கமலின் ‘பிக்பாஸ் சீசன் 7 ; அட இவங்களுக்கு எல்லாம் ஆடிசன் நடந்துச்சா.?

கமலின் ‘பிக்பாஸ் சீசன் 7 ; அட இவங்களுக்கு எல்லாம் ஆடிசன் நடந்துச்சா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ்.

கடந்த ஜனவரி மாதம் ஆரம்பத்தில் பிக்பாஸ் 6வது சீசன் முடிவுக்கு வந்தது.

அந்த சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார்,

அடுத்தாக விரைவில் பிக்பாஸ் ஏழாவது சீசன் தொடங்கப்படவுள்ளது.

குறிப்பாக, பிக்பாஸ் 7வது சீசன் ஆகஸ்ட் மாதமே தொடங்கும் என சமீபத்தில் தகவல் வந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் ஏழாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரேகா நாயர், மாகபா ஆனந்த், விஜே பாவனா, கே.பி.ஒய்.சரத் ஆகியோரிடம் ஆடிஷன் நடந்ததாக தெரிகிறது.

மேலும், இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கூடுதல் தகவல்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகின் ராவும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டிலை கைப்பற்றினர்.

Big Boss Season 7 Audition Starts, Top Celebrities Are Shortlisted

‘சூர்யவம்சம்’ படத்தின் பார்ட் 2 அப்டேட் கொடுத்த சரத்குமார்

‘சூர்யவம்சம்’ படத்தின் பார்ட் 2 அப்டேட் கொடுத்த சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1997- ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘சூர்யவம்சம்’.

இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா, ஆனந்த்ராஜ், சத்யபிரியா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. அதிலும் ‘நட்சத்திர ஜன்னலில்’ பாடல் இன்று வரை அனைவரும் கொண்டாடும் ஒரு பாடலாக உள்ளது.

இந்நிலையில், படம் வெளியாகி நேற்றுடன் 26 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், “கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்பு வாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி!

மேலும், விரைவில் சூர்யவம்சம் – 2!…” என்று பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் ‘சூர்யவம்சம்’ இரண்டாம் பாகம் வருவதை சரத்குமார் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SuryaVamsam to get a sequel after 26 years, confirms Sarathkumar

லாரன்ஸ் விரும்பினால் மட்டுமே கருணை.; சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன்

லாரன்ஸ் விரும்பினால் மட்டுமே கருணை.; சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான்.

சல்மான் கான் தற்போது ‘டைகர் 3’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

தொடர்ந்து கொலை மிரட்டலை சந்தித்து வருகிறார்.

அண்மையில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு ஒன்று வந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்ததையடுத்து சல்மான்கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி பிரார்.

இவர் தற்போது நடிகர் சல்மான்கானுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து கோல்டி பிரார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் சல்மான்கானை நிச்சயமாக கொல்வோம். லாரன்ஸ் பாய் தான் விரும்பினால் மட்டுமே கருணை காட்டுவார்.

நாங்கள் முன்பே கூறியதுபோல் சல்மான் கான் மட்டுமல்ல, நாங்கள் உயிருடன் இருக்கும்வரை எங்கள் எதிரிகள் அனைவருக்கும் எதிராக எங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்” என்று கூறினார்.

Gangster Goldy Brar says they will surely kill Salman Khan

பூஜா பட் எனக்கு பிறக்கலேன்னா நானே திருமணம் செஞ்சிருப்பேன்.; மகளுக்கு லிப் கிஸ் அடித்த மகேஷ் பட் பேச்சு

பூஜா பட் எனக்கு பிறக்கலேன்னா நானே திருமணம் செஞ்சிருப்பேன்.; மகளுக்கு லிப் கிஸ் அடித்த மகேஷ் பட் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த இயக்குநர் மகேஷ் பட்.

சாஹத், மர்டர், ஜிஸ்ம், ஜுர்ம், ராஸ், வோ லாம்ஹே, மிஸ்கைடட் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

மகேஷ் பட்டின் முதல் மனைவி கிரண் பட். ஆனாலும் திருமண உறவை மீறி மறைந்த நடிகை பர்வீன் பாபி மற்றும் சோனி ரஸ்தானாவுடன் உறவு வைத்திருந்தார்.

மகேஷின் முதல் மனைவிக்கு பிறந்தவர் பூஜா பட். இவரும் நடிகை தான்.

ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் அட்டை படத்திற்காக தனது மகள் பூஜா பட்டை மடியில் அமரவைத்து லிப் டூ லிப் கிஸ் அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மகேஷ் பட்.

இது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பிரஸ்மீட் ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தார் மகேஷ் பட்.

செய்தியாளர்கள் மத்தியில் கேள்வி கணைகள் எழுப்பவே.. ஒருகட்டத்தில்… ‘பூஜா பட் மட்டும் என் மகளாக இல்லாமல் இருந்திருந்தால், நான் அவளை திருமணம் செய்திருப்பேன்’ என்று அனைவரும் திட்டம் வகையில் பதிலடி கொடுத்தார்.

தற்போது மகேஷ் பட்டின் இந்த கருத்தும் சர்ச்சைக்குள்ளாகி பல கண்டனங்களை பெற்று வருகிறது.

கூடுதல் தகவல்…

மனிஷ் என்பவரை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் பூஜா பட். 2014 வரை இவர்கள் இணைந்து வாழ்ந்தனர். அதன் பின்னர் இவர்கள் பிரிந்து விட்டனர்.

மகேஷ் பட்

If Pooja bhatt had not been my daughter, I would have married her.

‘மாமன்னன்’ வழக்கு : 2 நாளில் மறந்துடுவாங்க.. பிரச்சினையை போலீஸ் பாத்துப்பாங்க.; ஐகோர்ட் ஆர்டர்

‘மாமன்னன்’ வழக்கு : 2 நாளில் மறந்துடுவாங்க.. பிரச்சினையை போலீஸ் பாத்துப்பாங்க.; ஐகோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி தயாரித்து நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் நாளை ஜூன் 29ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்…

”மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார்.

கடைசியாக இவர் எடுத்த கர்ணன் படம் கொடியன்குளம் கிராமத்தில் நடைபெற்ற ஜாதி கலவர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காத்தப்ப புலிதேவன் என்பவரை மாமன்னன் என அழைப்பார்கள். அவரை தவறாக சித்தரிக்கும் வண்ணம் இப்படம் அமைந்துள்ளது.

மேலும் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (ஏ) க்கு எதிராக உள்ளது.

இப்படம் வெளிவந்தால் இரு வேறு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, 29.06.2023 அன்று மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ, எந்த ஓடிடி தளம் போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.”

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்…”இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய தேவையில்லை.

திரைப்படத்துக்கு திரைப்பட தணிக்கை துறை அனுமதி வழங்கிய பிறகு நீதிமன்றம் தலையிட முடியாது, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள். திரைப்படம் மக்கள் பார்க்கவே.

இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள். பேச்சு உரிமை கருத்து உரிமை அனைவருக்கும் உள்ளது” எனத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

High Court judgement in Maamannan movie ban case

எப்படி இருக்கிறார் ‘மாமன்னன்’.? 2 தேசிய விருதுகளை வென்ற நடிகரின் முதல் விமர்சனம் இதோ..

எப்படி இருக்கிறார் ‘மாமன்னன்’.? 2 தேசிய விருதுகளை வென்ற நடிகரின் முதல் விமர்சனம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதில் உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்தப் படத்தை 2 தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் பாராட்டி தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில்…

‘மாமன்னன்’ படம் மிகுந்த உணர்ச்சிபூர்வமாக இருக்கின்றது.

வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பு மிக அபாரமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இறுதியாக ‘இசைப்புயல்’ஏ ஆர் ரகுமான் இசை அருமை எனவும் கூறியிருக்கிறார்.

‘மாமன்னன்’ படத்திற்கு முன் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ படத்தில் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maamannan movie review by Actor Dhanush

More Articles
Follows