‘எங்கிருந்தாலும் வாழ்க’.. பாஜக-வில் குஷ்பூ இணைந்தது பற்றிய கேள்விக்கு அமைச்சர் பதில்

‘எங்கிருந்தாலும் வாழ்க’.. பாஜக-வில் குஷ்பூ இணைந்தது பற்றிய கேள்விக்கு அமைச்சர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Minister JeyaKumarஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க செல்லும் முன் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது…

அதிமுக கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால் எங்களுடைய முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்

மாநிலத்தை பொறுத்தவரை மத்திய அரசு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பை கோரி இன்றை கூட்டத்தில் வலியுறுத்த உள்ளோம்.

மேலும் காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியது குறித்த கேள்விக்கு குஷ்பு ‘எங்கிருந்தாலும் வாழ்க…’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

TN minister Jeyakumar reaction on Khushboo joining BJP

பாலாவின் தம்பி சந்திரமெளலி தயாரிப்பில் டைரக்டர் முருகானந்தம் ஹீரோவாகும் ‘கபாலி டாக்கீஸ்’

பாலாவின் தம்பி சந்திரமெளலி தயாரிப்பில் டைரக்டர் முருகானந்தம் ஹீரோவாகும் ‘கபாலி டாக்கீஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Talkies‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “கபாலி ” .

இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படத்தின் பெயர் ” கபாலி டாக்கீஸ் “.

இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், விஷ்ணு விஷால் , கேத்தரின் தெரேசா, சூரி இவர்களுடன் கவுரவ வேடத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த ” கதாநாயகன்” படத்தின் இயக்குனராவார்.

ஏற்கனவே இவர் ” இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ” “மரகத நாணயம்” படங்களில் காமெடியில் நடித்து கலக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் மற்றும் கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி ஷீலா, சாய்பிரியா இன்னும் பலர் நடித்துள்ளனர்.

ஜெயசீலன் – முனிகிருஷ்ணன் இருவரும் கலையையும், ராதிகா – சங்கர் இருவரும் நடன பயிற்சியையும், தவசி ராஜ் சண்டை பயிற்சியையும், சினேகன், மதுரகவி, தமிழ் இயலன், விஜயசாகர் நால்வரும் பாடல்களையும் எழுத, ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பையும் சபேஷ் – முரளி இரட்டையர் இசையையும் கவனிக்க, ஆர்.சுரேஷ்குமார் இணை தயாரிப்பில் மெளலி பிக்சர்ஸ் சார்பில் பி.சந்திரமெளலி தயாரித்துள்ளார்.

கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து ரவிசீனிவாசன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இவர்
ஜி.எம்.குமார், வேலு பிரபாகரன் உட்பட முன்னனி இயக்குனர்களிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள ரவி சீனிவாசன் படத்தை பற்றி கூறுகையில்…

” .அண்ணன், அண்ணி, அவர்களின் மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் முருகானந்தம். ஒரு கட்டத்தில் அண்ணன் இறந்து விடுகிறார்.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு வலம் வந்த முருகானந்தத்திற்கு அண்ணனின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது.

அதிலிருந்து மீண்டு தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் தடம் பதித்து சாதிக்க நினைக்கிறான்.

பல தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்லி இயக்குனர் வாய்ப்பு கேட்டு அலைகிறான். கிடைக்கவில்லை. இந்த நிலையில் முருகானந்தம் தன் பால்ய நண்பனை சந்திக்கிறான்.

இவன் நிலை உணர்ந்து ‘ உனக்கு நானே வாய்ப்பு தருகிறேன் என்று கூறி முருகானந்தத்தை இயக்குனராக ஒப்பந்தம் செய்து நண்பனே படத்தை தயாரிக்கிறான். படம் முடிவடைந்தது.

எந்த நண்பன் இவனுக்காக படத்தை தயாரித்தானோ அவன் மூலமே முருகானந்தத்திற்கு பேரிடி விழுந்தது. அது என்ன? பல அதிர்ச்சிகளையும் , பேரிடர்களையும் சந்தித்து திரை உலக வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் முருகானந்தம் வென்றானா?” என்பதை வெகுஜனங்கள் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான பொழுது போக்கும் அம்சங்கள் நிறைந்த படமாக இயக்கி உள்ளேன்.

குறிப்பாக 1980ல் ஆரம்பிக்கும் கதை 2020 ல் முடியுமாறு திரைக்கதை அமைத்துள்ளேன். இந்தப் படம் முழுக்க முழுக்க சென்னையில் மந்தைவெளி மற்றும் மைலாப்பூர் பகுதிகளில் படமாக்கி உள்ளேன்.

அன்றைய சென்னை எப்படி இன்று உருமாறி உள்ளது என்பதனையும் அழகாக படம் பிடித்துள்ளேன். இதில் நிறைய சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் தான் காட்சிகள் அமைத்து இருக்கிறேன்.

சினிமாவை நேசித்து சுவாசிக்கும் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் சிறு வேடங்களில் நடித்துள்ள இயக்குனர் முருகானந்தத்தை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தி உள்ளேன்” என்றார்.

“விரைவில் வெளிக்கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. மக்கள் தங்கள் கவலை மறந்து குடும்பத்தோடு ரசிக்கும் படமாக இருக்கும் ” என்கிறார் தயாரிப்பாளர் பி.சந்திரமெளலி.

Director Bala’s brother Chandramouli turns producer

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு!

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

desiya thalaivar movieபசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது.

ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.

தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் இந்தப்படத்திற்காக 48 நாட்கள் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார்.

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார்.

மறைந்த பிரபல நடிகரும் பசும்பொன் தேவருடன் இணைந்து பயணித்தவருமான லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரனின் மகன் SSR கண்ணன் இந்தப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் உறுதுணை வகித்துள்ளார்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப சென்னையில் நடைபெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்,சௌத்ரி பேசும்போது, “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு சமூகத்தின் தலைவர் அல்ல.. அவர் தேசிய தலைவர்.. இந்த படம் வெளியாகும்போது அதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். ஜெ.எம்’பஷீரை நான் சந்தித்த ஆரம்ப காலத்திலேயே அவரிடம் தேவரின் முகச்சாயல் தெரிவதை உணர்ந்திருக்கிறேன். இதுபற்றி இயக்குனர் அரவிந்தராஜிடம் பேசும்போது கூறியும் இருக்கிறேன். இதையடுத்து தான், தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீரை நடிக்க வைக்க முடிவு செய்தோம். ஆரம்பத்தில் அவர் தயங்கினாலும், பின்னர் தேசிய தலைவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது என்கிற மகிழ்ச்சியில் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்

மறைந்த லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரனின் மகன் கண்ணன் பேசும்போது, “பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறை படம் ஆக்குகிறோம் என்றும், அதில் நான்தான் தேவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ஜெ.எம்.பஷீர் சொன்னபோது எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அவர் ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தபோது தேவரின் சாயலிலேயே அவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் தேவரின் வாழ்க்கை வரலாற்றில் அவர் நடிக்க முன்வந்ததை நான் பாராட்டுகிறேன். தேவர் வாழ்க்கை வரலாறு குறித்து எனது தந்தை கூறியுள்ள தகவல்களின் அடிப்படையிலும் மற்றும் தேவர் சமுதாயத்தை சேர்ந்த பலரிடமும் விசாரித்து, எந்த பிரச்சினையும் வராதபடி இந்த படத்த்தின் கதையை உருவாக்கியுள்ளோம் இந்தப்படத்தை அனுபவசாலியான ஒரு இயக்குனர் இயக்கும்போதுதான் அது ரசிகர்களிடம் முழுமையாக சென்றடையும் என்று நினைத்தபோது, இயக்குனர் அரவிந்தராஜ் தான் அதற்கு பொருத்தமானவர் என்பதில் சந்தேகமே இல்லை” என்று கூறினார்.

இயக்குனர் அரவிந்தராஜ் பேசும்போது, “இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாகவே இருந்தேன். காரணம் ஏற்கனவே புகழ்பெற்ற, “போற்ற பாடடி பெண்ணே” பாடலை மிஞ்சும் விதமான ஒரு பாடலை தர, அவரால் மட்டும் தான் முடியும்.. இத்தனை வருடங்களில் அவருடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுதான். இந்த படத்தில் நீங்கள் இசையமைக்க ஒப்புக்கொண்டால் அதுவே எனக்கு 60 சதவீத வெற்றி என அவரிடம் கூறினேன். அவரும் புன்னகைத்தபடியே, “இனி வரும் நாட்களில் எங்கெங்கும் தேவர் பற்றிய புகழ் பாடப்படும் வேண்டும் என்றால் அது இந்த படத்தின் பாடல்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு சிறப்பாக பாடல்களை உருவாக்கி தருகிறேன்” என உறுதியளித்தார்..

இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்குவதற்காக தேவர் பற்றிய பல புத்தகங்களை தேடித்தேடி படித்தேன். அப்போதுதான் அவர் தேசியவாதி மட்டுமல்ல.. மிகப்பெரிய ஆன்மீகவாதி என்பதையும் தெரிந்து கொண்டேன். இன்னும் சொல்லப்போனால், அவரே எனக்குள் இறங்கி பல கருத்துகளை சொல்வது போல உணர்ந்தேன்.. சில நேரங்களில் மேற்கொண்டு கதையை நகர்த்துவதற்கு ஏதோ ஒரு தடங்கள் ஏற்படும்போதெல்லாம், யாரோ ஒருவர் மூலமாக தானாகவே அந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்தபோதெல்லாம், தேவரே நேரடியாக வந்து ஆலோசனைகள் சொன்னது போலவும் அவருடைய கதையை அவரே வடித்து எடுத்து இருக்கிறார் என்பது போலவும் தான் உணர்ந்தேன். தேவர் ஐயா சொல்லச்சொல்ல நான் இந்த கதையை எழுதி இருக்கிறேன் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

தேவர் ஐயாவின் உருவத்தில் ஜெ.எம்.பஷீர் கிடைத்து விட்டாலும், காந்திஜி, நேதாஜி, காமராஜர் போன்ற தலைவர்களின் சாயல்களிலும் உள்ள நடிகர்களை தேர்ந்தெடுப்பதற்காக கிட்டத்தட்ட 2,000 பேருக்கு நாங்கள் ஒப்பனை செய்து அதிலிருந்து மிகச்சரியான தோற்றம் கொண்ட நபர்களை தேர்ந்தெடுத்து உள்ளோம். படம் பார்க்கும் உங்கள் அனைவரையும் அவர்கள் ஒவ்வொருவரும் வியப்பில் ஆழ்த்துவார்கள்” என்று கூறினார்.

பசும்பொன் தேவராக மாறி இருக்கும் நாயகன் ஜெ.எம்.பஷீர் பேசும்போது, “இந்த படத்திற்காக எனக்கு பசும்பொன் தேவர் மேக்கப் போட்டபோது என்னாலேயே நம்ப முடியவில்லை.. அதன்பிறகுதான் தேவர் அய்யாவை பற்றிய புத்தகங்களை தேடித்தேடி படித்தேன் அதன்பிறகு தேவரின் பாதையை பின்பற்றவும் ஆரம்பித்தேன். இந்த படத்தில் நடிப்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தேன். இந்த படத்தில் என்னுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் அப்படியே பசும்பொன் தேவர் ஐயா போலவே இருக்கிறீர்கள் என பாராட்டினார்கள்.. இதுபோன்ற ஒரு வரலாற்று படத்தை எடுப்பதற்கு, ஊமை விழிகள், உழவன் மகன் போன்ற பிரம்மாண்டமான படங்களை கொடுத்த இயக்குனர் அரவிந்தராஜ் தான் பொருத்தமான நபர்.. அவர் இந்த படத்திற்கு கிடைத்தது மிகப்பெரிய வரம். என் வாழ்க்கையில் நான் இந்த ஒரு படத்தில் மட்டும் நடித்தால் மட்டும் போதும் என்கிற அளவுக்கு இதை மிகப்பெரிய படமாக உருவாக்குவோம்.

இந்த படத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகியபோது,, என்னை பார்த்ததும் நீங்கள் தேவர் போலவே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.. தேவர் பற்றிய உண்மையான நிகழ்வுகளை படமாக்குவீர்களா என்று கேட்டார். அவரிடம் நாங்கள் உறுதி அளித்தோம். மேலும் தனது முதல் படமாக நினைத்து இதற்கு அற்புதமாக இசையமைத்து தருவதாகவும் இசைஞானி இளையராஜா வாக்களித்தார்” என்று பேசினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக படத்தின் நாயகன் ஜெ.எம்.பஷீர் அவர்களின் பிறந்த நாள் (அக்டோபர் 12) விழா கொண்டாடப்பட்டது.

தொழில்நுட்ப குழுவினர் விபரம்

இயக்கம்: ஆர்.அரவிந்தராஜ்

இசை : இசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவாளர்: அகிலன்

படத்தொகுப்பு : சரவணன்-சூரஜ் பிரகாஷ்

கலை இயக்குனர் : மணிமொழியன் ராமதுரை

ஒப்பனை: வீரா சேகர்

ஆடை வடிவமைப்பு: செல்வம்-வீரபாரதி

தயாரிப்பு நிர்வாகி :M.சேதுபாண்டியன்

Ilayaraja to score music for Devar biopic

ரஜினியின் ‘எந்திரன்’ கதை திருட்டு வழக்கு; ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஷங்கர் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு.

ரஜினியின் ‘எந்திரன்’ கதை திருட்டு வழக்கு; ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஷங்கர் சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankar Rajinikanth1996 ஆம் ஆண்டு “இனிய உதயம்” தமிழ் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் எழுதிய “ஜுகிபா” கதை வெளியானது. அதே கதை மீண்டும்” தித்திக் தீபிகா “என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன்” திரைப்படம் வெளியான பின்பு தான் ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து எழுத்தளார் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் டைரக்டர் சங்கர் இருவருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார்.

அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் எந்திரன் திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதிமாறன் மீது காப்புரிமை சட்டப்படி புகார் அளித்திருந்தார்.

1996 இல் தான் எழுதிய கதையை திருடி எந்திரன் எனும் திரைப்படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் எனவே இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரை நீண்ட விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போலீசார் இறுதியில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.

இதனால் இந்த வழக்கை எழும்பூர் 13 வது நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் கிரிமினல் வழக்காக இயக்குனர் ஷங்கர் மீதும், தயாரிப்பாளரான கலாநிதி மாறன் மீதும் தொடுத்திருந்தார் .

அந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட இருவரும் எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி 2011ல் சம்மன் அனுப்பப்பட்டது.

அந்த சம்மனை அடுத்து இயக்குனர் ஷங்கரும் கலாநிதிமாறனும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு சட்டப்படி செல்லாது.

நாங்கள் கதையை திருடவில்லை எனவே அந்த வழக்கு செல்லாது என உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையிட்டனர்.

எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.
இந்த வழக்கு கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அந்த வழக்கில் 6 .6.2019 அன்று நீதிபதி திரு. புகழேந்தி அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில்…

கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது எனக்கூறிய நீதிமன்றம் கதை ஒரே மாதிரி இருப்பதாக கூறி கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டு காட்டி அதன்மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது.

அதனால் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்த உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் அம்சமாக இயக்குனர் சங்கர் பிரபலமானவர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகும் போது அங்கு கூட்டம் கூடுவது மற்றும் அலுவலக இடையூறுகள் ஏற்படும் என்பதால் நீதிமன்றத்திற்கு தேவைப்படும்போது மட்டும் அவர் ஆஜரானால் போதும் எல்லா வாய்தாவிற்கும் அவர் ஆஜராக தேவையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்க இருந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இயக்குனர் சங்கர் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இயக்குனர் சங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஒரு முறை கூட ஆஜராகவில்லை, இதே எழுத்தாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கில் உயர்நீதிமன்றம் சாட்சியம் அளிக்குமாறு உத்தரவிட்ட பிறகும் ஷங்கர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Director Shankar appeals to Supreme Court for enthiran film story

BREAKING காங்கிரஸில் இருந்து விலகல்.; சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் எழுதிய குஷ்பூ

BREAKING காங்கிரஸில் இருந்து விலகல்.; சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதம் எழுதிய குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

khushboo sonia gandhiதென்னிந்திய சினிமாவை கலக்கியவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் இவருக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் எல்லாம் உள்ளனர்.

பிரபல நடிகையான இவர் தற்போது அரசியலில் கலக்கி வருகிறார்.

முதலில் தி.மு.க வில் இணைந்தார். பின்னர் 2016-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

காங்கிரஸில் இணைந்த அவருக்கு அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இதனிடையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்த போதிலும் அதற்கு குஷ்பூ ஆதரவு தெரிவித்திருந்தார்.

எனவே விரைவில் குஷ்பூ பாஜகவில் இணையப் போகிறார் என தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை நான் விடுவித்து கொள்கிறேன் எனவும் குஷ்பு அறிக்கை விடுத்துள்ளார்.

அதில்… அரசியல் களத்துடன் தொடர்பில்லாதவர்கள், கட்சிக்காக உழைக்க நினைக்கும் தன்னைப் போன்றவர்களிடம் அதிகாரம் செலுத்துகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியாகாந்திக்கு நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Khushboo quits congress, likely to join BJP

பெயரை கெடுத்துக் கொள்ள கூடாது..; விஜய்சேதுபதி படத்திற்கு த.பெ.தி.க பொ.செ. எதிர்ப்பு

பெயரை கெடுத்துக் கொள்ள கூடாது..; விஜய்சேதுபதி படத்திற்கு த.பெ.தி.க பொ.செ. எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi in muralitharan biopicஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு ற்றை திரைப்படமாக உருவாகவுள்ளது என்பதை நாம் பார்த்தோம்.

இதில நாயகனாக நடிக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி என அதிகாரப்பூர்வமாக ஓரிரு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி , இலங்கை கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக பேட்டியளித்துள்ளார் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன்.

அவர் கூறியதாவது…

ஈழதமிழர்களை கொடூரமாக கொன்று , சிங்கள பேரினவாத அதிபர் ராஜபக்சேவிற்கு அரசிற்கு துணை போனவர் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.

அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படத்தில் தமிழக சிறந்த நடிகர் விஜய்சேதுபதி நடிப்பது வேதனையளிக்கிறது.

தனக்கு தமிழ் தெரியாது என்பதை பெருமையாக சொல்ல கூடியவர் முத்தையா.

சிங்கள மொழியில் மட்டுமே பேசுபவர். அப்படிபட்டவரின் கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்தால் அது உலக தமிழர்கள், ஈழதமிழர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.

நடிப்பது தொழில் என்று விஜய்சேதுபதி சொன்னால் அதை ஏற்கமுடியாது. இது திரைப்படம் தான் என்று சமாதானம் சொல்லகூடாது.

தந்தை பெரியார் கருத்துகளுக்கும், பெரியாருக்கும் பற்றுடையவராக நடிகர் விஜய்சேதுபதி இருந்தாலும் கூட , அவரது செயல் தமிழ் இனத்திற்கு மாறாக இருக்குமானால் அதை தந்தை பெரியார் திராவிட கழகம் கண்டிப்பாக எதிர்க்கும்.

தமிழ்மக்கள் மத்தியில் மனிதாபிமானி, எளிமையானவர், முற்போக்கானவர் என்ற எடுத்த பெயர்களை விஜய்சேதுபதி கெடுத்து கொள்ளகூடாது.

மக்கள் செல்வராக விஜய்சேதுபதி மக்கள் மனதில் நிலைக்க வேண்டுமானால் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அப்படி படம் உருவானால் அந்த திரைப்படத்தை திரையிட நாங்கள் அனுமதிக்க மதிக்க மாட்டோம் எனவும் தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Dravidian outfit urges Vijay Sethupathi to give up Muttiah Muralidharan biopic

More Articles
Follows