BREAKING அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அறிவித்தார் முதல்வர்

BREAKING அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அறிவித்தார் முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamyதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருந்தது.

தற்போது 1 வயதை கூட்டி 59லிருந்து 60 ஆக உயர்த்தி ஓய்வு பெறும் வயதாக அறிவித்துள்ளனர்.

இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

TN increases govt employees retirement age to 60

BREAKING 9 10 11 மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என தமிழக முதல்வர் அறிவிப்பு

BREAKING 9 10 11 மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2020- 21 கல்வியாண்டில் 9, 10, 11 மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

10ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு இந்தாண்டு இல்லை என அறிவிப்பு.

இது சட்டமன்ற 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

தற்போதுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கால் கடந்த 1 வருடமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.

எனவே பள்ளி வகுப்புகள் பாதிப்பு காரணமாக மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்வி கற்று வருகின்றனர்.

மேலும் பாடத்திட்டங்களையும் 40% தமிழக அரசு குறைத்தது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

All pass for class 9,10, 11 students in TN

அரக்கோணம் ADMK வக்கீல்கள் ஆலோசனை கூட்டத்தின் பின்னணி MLA-வுக்கு வந்த ‘தோல்வி பயம்

அரக்கோணம் ADMK வக்கீல்கள் ஆலோசனை கூட்டத்தின் பின்னணி MLA-வுக்கு வந்த ‘தோல்வி பயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரக்கோணம் தொகுதியில் உள்ள அதிமுக வக்கீல்களை தனது பிறந்த நாளை முன்னிட்டு திடீரென அழைத்து ஆலோசனை கூட்டம் போட்டார் எம்.எல்.ஏ.சு.ரவி.

அரக்கோணம் தொகுதியில் 2 முறை தொடர்ச்சியாக ரவி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்ற போதிலும் ஒரு முறைகூட இப்படி தொகுதி வக்கீல்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியதில்லை.

இந்த திடீர் ஆலோசனை கூட்டத்தின் பின்னணியில் வரும் தேர்தலில் தனது செல்வாக்கு கண்டிப்பாக செல்லாக்காசாக போய்விடும் என்ற அச்சமும், கடந்த முறை போல இல்லாமல் எதிர்க் கட்சியான திமுக சார்பில் வக்கீல் எழில் இனியன் என்பவரை வேட்பாளராக களம் இறக்க அந்த கட்சி முடிவு செய்துதிருப்பதாக வெளியாகும் தகவல்களால் பதட்டம் அடைந்த எம்.எல்.ஏ.ரவி திடீரென வக்கீல்கள் உதவியை நாடியிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்த தொகுதிவாசிகள்.

எம்.எல்.ஏ.ரவியும் ஒரு வக்கீல்தான். கடந்த 2 முறையும் எதிர்த்து போட்டியிட்டவர்களின் பலவீனம் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல “தனி அரவணைப்பு” நடத்தி தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறாராம்.

அதோடு, ஜெ., முதல்வராக இருந்த கால கட்டத்தை விட எடப்பாடி முதல்வரான இந்த 4 ஆண்டு காலத்தில் அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவியின் “அசுர வளர்ச்சி” அமைச்சர்களை மிஞ்சியுள்ளதாம்.

இதை தெரிந்து கொண்டதால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் அரக்கோணம் எம்.எல்.ஏ.ரவியை வெளுத்து வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, ஆளும் கட்சியின் ஆதரவு, கரன்சி செல்வாக்குடன் அசுர பலத்தோடு களம் இறங்க தயாராகியுள்ள வக்கீல் ரவியை தோற்கடித்து அரக்கோணத்தை மீண்டும் திமுக கோட்டை ஆக்க திமுகவும் ஒரு வக்கீலை களம் இறக்க தீர்மானித்து உள்ளது.

இதற்காக அரக்கோணம் தொகுதி முழுதும் ஏராளமான திமுக வக்கீல்கள் ஒரு படையாக களம் இறங்கி சத்தமில்லாமல் பணியாற்றி வருகிறார்கள்.

அதன் விளைவாக அதிமுக எம்.எல்.ஏ.ரவிக்கு மிக நெருக்கமாக வலது கரமாக செயல்பட்ட பிரபல வக்கீல் லோகாபிராம் திடீரென திமுக மாவட்ட செயலாளர் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இந்த சம்பவம் எம்.எல்.ஏ.ரவிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருக்காதா… கடந்த 2 தேர்தல்களிலும் ரவி வெற்றிக்கு பெரும் பக்க பலமாக செயல்பட்டவர் இந்த வக்கீல் லோகாபிராமாம். அதோடு, இவர் அரக்கோணம் பகுதியின் அரசு வக்கீலாகவும் இருக்கிறார்.

ஒரு அரசு வக்கீல் திடீரென கட்சி மாறியிருப்பதால்தான் ரவி பதட்டம் அதிகரித்து உள்ளது.

அதோடு தொகுதியிலும் ரவிக்கு பொதுமக்கள் மத்தியிலும், அவர் சார்ந்த ஆளும் கட்சியிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது.

இதை எல்லாம் தெரிந்து கொண்ட பின்னர் திடீரென அரக்கோணம் தொகுதி அதிமுக வக்கீல்களை அழைத்து ரவி எம்.எல்.ஏ. ஆலோசனை கூட்டம் போட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்திலும் “வெயிட்” ஆன கவனிப்பு இருந்ததாம்.

ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்கு தோல்வி பயம் வந்து விட்டதோ…

Reason behind ADMK lawyers meeting in Arakkonam

MLA Ravi

சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் ‘மாயமுகி’

சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் ‘மாயமுகி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mayamugiடிபிகே இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் டில்லி பாபு.கே தயாரிக்கும் படம் ‘மாயமுகி. சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்தை பி.எம்.ரவி நாயக் இயக்குகிறார்.

கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தில், ’இன்னொருவன்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘நீர்ப்பறவை’, ’வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் மனோ சித்ரா நாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ரவிதேஜா வர்மா நடிக்கிறார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம் என்றாலும், தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சத்யதேவ், ‘தூத்துக்குடி’ பட புகழ் கார்த்திகா,
ஆம்னி, சுவாதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் பேண்டஸி திரைப்படங்களின் வருகை மிக மிக அரிதாகி வரும் நிலையில், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் ஆன்மீக பேண்டஸி திரைப்படமாக இப்படம் உருவாகிறது. பேண்டஸி ஜானர் திரைப்படமாக இருந்தாலும், இப்படத்தின் கதைக்களம் சமூக பிரச்சனைகள் குறித்தும் பேசுகிறது.

பிரகாஷ் என்.பத்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜெயன் பாலா இசையமைக்கிறார். காதல் மதி பாடல்கள் எழுத, டேனியல் – சந்தோஷ் படத்தொகுப்பு செய்கிறார். சந்திரமோகன் கலையை நிர்மாணிக்க, ஸ்டார் விஜய் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். சாய் பாரதி நடனம் அமைக்க,
மக்கள் தொடர்பாளர்களாக சுரேஷ் சுகு – தர்மதுரை
பணியாற்றுகிறார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பெரிய பொருட்ச்செலவில் மிக பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் ’மாயமுகி’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

Mayamukhi – A big-budgeted fantasy entertainer nears completion

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மோடி அமைச்சரவை ஒப்புதல்

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மோடி அமைச்சரவை ஒப்புதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Narayanasamy (2)தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ளது.

புதுச்சேரியில் 2016 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 15 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சி அமைத்தது. மூன்று தி.மு.க., – MLAக்கள், மாகி தொகுதி சுயேச்சை MLA, ஆட்சிக்கு ஆதரவளித்தனர்.

முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார்..

2020 கடந்தாண்டு ஜூனில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த காரணத்தினால் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்.

இதனால் 18ஆக இருந்த காங்கிரஸ் கூட்டணி கட்சியிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக ஆனது.

இந்தாண்டு 2021 ஜனவரியில்… முதல்வர் நாராயணசாமி உடனான மோதல் காரணமாக பொதுப்பணித்துறை அமைச்சரும், வில்லியனூர் தொகுதி MLA நமச்சிவாயம் மற்றும் உசுடு தொகுதி MLA தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் ராஜினாமா செய்து பாஜக.வில் இணைந்தனர்.

எனவே காங். கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 17லிருந்து 15ஆக ஆனது.

இதன் பின்னர் புதுச்சேரி யானம் MLA மல்லாடி கிருஷ்ணா ராவ் கடந்த 15ஆம் தேதியும் அடுத்த நாள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் நகர் MLA ஜான்குமார்‌ இருவரும் ராஜினாமா செய்தனர்.

அதே பிப்ரவரி 16 இரவில்… புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்த கிரண் பேடியை விடுவித்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக ஜனாதிபதி ஒப்படைத்தார்.

நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார் ஆளுநர் தமிழிசை.

பிப்ரவரி 21ஆம் தேதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் MLA லட்சுமி நாராயணன் & திமுகவை சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி MLA வெங்கடேசன் இருவரும் ராஜினாமா செய்தனர்.

மேலும் கீதா ஆனந்தன் MLAவும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆக மொத்தம் புதுச்சேரியில் 7 MLAக்கள் பதவி விலகியதால், 17ல் இருந்து 10ஆக ஆனது. இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது மெஜாரிட்டியை இழந்தது.

இதனால் சட்டசபையில் நாராயணசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

பெரும்பான்மை இல்லாமல் போனதால் நாராயணசாமி அரசு கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்திரராஜன், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்படி, இன்று பிப்ரவரி 24ல் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Union Cabinet approves President’s Rule in Pondicherry

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு ‘மோடி மைதானம்’ என பெயர் மாற்றம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு ‘மோடி மைதானம்’ என பெயர் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குஜராத் மாநில ஆமதாபாத்தின் மோதிராவில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம், உலகின் மிகப்பெரிய மைதானம் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்றுள்ளது.

இந்த மைதானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

இந்நிலையில், உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எனப் பெயர் பெற்றுள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம், *நரேந்திர மோடி மைதானம்* எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமித்ஷா பேசுகையில்…, ‘உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கம் இங்கு கட்டப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம். 1,32,000 இருக்கைகள் கொண்ட இந்த அரங்கம் நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று அழைக்கப்படும்,’ என்றார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் பகலிரவு டெஸ்ட்டாக ஆமதாபாத்தில் இன்று முதல் நடைபெறுகிறது.

மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், 2-வது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிரமாக முயற்சிக்கவுள்ளன.

முதலிரு டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ள இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ப்ளாஷ்பேக்…

ஆமதாபாத்தில் சபர்மதி நதியின் கரையில் அமைந்துள்ள இந்த மைதானம், 1982-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

அதன் பின்னர் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக இதை மாற்ற 2015-இல் முடிவு செய்யப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் 2020 பிப்ரவரியில் நிறைவடைந்தன.

மைதான சிறப்பம்சங்கள்…

உலகிலேயே வேறெந்த மைதானத்திலும் இல்லாத வகையில், வீரர்களுக்காக 4 ஓய்வறைகள் உள்ளன. தனித்தனியே உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.

இதன்மூலம் 90,000 பேர் அமரும் வசதி கொண்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை முறியடித்து, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ளது.

தலா 25 பேர் வசதியாக அமரக் கூடிய 76 கார்ப்பரேட் பாக்ஸ் கேலரிகளும் அடங்கும்.

சுமார் 63 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு 4 நுழைவு வாயில்கள் உள்ளன.

பிரம்மாண்ட விளக்குக் கம்பங்களுக்குப் பதிலாக, மைதானத்தின் மேற்கூரை விளிம்புகளில் வட்ட வடிவில் எல்இடி ஃப்ளட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு ஆட்டங்களின்போது தெளிவான காண்புநிலை இருக்கும் வகையிலும், மைதானத்தில் நிழல் விழாத வகையிலும் அவை பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

World’s Largest ground Renamed Narendra Modi Stadium

More Articles
Follows