நடிகர் அஜித்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் பிறந்தநாள் வாழ்த்து.?

நடிகர் அஜித்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் பிறந்தநாள் வாழ்த்து.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Minister Sengottaiyan clarifies his Birthday wishes to actor Ajithஇன்று மே 1ஆம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இரவு முதலே அவரை வாழ்த்த ரசிகர்கள் அவரது இல்லத்தின் அருகில் காத்திருக்கின்றனர்.

மேலும் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் ஹாப்பி பர்த் டே தல அஜித் என தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தன் ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பின்னர் அளித்த விளக்கத்தில்… என் ட்விட்டர் பக்கத்தில் நான் அந்த பிறந்தநாள் வாழ்த்தை பதிவிடவில்லை. என தெரிவித்துள்ளார்.

அதன்பின் அந்த பதிவு அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

TN Minister Sengottaiyan clarifies his Birthday wishes to actor Ajith

காவிரி பேச்சு எதிரொலி; கன்னட பிட்டு படத்தில் சிம்புக்கு வாய்ப்பு

காவிரி பேச்சு எதிரொலி; கன்னட பிட்டு படத்தில் சிம்புக்கு வாய்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbu makes his Kannnada debut as a singerகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர் சங்கம் மௌன போராட்டம் நடத்தியது.

ஆனால் அதில் கலந்துக் கொள்ளாத நடிகர் சிம்பு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு கன்னட மக்கள் ஓர் பாட்டில் தண்ணீர் கொடுத்தால் போதும், அதுவே அந்த மக்களின் ஆர்வத்தை புரிந்துக் கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.

அரசியல்வாதிகள்தான் இந்த காவிரி பிரச்சினை வைத்து அரசியல் செய்கிறார்கள் என பேசியிருந்தார்.

அவரின் பேச்சுக்கு கர்நாடகாவில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் தற்போது கன்னட படமொன்றில் பாடகராக அறிமுகமாகிறார் நடிகர் சிம்பு.

இருவுதெல்லவா பிட்டு என்ற கன்னட படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

STR aka Simbu makes his Kannnada debut as a singer

மய்யம் விசில் மந்திரக்கோல் அல்ல; அரசை விமர்சிக்கும் விசில் : கமல்

மய்யம் விசில் மந்திரக்கோல் அல்ல; அரசை விமர்சிக்கும் விசில் : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan launched Maiam whistle Mobile appமக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி, கமல் ஹாசன் நடத்தி வருகிறார்.

இந்த கட்சி சார்பில் மய்யம் விசில் மொபைல் அப்ளிகேஷனை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் பேசியதாவது..

உங்கள் பகுதியில் நடக்கும் தவறு, தொடர்ந்து நடக்கும் தவறுகள் அதை சொல்ல விரும்புபவர்கள், முதலில் பத்திரிகைக்கு எழுதுவார்கள். தற்போது முகநூலில் பதிவிடுகிறார்கள்.

அதைத்தொடர்ந்து வலியுறுத்தவோ, அது நடக்கிறதா, இல்லையா என்று பார்க்க யாரும் கிடையாது.

அந்த மையமாக மய்யம், மக்கள் நீதி மய்யம் செயல்படும். இது இருக்கும் குறைகளை ஒரே நொடியில் தீர்த்து விடும் மந்திரக்கோல் அல்ல.

இது இருக்கும் குறைகளை செவிசாய்த்து கேட்பதற்கும், கண்கொண்டு பார்ப்பதற்கும் உதவும் ஒருகருவி.

தற்போதைக்கு இந்த செயலி, மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களின் கையில் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

தற்காப்பு கருதியும், மய்ய உறுப்பினர்கள் பெரும் ஆர்வத்துடன் செயல்படுவார்கள் என்பதாலும் தற்போதைக்கு உறுப்பினர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.

இது தீர்வுக்கான முதல் அடி.

இந்த கருவி மூலம் எங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் எல்லாம், எங்களுக்கு வீட்டுப்பாடம் ஆகும். நாங்கள் பரீட்சை எழுதும் நேரம் வரும் போது, அதற்கான பதில்களெல்லாம் இந்த கருவியின் மூலம் எங்களுக்கு கிடைத்திருக்கும்.

இது போலீசுக்கோ, அதிகாரிகளுக்கோ, அரசுக்கோ மாற்று அல்ல. அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அல்லது அவர்களை விமர்சனம் செய்யும் கருவியாக இருக்கும்.

மய்யம் செயலி மே 1 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

கிராம பஞ்சாயத்துகள் நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், நல்லபடி நடந்தால் அதை பாராட்டவும், நடக்கவேயில்லை என்றால் ஏன் என்பதை நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தவும் இது ஒரு உபயோகமுள்ள கருவியாக இருக்கும்.

நாங்கள் தத்தெடுத்துக் கொண்ட அதியத்தூர் கிராமத்திற்கு மே 1ல் (இன்று) செல்லவிருக்கிறோம்”

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Kamalhassan launched Maiam whistle Mobile app

காட்டு பய காளிக்கு முதல்வர் ஆகனுமா?; ரஜினியை தாக்கிய பாரதிராஜா

காட்டு பய காளிக்கு முதல்வர் ஆகனுமா?; ரஜினியை தாக்கிய பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathi raja and rajinikanthமதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கியவர் பாடலாசிரியர் யுரேகா.

தற்போது இவர் இயக்கி வரும் படம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’.

இந்தப் படத்தில் ஜெய்வந்த், ஆடுகளம் நரேன், மூணாறு ரமேஷ், மாரிமுத்து, அபிஷேக் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பேசும்போது…

‘பொதுவாக படத்தின் தலைப்பு வைப்பதில் எனக்கு உடன் பாடில்லை. குறிப்பாக இந்த படத்தின் தலைப்பு ‘கெட்டப்பய சார் இந்த காளி’ என்று வைத்திருக்கிறார்கள்.

இப்படி எல்லாம் தலைப்பு வைத்து நடிகர்களை நாம் தூக்கி விடுகிறோம்.

அப்படி பண்ணு, இப்படி பண்ணு என்று சொல்லி விடுகிறோம்.

நாம் எழுதி கொடுத்த வசனத்தை படித்து, பாடல்களை பாடி, நாளை நாட்டை ஆளுகிறேன் என்று வந்து நிக்கிறான்.

அவர்களை எல்லாம் அப்போவே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். ரசிகர்களையும் முட்டாளாக்கி இருக்கிறார்கள்.

கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என அவர்களையும் அப்போதே தடுத்திருக்க வேண்டும்.

அவர்களை தடுக்காததால் ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு நாட்டை ஆளப்போவதாக சொல்லி வருகிறார்கள்.
எல்லாம் நாம் செய்த தவறுதான்.

இப்படத்தின் இயக்குனர் யுரேகா முந்தைய படைப்புகளை பார்த்திருக்கிறேன்.

ஏதாவது நல்லது சொல்ல வேண்டும் என்று நினைக்கும்
அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.

அஜித் பிறந்தநாளில் கஜினிகாந்த் பெயரில் ஆர்யா விருந்து

அஜித் பிறந்தநாளில் கஜினிகாந்த் பெயரில் ஆர்யா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ghajinikanth trailerநாளை மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆனால் அஜித் ரசிகர்களுக்கு இது தல பிறந்தநாள் தினம். எனவே அவர்கள் விதம் விதமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

எனவே நாளை விஸ்வாசம் படத்தின் தகவல்கள் ஏதாவது வரலாம் என காத்திருக்கின்றனர்.

ஆனால் இதுவரை அது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்க ஆர்யா நடித்துள்ள கஜினிகாந்த் படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

நாளை கஜினிகாந்த் பட ட்ரைலரை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\

Arya releasing his movie Ghajinikanth Trailer on Ajith Birthday

கருவை திருடி தியா பெயரில் காசாக்கிய விஜய்?; உதவி இயக்குனர் குமுறல்!

கருவை திருடி தியா பெயரில் காசாக்கிய விஜய்?; உதவி இயக்குனர் குமுறல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Karu movie theft issue Assistant Director complaintகடந்த வெள்ளியன்று விஜய் இயக்கத்தில் உருவான தியா என்ற படம் வெளியானது.

லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் சாய்பல்லவி நடித்திருந்தார்.

இந்தப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘கரு’. ஆனால் வேறு ஒரு தயாரிப்பாளர் இதே பெயரை வைத்திருந்ததால் பிரச்சினை கோர்ட் வரை சென்றது.

அதன் பின்னர் ‘லைகாவின் கரு’ என படத்தலைப்பை மாற்றினார்கள். இதற்கும் கோர்ட் தடை விதிக்கவே, வேறு வழியில்லாமல் ‘தியா’ என்ற பெயரில் படத்தை வெளியிட்டனர்.

கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் கதை, தன் கதை தான் என்று குமுறலுடன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் பொன்கே. சந்திரகுமார் என்கிற உதவி இயக்குனர்.

இதுகுறித்து அவர் கூறும்போது…

“எனக்குச் சொந்த ஊர் திருச்சி. நான் இயக்குனர் ராஜகுமாரன் அவர்களிடம் ‘திருமதி தமிழ்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறேன்.

‘நாட்டாமை’யில் ஈரோடு செளந்தரில் தொடங்கி பல இயக்குனர்களிடம் கதை விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.

இப்படிப் பத்தாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் உதவி இயக்குனராக போராடி வருகிறேன்.

நான் எப்படிக் கதை சொல்வேன், எப்படிக் காட்சிகள் சொல்வேன் என்று என்னிடம் பழகிய நண்பர்களுக்குத் தெரியும். எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் சினிமாவில் நல்ல நேரம் என்று ஒன்று வர வேண்டும் அல்லவா? அப்படி எனக்கான நேரத்துக்காகக் காத்திருந்தேன்.

காலம் கனிந்து வந்தது. அன்பழகன் என்கிற ஒரு நண்பர் மூலம் தயாரிப்பாளர் தேடினேன். நண்பர் அன்பழகனிடம் என் படத்தின் கதையைக் கூறினேன். அவரும் இலங்கையிலிருந்து வரும் தயாரிப்பாளருக்குப் படம் பண்ணலாம் என்றார். தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொன்னதாகவும் அவர் படம் தயாரிக்கச் சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறியிருந்தார்.

படம் பற்றி முறையாகப் பேசி முன்பணம் வாங்க வேண்டியதுதான் பாக்கி. நம் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது நாமும் இயக்குனர் ஆகப் போகிறோம் என்கிற எதிர்பார்ப்புடனும் கனவுடனும் தயாரிப்பாளரைச் சந்திக்கும் தருணத்துக்காகத் தவமிருக்கத் தொடங்கிக் காத்திருந்தேன்.

என் படத்திற்கு ‘குறி’ அல்லது ‘கரு’ அல்லது ‘சிசு’ என்று மூன்று தலைப்புகளை வைத்து இருந்தேன். இந்தக் கதை என் நண்பர்கள் வட்டத்தில் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நாளிதழை பார்த்துவிட்டு நண்பர்கள் போன் செய்தார்கள். என்னப்பா உன் கதை அப்படியே ‘தியா’ என்கிற படமாக வந்திருக்கிறது. முழுக்கதையும் பேப்பரில் போட்டிருக்கிறது.

நானும் பேப்பரைப் படித்தேன். அது அப்படியே என் கதை. பதற்றம் தாங்கவில்லை எனக்கு. அப்படியே திரையரங்கம் போய் ‘தியா’ படத்தைப் பார்த்தேன்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படியே என் கதை. சிலவற்றை மட்டும் மாற்றியிருந்தார்கள். நான் வீரியமாக வசனங்கள் வைத்திருப்பேன். இதில் அந்த 5 வயதுக் குழந்தை அதிகம் பேசாமல் மாற்றியிருந்தார்கள்.

மற்றபடி தன்னைக் கருவிலேயே கொன்ற உறவினர் முதல் டாக்டர் கம்பவுண்டர் வரை கொல்வது என்கிற அடிப்படைக் கதை படத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்னுடையது.

படத்தில் வரும் பல காட்சிகள் நான் அமைத்த கதையில் வரும் காட்சிகளாகவே இருந்தன. இந்தக் கதை என் இயக்குனர் ராஜகுமாரன் உள்பட பல நண்பர்களுக்குத் தெரியும்.

இந்த நிலையில் நான் செய்வது? நான் சில ஆண்டுகளாகப் பலரிடம் கூறி வந்தது, பலருக்கும் தெரிந்தது இப்போது அது படமாக வந்திருக்கிறது. இந்தக் கதையைப் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பே நண்பர்களிடம் பேசியது, அந்த நண்பர் அன்பழகனிடம் செல்போனில் பேசியவை எல்லாம் பதிவு செய்யப்பட்டு என்னிடம் உள்ளன.

என்னிடம் தயாரான முழுத் திரைக்கதையும் உள்ளது. இந்தக் கதை என்னுடையது தான் என்று நிரூபிக்க எனக்குச் சாட்சியாக இயக்குனர் ராஜகுமாரன் உள்பட பல நண்பர்கள் உள்ளனர்.

எப்போது எங்கே அழைத்தாலும் வருவார்கள். எனக்கு ஒன்றும் வேண்டாம் ‘தியா’ ஒரு திருட்டுக்கதை என்று உலகத்துக்குத் தெரிந்தால் போதும்” என்றார்.

Vijays Karu movie theft issue Assistant Director complaint

karu complaint asst director

More Articles
Follows