தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் 90களில் உச்சபட்ச நட்சத்திரமாக லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த நடிகை குஷ்பூ.
ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடன் ஜோடி நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், தனது 8 வயதில் தந்தையால் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் அதை அவர் எவ்வாறு எதிர்த்து வெளியில் வந்தார் என்பது குறித்தும் மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தார்.
இது குறித்து குஷ்பூ சமீபத்தில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.
உங்களின் இந்த மோசமான அனுபவம் பற்றி நீங்கள் மிகவும் தைரியமாக குரல் கொடுத்துள்ளீர்கள் . அதன் மூலம் நீங்கள் மக்களுக்கும் இன்றைய இளைய சமூகத்தினருக்கும் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.
இது போன்ற துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு உங்களின் அறிவுரை என்ன?
என கேட்கப்பட்டது.
குஷ்பூ பேசுகையில், “நிச்சயமாக அவர்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். நான் அதை மிகவும் தாமதமாகவே வெளிப்படுத்தினேன். ஒவ்வொருத்தருக்கும் பிரச்சனைகள், குடும்பம், இமேஜ் இப்படி பல காரணங்களால் உங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து நீங்கள் வெளிப்படையாக பேச தயக்கம் இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நீங்கள் சொல்வதை கேட்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அன்று எங்களுக்கு தீர்ப்பு சொல்ல யாருமில்லை.” என பேசினார்.
Kushboo’s description of sexual abuse by her father when she was 8 years old