தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதிக்காக நேற்று வரை காத்திருந்தது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 16ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
45 நாட்களுக்கு மேலாகியும் கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார்.
இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
அவரின் ஒப்புதலுக்கு ஏற்கனவே கால தாமதம் ஆன நிலையில், மேலும் அதற்கான அவகாசம் கேட்டிருந்தார் ஆளுநர்.
இதனிடையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.
இதையடுத்து, ஆளுநர் மசோதாவுக்கு இன்று ஒப்புதல் அளித்தார்.
எனவே ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக இன்று மாலை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்று நன்றி தெரிவித்தார்.
எனவே 7.5% ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால், மருத்துவப்படிப்பிற்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு பொது பிரிவினருக்கு 520, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 360, பிற்படுத்தப்பட்டோருக்கு 470, மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 458 ஆக கட்ஆப் மதிப்பெண் இருந்தது.
இந்தாண்டு 7.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும்.
அதேசமயம் இந்த முறை 500க்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதிகமாக உள்ளதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை சரி செய்ய 7.5% இடஒதுக்கீடு போக மீதிமுள்ள இடத்துக்கான கட்ஆப் மதிப்பெண்ணை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 70 முதல் 100 மதிப்பெண்கள் வரை கட்ஆப் உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
High cut-off likely for medical admissions this year in TN