கிரிக்கெட் கோப்பையை திட்டம் போட்டு திருடு(ற)ம் கூட்டம்

கிரிக்கெட் கோப்பையை திட்டம் போட்டு திருடு(ற)ம் கூட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thittam Poattu Thirudura Kootam movie stillsசுதர் இயக்கத்தில் கயல் சந்திரன் நாயகனாக நடிக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்.

மிகவும் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.

இவர்களுடன் சாட்னா டைடஸ், சுமார் மூஞ்சி டேனி, சாம்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அஸ்வத் இசையமைக்க, கயல் சந்திரனின் அண்ணன் ரகுநாத் தயாரித்துள்ளார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படம் இதுவரை வெளியான கிரிக்கெட் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆம்.. இது கிரிக்கெட் கோப்பையை திருடுவதை கதைக்கருவாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள கிரிக்கெட்டை மையப்படுத்திய பாடலை வெங்கட் பிரபு, பிரேம்ஜி இணைந்து பாடியுள்ளனர்.

விஜய்25+மெர்சல் 50… ஒரே கல்லில் 2 மாங்கா அடிக்க திட்டம்

விஜய்25+மெர்சல் 50… ஒரே கல்லில் 2 மாங்கா அடிக்க திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayவிஜய் தன்னுடைய சினிமா கேரியத்தில் 25வது வருடங்களை கடந்துவிட்டார்.

அவரின் 25வது வருடதில் வெளியான படம் மெர்சல்.

தற்போது இப்படம் 50 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது.

எனவே, விஜய்யின் 25வது வருடத்தையும், மெர்சல் 50வது நாள் கொண்டாட்டத்தோடு சேர்த்து பிரம்மாண்டமாக கொண்டாட ரோஹினி சினிமாஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தகவலை திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண் அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Happy to announce #Thalapathy @actorvijay s 25 years mark along with #Mersal 50 will be celebrated grandly in ur very own @RohiniSilverScr
Expect Big ! Experience Big ! #Fansfort

— Rhevanth Charan (@rhevanth95) November 16, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்களிடம் விசாரணை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்களிடம் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jalli kattu protestகடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி லட்சக்கணக்கானோர் மெரினாவில் திரண்டனர்.

ஆரம்பத்தில் அறவழியில் இந்த போராட்டம் தொடங்கியது.

ஆனால் ஒரு சிலரால் இறுதியில் தடியடியில் முடிந்தது.

அந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் தற்போது விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது.

இதில் ஒரு சில நடிகர்களும் நேரிடையாக கலந்துக் கொண்டனர்.

அவர்களை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பபடவுள்ளதாக ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி விசாரணை செய்யும் நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் விஜய், RJ பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய விவசாயிகள் நாடாளுமன்றத்திற்கு கமல் வாய்ஸ்

அகில இந்திய விவசாயிகள் நாடாளுமன்றத்திற்கு கமல் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanடெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் நஙம்பர் 20-ம் தேதி முதல் 3 நாள்கள் விவசாயிகள் நாடாளுமன்றம் என்ற பெயரில், அகில இந்திய விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது.

இதில் நாடு முழுவதுமிருந்து 172 விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொள்கின்றனர்.

இதில் விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக அகில இந்திய அளவில் விவசாயிகள் போராட்டக்குழு ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து விழிப்புணர்வு போர்டு ஒன்றை ஏந்தியபடி தான் நிற்கும் படம் ஒன்றை நடிகர் கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“விவசாயிகளுக்கு கடன் படாதவர் யார். அவர்கள் குரல் வலுப்பெறச் செய்யுங்கள்” என்றும் நடிகர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பார்த்திபனின் அடுத்த அடல்ட் அதிரடி… உள்ளே வெளியே 2

பார்த்திபனின் அடுத்த அடல்ட் அதிரடி… உள்ளே வெளியே 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor parthiban நேற்று நடிகர் பார்த்திபன் தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது தன் அடுத்த படமாக உள்ளே வெளியே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக தன் கவிதை ஸ்டைலில் வெளியிட்டுள்ளார்.

உள்ளே வெளியே படம் வெளியான சமயத்தில் ஆபாச படம், டபுள் மீனிங் கலவை என பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் வழக்கம்போல படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தன் இயக்கத்தில் பிரபலங்கள் நடிக்கவில்லை எனவும், பிரபல இயக்குனர்களின் படங்களில் நான் நடிக்கவில்லை எனவும் அந்த கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கவிதை இதோ…

ஆயிரம் அடிக்கும் அடியில்

ஆழ்துளை கலைக்கிணற்றில்

அகழ்வாய்வு கொண்ட

365 திங்களில்

அதிர்ஷடமெனும்

அபூர்வம் கண்டதில்லை நான்!

விதை புதைத்து

சுரை கொண்டதில்லை,

மரம் விதைத்தே

கனி உண்டிருக்கிறேன்.

பல்வேராய்ச்சியில்

பல்பு எரிந்தது போல…

பல்யுக்தி மல்யுத்த முயற்சியில்

நல் முத்துக்களாய்

கைதட்டல்கள் பெறுகிறேன்!

என் படங்களில் சூப்பர்

நட்சத்திரங்கள் நடித்ததில்லை

பிரம்மாண்ட இயக்குநர்களின்

படங்களில் நான் நடித்ததில்லை

இருப்பினும் இயங்குகிறேன்.

இருப்பை சிறப்பாய்

செதுக்கிய சமீபம் KTVI

பிறந்த நாளெனக்கு

14/4/1989(புதிய பாதை)! அடுத்த

பிறந்த நாளென்பது

‘உள்ளே வெளியே 2′

வெளியீடும் வெற்றியும்!

தயார்: புதுமை+கமர்ஷியல் கதை.

தயாரிப்பாளர் தான்

முயற்’சிக்கவே’ இல்லை!

என் இனிய பாரதி

ராசாவும் இசைய

ராசாவும் இன்றை

இளைஞ ராசாக்களும்

வருந்தி வாழ்த்துவது

“தகுதிக்கான உச்சம்

தொடவில்லை” என்பது.

எட்டாத ஸ்தூபம்

கிட்டாத ஸ்தானம்

அதற்கான ஸ்தூலம்

அறியவில்லை நானும்.

ஆனாலும் ஓடுகிறேன்

ஆறாமல் தேடுகிறேன்

அண்ணாந்து பார்க்கிறேநென்

விஸ்வரூப உழைப்பின் வியர்வை

சொட்டு சொட்டாய் நுனி

நாவை நனைக்க- உயிர்

கொள்ளும் சினிமா தாகம்

முன்பினும் மூர்க்கமாய்

மூச்சடக்கி பாய்கிறது.

வெற்றிக்கு உற்றோரே

உங்களின் வாழ்த்து

இன்றும் நாளையுமல்ல

இன்றியமையாதது என்றுமே

என்றறிவேன் நானும்

நன்றி’மறவேன்!!!

அறம் 2 படத்திலும் நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா

அறம் 2 படத்திலும் நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aramm posterநயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க கோபி நயினார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘அறம்’.

ஜிப்ரான் இசையமைத்திருந்த இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுவுள்ளது.

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவை இப்படம் பெற்றுள்தால் அறம் படக்குழுவினர் அகம் மகிழ்ந்துள்ளனர் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக 2-ம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுவுள்ளதாக தயாரிப்பாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த பாகத்திலும் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

More Articles
Follows