தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஒன்று பிக்பாஸ்.
கடந்த ஜனவரி மாதம் ஆரம்பத்தில் பிக்பாஸ் 6வது சீசன் முடிவுக்கு வந்தது.
அந்த சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது.
மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரேகா நாயர், மாகபா ஆனந்த், விஜே பாவனா, கே.பி.ஒய்.சரத் ஆகியோரிடம் ஆடிஷன் நடந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் 7-வது சீசனின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவில் இரண்டு பிக்பாஸ் வீடுகள் உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Two House in Bigg Boss show Kamal says in bigg boss season 7 promo video