‘சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..; ரூ.12,110 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார் எடப்பாடி

Edappadi Palaniswamiஇன்று பிப்ரவரி 5 தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது… வேளாண்துறைக்கு அதிமுக அரசு முக்கயத்துவம் அளித்து வருகிறது.

சட்டசபை விதி 110ன் கீழ் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்

பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

கொரோனா மற்றும் இதர புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த அதிமுக அரசு சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்,’ என தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இதற்கு முன் கடந்த 2016ல் ஆண்டில் விவசாய கடன்களை தமிழக அரசு ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TN govt announces Rs 12,110 cr farm loan waiver for over 16 lakh farmers

Overall Rating : Not available

Latest Post