சித்தார்த்-கேத்ரீன் தெரசா நடிக்கும் பட சூட்டிங் தொடங்கியது

Trident Arts Production No 3 Shoot Kick started in Chennaiசித்தார்த், கேத்ரின் தெரசா இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை சாய் சேகர் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தை ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் அஜித்தின் ‘வேதாளம்’ மற்றும் விஜய்சேதுபதி நடித்த ‘றெக்க’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக மோதவிருக்கிறார்.

முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படம் குறித்து சாய்சேகர் கூறியதாவது…

“முழுக்க முழுக்க நகரப் பின்னணியில் படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் காதல், ஆக்சன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உருவாக்க உள்ளோம்.

இந்தப் படத்தில் முதற்கட்டமாக 10 நாள் படப்பிடிப்பு நடத்தவுள்ளோம்.இதில் ஹிரோயின் கேத்ரின் தெரசா சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறும்.” என்றார்.

Trident Arts Production No 3 Shoot Kick started in Chennai

Overall Rating : Not available

Latest Post