தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு நடித்த ‘மாநாடு’ படம் 117 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
‘மாநாடு’ மகா வசூல்..; ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தார் சிம்பு
எனவே சிம்புவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது சிம்பு நடிப்பில் ‘மஹா’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் ரீலுசுக்கு தயாராகவுள்ளன.
அண்மையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்…’ என்ற பாடல் வெளியானது.
இப்படத்தை கௌதம் மேனன் இயக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
‘வெந்து தணிந்தது காடு’ பட இசை விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்த படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திட்டமிட்டு இருந்தாராம்.
‘வெந்து தணிந்தது காடு’ சூட்டிங் ஒவர்.; சிலம்பரசன் கேரக்டர் சூப்பர்ல
சமீபத்தில் கமலின் ‘விக்ரம்’ இசை நிகழ்ச்சி இதே இடத்தில் நடைபெற்றது. அதில் சிம்புவும் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிம்புவின் தந்தை டிஆர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இந்த விழா தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
டிஆர் உடல்நலம் தேறிய பின்பு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்ப்பார்க்கலாம்.
This is the reason why the Simbu Film audio release was postponed