போயஸ் கார்டன் வாசிகள் அவதி.. முடிவை மாற்றிய ரஜினி..; போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.!

போயஸ் கார்டன் வாசிகள் அவதி.. முடிவை மாற்றிய ரஜினி..; போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.!

Rajinikanthவிரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

தற்போது கட்சிப்பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி.

கட்சி விவரங்களை 2020 டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.

போயஸ்கார்டன் இல்லம் வரும் ரசிகர்களின் வருகை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து ரஜினியுடைய போயஸ் கார்டன் இல்லம் & தெருவிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

12-15 தமிழக போலீசார் தினசரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினியின் இல்லம் செல்லும் வழியில் இரு இடங்களில் தடுப்புகள் அமைத்து, ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இதனால் போயஸ் கார்டனில் வாசிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் அவர்கள் பாதிக்கப்படுவது ரஜினியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு, காவல்துறை உயரதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட உள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.

TN Police withdraw security to Rajini’s house after his request

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *