ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து..; தமிழக முதல்வர் அதிரடி

கடந்த 2019 ஜனவரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும் அரசு ஊழியர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டது.

இதன் பின்னர் அரசு துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் கோரிக்கை வைத்து இருந்தன.

இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

TN CM important desicion on government employees

Overall Rating : Not available

Latest Post