப்பான ‘மைக்கேல்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் நட சிம்ஹம் நந்தமுரி பாலகிருஷ்ணா, தமிழில் முன்னணி நட்சத்திர பிரபலங்கள் ஜெயம் ரவி மற்றும் அனிருத் ரவிச்சந்தர், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் ‘மைக்கேல்’.

இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், திவ்யன்ஷா கௌஷிக், வரலட்சுமி சரத்குமார், ஐயப்ப சர்மா, அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். திரிபுரனேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதா மணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து வசனம் எழுதியிருக்கும் இந்த திரைப்படத்தை கரண் சி புரொடக்‌ஷன்ஸ் எல் எல் பி மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்களின் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் பரத் சவுத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை நாராயணதாஸ் கே நரங் வழங்குகிறார். பிப்ரவரி 3ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னோட்டத்தில் கதையின் நாயகனான சந்தீப் கிஷனின் தோற்றம், அவரது நடிப்பு, சண்டை காட்சிகள், கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட கடும் உழைப்பு… ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

குறிப்பாக காதலிக்கும் பெண்களைப் பற்றி கௌதம் மேனன் எச்சரிக்கும் வசனங்களும், அதற்கு சந்தீப் கிஷன் பதிலளிக்கும் வசனங்களும் உணர்வுபூர்வமாகவும், வலிமையானதாகவும் இடம் பிடித்திருக்கிறது.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் நடிகை திவ்யன்ஷா கௌஷிக்கின் திரை தோன்றல் ரசிகர்களை காந்தம் போல் கவர்ந்திருக்கிறது.

மேலும் விஜய் சேதுபதியின் மிரட்டும் வகையிலான தோற்றமும் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது.

இள வயதில் தோன்றும் சந்தீப் கிஷன், ஒருவரை துப்பாக்கியால் நேருக்கு நேர் சுடுவதுடன் முன்னோட்டம் நிறைவடைகிறது.

ஒரு அழகான காதல் கதையை ஸ்டைலிஷான காட்சி அமைப்புகளுடன் ரத்தம் தோய்ந்த ஆக்சன் என்டர்டெய்னர் போல் முன்னோட்டம் இருப்பதால், வழக்கமான கேங்ஸ்டர் படங்களை விட கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இயக்குநர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், பிரத்யேகமான முயற்சி எடுத்து, திரைக்கதை அமைத்து அதனை திரையில் காட்சிப் படுத்தியிருப்பதால் அவரது முயற்சி வெற்றியை தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக மைக்கேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தீப் கிஷன், காதலி மீது காட்டும் அன்பும், எதிரிகள் மீது அவர் நடந்து கொள்ளும் விதமும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் இந்த முன்னோட்டத்தை கொண்டாடி வருகிறார்கள். ‘

விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் , அனுசுயா பரத்வாஜ், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒவ்வொருவரும் வலுவான கதாபாத்திரத்தில் தோன்றுவதால், ‘மைக்கேல்’ படத்தின் முன்னோட்டம், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

Top celebrity Launched Michael movie tamil Trailer

NBK Jayam Ravi Anirudh Nivin Pauly Launched Michael Trailer

Sundeep Kishan, Vijay Sethupathi, Karan C Productions LLP, Sree Venkateswara Cinemas LLP’s Pan India Film Michael

Michael is an ambitious project for hero Sundeep Kishan who will be seen in a never-seen-before action-packed role. The maiden Pan India film of the star directed by Ranjit Jeykodi is not just an action entertainer, it has romance, drama, and thrilling elements too. The makers indeed amazed us with the teaser which got an overwhelming response. Today, Nata Simham Nandamuri Balakrishna, Jayam Ravi, Anirudh Ravichander, Nivin Pauly launched the theatrical trailer of the movie in Telugu, Tamil and Malayalam languages.

The trailer shows almost every character in a dark way. Gautam Menon tries to caution Sundeep Kishan about women, but the latter feels life is meaningless without love. Interestingly, the girl in his life played by Divyansha Kaushik warns him that if he falls in love with her, it will cause him heartbreak. And the trailer concludes with young Sundeep Kishan shooting someone with a gun. We also see the menacing Vijay Sethupathi making an appearance that adds a lot of seriousness to the trailer.

The trailer gives the impression that Michael is a raw, intense, bloody actioner with a beautiful love story and stylish visual treatment. It carries a vintage feel by showing typical gangster cars, red-themed backdrops, and retro clothing.

The major plus point of the movie seems to be strength in characterizations. Every scene substantiates Ranjit Jeykodi’s efforts. Sundeep Kishan steals the show as the actor has lived the role of Michael. It is a visual treat to watch the talented lad perform be it the love that he feels towards Divyansha or the anguish he shows on his opponents. He makes us feel both his love and pain in different situations. Vijay Sethupathi promises us a special treat. Varalaxmi Sarathkumar makes her presence felt in an action role, wherein Varun Sandesh got a meaty role and Anasuya Bharadwaj appeared in a strong character.

Kiran Kaushik’s camerawork is flawless and has captured the raw energy very well. Sam CS’s background score elevates the rawness of the movie and intensifies the effect over the audience. The score for romantic scenes is exquisite. The dialogues for the movie were penned by Tripuraneni Kalyan Chakravarthy, Rajan Radhamanalan, and Ranjit Jeyakodi. https://youtu.be/HBTaKskrt9w

More Articles
Follows