உதயநிதியின் கடைசி படம் ‘மாமன்னன்’ ரன்னிங் டைம் இதோ..

உதயநிதியின் கடைசி படம் ‘மாமன்னன்’ ரன்னிங் டைம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

‘மாமன்னன்’ படம் இந்த மாதம் ஜூன் 29ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தற்போது ‘மாமன்னன்’ படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி, ‘மாமன்னன்’ படம் 2 மணிநேரம் 35 நிமிடம் ரன்னிங் டைம் எனவும், முதல் பாதி 1 மணிநேரம் 15 நிமிடமாகவும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 20 நிமிடமாகவும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

udhayanidhi’s maamannan movie running time update here

வசந்தபாலன் – ஜிவி. பிரகாஷ் இணைந்த படத்தை வெளியிடும் இயக்குநர் ஷங்கர்

வசந்தபாலன் – ஜிவி. பிரகாஷ் இணைந்த படத்தை வெளியிடும் இயக்குநர் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ‘வெயில்’, ‘அங்காடித் தெரு’, ‘காவியத் தலைவன்’, ‘ஜெயில்’ போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன்.

வசந்த பாலன் தற்போது “அநீதி” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.

“அநீதி” படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘அநீதி’ திரைப்படம் வரும் ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், ‘அநீதி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது சில காரணங்களால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Arjun das’s ‘aneethi’ movie release date announced

விஜய் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த ரசிகர்கள்

விஜய் பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஜூன் 22 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் நடிகர் விஜய்.

இதனை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள சில திரையரங்குகளில் விஜய் படங்களை ரீ ரிலீஸ் செய்து சிறப்பு காட்சிகளாக திரையிட்டு வருகின்றனர்.

எனவே நள்ளிரவு முதலே விஜய் ரசிகர்கள் மிகுந்த ஒரு உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

மேலும் நள்ளிரவு 12 மணிக்கு ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இதனையும் பிளக்ஸ் பேனர் போஸ்டர்கள் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர் விஜய் ரசிகர்கள்.

Actor Vijay fans gift to new born babies

நா ரெடி..; விஜய் பிறந்தநாளை மெகா திருவிழாவாக மாற்றும் ‘லியோ’ படக்குழு

நா ரெடி..; விஜய் பிறந்தநாளை மெகா திருவிழாவாக மாற்றும் ‘லியோ’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இப்படத்தின் ‘நா ரெடி’ முதல் பாடல் விஜய்யின் பிறந்த நாளான நாளை (ஜூன் 22) வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இன்று ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு மிக சரியாக 12 மணிக்கு ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் மற்றும் லோகேஷ் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்சியாக ‘லியோ’ படத்தின் அப்டேட்டுகள் வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

லியோ

LEO FirstSingle NaaReady song will be out at today evening

அருள்நிதி மிரட்டிய ‘கழுவேத்தி மூர்க்கன்’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்

அருள்நிதி மிரட்டிய ‘கழுவேத்தி மூர்க்கன்’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’.

இப்படத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்க, சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் ஜூன் 23ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

கழுவேத்தி மூர்க்கன்

arulnithi’s kazhuvethi moorkan on amazon prime from june 23

விக்ரம் கௌதம் இணைந்த ‘துருவ நட்சத்திரம்’ ஹாட் அப்டேட் இதோ..

விக்ரம் கௌதம் இணைந்த ‘துருவ நட்சத்திரம்’ ஹாட் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்துக்கான படப்பிடிப்பு ஒத்திகையின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது.

தற்போது பூரண குணம் அடைந்து படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’.

இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரீத்து வர்மா கதாநாயகியாக நடிக்க, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

இப்படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் 3 பாடல்களை ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

vikram’s dhuruva nakshatram movie new update

More Articles
Follows