ஆஸ்பத்திரியில் நடிகை குஷ்பூ திடீர் அனுமதி.; என்னாச்சு.?

ஆஸ்பத்திரியில் நடிகை குஷ்பூ திடீர் அனுமதி.; என்னாச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் என பன்முகம் கொண்டவர் நடிகை குஷ்பூ.

இந்த நிலையில், நடிகை குஷ்பூ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள குஷ்பூ.

அதில், “இடுப்பு எலும்புக்காக மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் அது முழுவதுமாக குணமாகும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

actress Khusbhu admitted to the hospital

போதைப் பொருள் ரொம்ப சீரியஸ்.; பெற்றோர்கள் பிள்ளைகளை நண்பர்களாக நடத்தனும் – கார்த்தி

போதைப் பொருள் ரொம்ப சீரியஸ்.; பெற்றோர்கள் பிள்ளைகளை நண்பர்களாக நடத்தனும் – கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி*

கார்த்தி பேசியதாவது…

இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது.

முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.

பள்ளிகளுக்கு அருகே கூட போதைப் பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான்.

ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியும். இது சீரியஸான விஷயம்.

போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும்.

போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்”.

இவ்வாறு கார்த்தி பேசினார்.

கார்த்தி

karthi expressed his awareness about the danger of drugs

‘வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ் ஆனது.; FDFS போல கமல் ரசிகர்கள் உற்சாகம்

‘வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ் ஆனது.; FDFS போல கமல் ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு.’

இதில் கமலுடன் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

அப்போதே இத்திரைப்படம் பெரும் வசூலைக் குவித்து மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது இந்த படம் டிஜிட்டல் செய்யப்பட்டு இன்று ஜூன் 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆனது.

சென்னையில் கமலா வெற்றி எஸ்கேப் பலாசோ பிவிஆர் உள்ளிட்ட பல திரையரங்குகளில் இந்த படம் வெளியானது.

முதல் நாள் இந்த படத்தை பார்ப்பது போல கமல் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க முன்பதிவு செய்து இருந்தனர். இந்த திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் திரையிடப்பட்டது.

தமிழகம் மட்டுமல்லாமல் பெங்களூரிலும் ‘வேட்டையாடு விளையாடு’ ரீ ரிலீஸ் ஆனது. அங்கும் ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு அளித்து முதல் நாள் முதல் படம் பார்ப்பது போல கொண்டாடி மகிழ்ந்தனர்.

வேட்டையாடு விளையாடு

Vettaiyadu Vilaiyaadu Rerelease Kamal fans celebration like fdfs

பிறந்த குட்டி தேவதையின் பெயர் என்ன.? ராம்சரண் – உபாசனா அறிவிப்பு

பிறந்த குட்டி தேவதையின் பெயர் என்ன.? ராம்சரண் – உபாசனா அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியருக்கு ஜூன் மாதம் 20ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து இந்த நட்சத்திர தம்பதிகள் முதன் முதலாக குழந்தையுடன் பொதுவெளியில் தோன்றினர்.

ஹைதராபாத் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராம்சரண் பேசுகையில்…

“உங்கள் அனைவருக்கும் தெரியும். எங்களுடைய குழந்தை கடந்த இருபதாம் தேதியன்று பிறந்தார். தாயும் சேயும் நன்றாக இருக்கிறார்கள்.

டாக்டர் சுமனா மனோகர், டாக்டர் ரூமா சின்ஹா, டாக்டர் லதா காஞ்சி பார்த்தசாரதி, தேஜஸ்வினி உள்ளிட்ட சிறந்த சிகிச்சையை வழங்கிய மருத்துவ குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் ஆதரவினை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது.

மகள் பிறந்த செய்தியை கேட்டவுடன் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு நிலையான ஆதரவையும், நிபந்தனையற்ற அன்பையும் செலுத்தி வரும் ரசிகர்கள்.. அதனை என்னுடைய மகளுக்கும் தருவார்கள் என நம்புகிறேன்.

என் மகளுக்கு அவள் பிறந்த தேதியிலிருந்து 21 ஆம் தேதியன்று பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளோம். அவளுக்கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம்.

அது என்ன பெயர் என்பதனை விரைவில் உங்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். இந்த தருணத்திற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம்.

எங்களுடைய குட்டி தேவதை வீட்டிற்கு வருகை தந்ததில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். கடவுள் எங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.

இந்த தருணத்தில் உண்மையை சொல்ல வேண்டுமென்றால்… என்னுடைய உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனது மகளைப் பற்றி மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து மனமுவந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ராம்சரண் - உபாசனா

Ramcharans Upasanas new born baby name update

‘புட்ட பொம்மா..’ பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடி வாழ்த்திய பிரபல நாயகி

‘புட்ட பொம்மா..’ பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடி வாழ்த்திய பிரபல நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் தன் 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்களும் திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் விஜய் தற்போது நடித்துவரும் ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நா ரெடி என்ற முதல் சிங்கிள் ட்ராக் வெளியானது.

இந்த நிலையில் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட நாயகி பூஜா ஹெக்டே விஜய்க்கு ஒரு வீடியோ பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பூஜா ஹெக்டே

அந்த வீடியோ ‘பீஸ்ட்’ பட சூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்டதாகும்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘புட்ட பொம்மா…’ என்ற பாடலுக்கு விஜய் மற்றும் பூஜா இருவரும் இரு குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் வீடியோவாக உள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய்

Beast heroine wishes Vijay with Butta Bomma dance video

நடிகர் கவின் பிறந்தநாளை கொண்டாடிய டான்ஸ் மாஸ்டர் சதீஷ் & டீம்

நடிகர் கவின் பிறந்தநாளை கொண்டாடிய டான்ஸ் மாஸ்டர் சதீஷ் & டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘டாடா’ படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கவின் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் ‘அயோத்தி’ பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை

இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.

இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவின் படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் கவின் பிறந்தநாளை நேற்று ஜூன் 22-ம் தேதி கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், இவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கவின்

actor kavin celebrate his birthday in shooting spot

More Articles
Follows