மன்னிப்பு கேட்காத ரஜினி; நடிகர்கள் ஆதரவு… கட்சிகள் எதிர்ப்பு

Rajinikanthதுக்ளக் 50 ஆண்டு விழாவில் தந்தை பெரியார் மற்றும் கடவுள் ராமர் குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

இது தமிழக அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரும்பாலான கட்சிகள் ரஜினிக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீடு முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் தெரிவித்து இருந்தது.

ரஜினி வீடு முற்றுகை: பாதுகாப்பு அரண் அமைக்க ரசிகர்கள் திட்டம்

ஆனால் பத்திரிகை செய்தியை நான் படித்தேன் சொன்னேன். மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

இதனால் அரசியல் களம் சூடானது. பல டிவிக்கள் இதை வைத்தே 3 நாட்கள் விவாதங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக நடிகை குஷ்பூ, ஒளிப்பதிவாளர் நடிகர் நட்ராஜ், இயக்குனர் நடிகர் பேரரசு ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் ரஜினியின் பேச்சுக்கு திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Overall Rating : Not available

Latest Post