தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலிவுட் பிரபலமான நடிகை கங்கணா ரணாவத் சமீபத்தில் மத்திய அரசு வழங்கிய பத்ம விருதை பெற்றார்.
இதனிடையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது…
‘‘1947 முன்பு இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சியாக தான் நடைபெற்றது காங்கிரஸ் ஆட்சி. 1947-ம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான். உண்மையில் இந்தியாவுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது.’’ என பேசினார்.
அதாவது 2014 முதல் நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி ஆட்சி உருவானது குறித்து பேசியுள்ளார்.
கங்கனாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆம் ஆத்மி தேசிய செயல் தலைவர் பிரீத்தி என்பவர் மும்பை காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
மேலும் காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தன் ட்விட்டர் பக்கத்தில்..
“கங்கனா ரணாவத்தின் கருத்து வெட்கக்கேடு. அவர் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வாலபாய் படேல் ஆகியோரை அவமதித்துள்ளார்.
மேலும் பகத் சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இழிவுபடுத்தியுள்ளார்.
கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” எனக் கூறினார்.
Actress Kangana says 1947 was ‘alms’ and India got ‘real freedom’ in 2014